பொது செய்தி

இந்தியா

'இறைச்சி அரசியல்': பல மாநிலங்களில் தொடரும் தடை

Added : செப் 11, 2015 | கருத்துகள் (49)
Advertisement
meat, chicken, ban, இறைச்சி, கோழி, தடை

புதுடில்லி : நாடு முழுவதும் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்து வருகின்றன. இந்த தடைக்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகின்றன. இருப்பினும், இது பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், அரசியலாக்கப்பட்டும் வருகிறது.
மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு கடந்த மார்ச் மாதம் அம்மாநில அரசு தடை விதித்தது. இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக போராட்டமும் நடத்தப்பட்டது. இது பாஜ, அரசின் மறைமுக அடக்குமுறை; சைவ பயங்கரவாதம் எனவும் விமர்சிக்கப்பட்டது. இந்த தடையை காரணமாக வைத்து சிவசேனாவும், வழக்கம் போல் பா.ஜ.,வை விமர்சித்ததுடன், இறைச்சி தடையை அரசியலாக்கியது. இந்நிலையில், ஜெயின் மதத்தவர்களின் திருவிழா காலத்தை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு ஆட்டிறைச்சி, கோழி விற்பனைக்கும் மகாராஷ்டிர அரசு தடை விதித்துள்ளது. குஜராத்தும் தடை விதித்தது. ஏற்கனவே இருக்கும் பிரச்னையை இது மேலும் அதிகப்படுத்தி உள்ளது.
காஷ்மீர் அரசும் இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினரும், பிரிவினைவாத இயக்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் இன்று (செப்., 11) ஒருநாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சத்தீஸ்கர் அரசும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் துவங்கி விட்டதால் செப்டம்பர் 11 ம் தேதி முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும் சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது. இந்த தடை அசைவ பிரியர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. இந்த தடையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுவழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணையில் இருக்கிறது.இந்தி, சமஸ்கிருத திணிப்பை தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு சைவத்தையும் திணித்து வருவதாக அரசியல் கட்சிகள் புதிய தாக்குதலை துவக்கி உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Srinivasan - Theni,இந்தியா
12-செப்-201509:31:28 IST Report Abuse
R.Srinivasan இந்தத் தடை தேவையற்ற சிக்கலையும் மத்திய அரசுக்கு கெட்ட பெயரையும் உருவாக்கும்.....இதைவிட இறைச்சியின் கெடுதல்களை பள்ளி அளவில் விளக்கி, வரும் தலைமுறைகளை காக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-செப்-201521:02:49 IST Report Abuse
S.Baliah Seer முதலில் ஜெயின் சமூகத்தினர் பால் மற்றும் அதனுடைய ப்ரொடக்ட் எதையும் உபயோகிக்க கூடாது.இது பசுங்கன்றுக்கு செய்யும் துரோகம் ஆகும்.பிறர் உணவு விஷயங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.ஒருவன் சாரை உறிஞ்சுகிறான் வேறொருவன் அதன் சக்கையை உண்ணுகிறான்.சாரை உறிஞ்சுபவன் சக்கையை உண்ணுபவனை மட்டமாக பார்க்க உரிமையில்லை, பசுவதை அது இது என்றும்,ஆடு மாடு கோழி வெட்டக்கூடாது என்றும் தடைபோடும் சர்வாதிகார போக்கை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். மைனாரிட்டிகளுக்காக மெஜாரிட்டிகளை பகைத்து கொள்ளும் போக்கு விபரீதமான விளைவுகளை உண்டாக்கும்
Rate this:
Share this comment
abdulrajak - trichy,இந்தியா
12-செப்-201509:14:16 IST Report Abuse
abdulrajakஊட்டி: பூச்சிகளை உண்ணும் அபூர்வ வகை தாவரமான டிரோசிரா வகை தாவரங்கள் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள கோரகுந்தா பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது.பூச்சிகளை உண்ணும் அபூர்வ வகை தாவரங்களில் ஒன்றான டிரோசிரா பர்மானியா, டிரோசிரா பெல்டேட்டா, டிரோசிரா இண்டிகா போன்ற தாவரங்கள் குளிர் பிரதேசங்களான வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் அதிளவு காணப்படுகின்றன. இந்தியாவில் ஒரு சில இடங்களில் காணப்பட்ட போதிலும், நீலகிரி மாவட்டத்தில் குளிர் அதிகமாக காணப்படும் பைக்காரா, கோரகுந்தா, கிளன்மார்கன், அப்பர்பவானி, நடுவட்டம் போன்ற பகுதிகளில் வளர்கின்றன. இவைகள் குளிர் காலங்களிலேயே அதிகளவு வளரக்கூடியவை. இந்த தாவரங்கள் தற்போது ஊட்டி அருேகயுள்ள கோரகுந்தா பகுதியில் அதிகளவு வளர்ந்துள்ளன. சதுப்பு நிலங்களில், புற்களின் நடுவே அங்காங்கே சிவப்பு நிறத்தில் இந்த மலர்கள் பூத்துள்ளன. இவைகள் சிறிய பூச்சிகளை உட்கொள்கின்றன. இச்செடியில் பல இலைகள் பூக்கள் வடிவில் காணப்படுகிறது. அதன் மீது ரோமங்கள் போன்று இளஞ்சிவப்பு நிறத்தில் சிறு சிறு இலைகள் உள்ளன. இதில், பூச்சிகளை கவரக்கூடிய சுரப்பிகள் உள்ளன. பூச்சிகள் இந்த செடிகள் மீது சென்று அமரும்போது, அதனை கவர்ந்து உட்கொள்ளும் தன்மை கொண்டது. இந்த செடிகள், மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளன. இந்த இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு, ஆஸ்துமா, சளி, தொண்டை வலி, தீராத இருமல், தோல் வியாதிகள் போன்றவைகளுக்கும், அல்சர் போன்றவைகளுக்கும் பயன்படுகிறது. இதனை சில நாட்டு வைத்தியர்கள் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இது அரிய வகை செடி என்பதால், இந்த மருந்திற்கு கிராக்கி அதிகமாம்.இந்த அரிய வகை செடிகள் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கிளன்மார்கன், பைக்காரா போன்ற பகுதிகளில் அதிகளவு வளர்ந்துள்ளது. அதேபோல், குளிர் அதிகமாக காணப்படும் கோரகுந்தா மற்றும் அப்பர்பவானி பகுதியிலும் அதிகளவு வளர்ந்துள்ளன....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
11-செப்-201520:30:38 IST Report Abuse
K.Sugavanam மும்பை ஐ கோர்ட் இறைச்சிக்கு தடை விதிப்பது நடைமுறைக்கு ஒத்து வராது என இன்று சொல்லி விட்டதாக தகவல்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X