மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க உதவும் புது கருவி கண்டுபிடிப்பு: பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சாதனை

Added : செப் 14, 2015 | கருத்துகள் (6) | |
Advertisement
பரமக்குடி: பரமக்குடி அரசு பள்ளி மாணவர், மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க உதவும் வகைணயில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளார்.பரமக்குடி அருகே உள்ள கலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவர் வி.அருண்பிரகாஷ். இவர், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான
மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை  இயக்க உதவும் புது கருவி கண்டுபிடிப்பு: பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சாதனை

பரமக்குடி: பரமக்குடி அரசு பள்ளி மாணவர், மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க உதவும் வகைணயில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளார்.பரமக்குடி அருகே உள்ள கலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவர் வி.அருண்பிரகாஷ். இவர், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான (2014-15) கண்காட்சியில் சாதனை படைத்து, தேசிய கண்காட்சிக்கு தேர்வு கொள்ளவுள்ளார்.

மாணவரின் வழிகாட்டியான ஆசிரியை நிர்மலா தேவி கூறியதாவது: மாணவர் அருண் பிரகாஷ் கை, கால், கண் இல்லாத மாற்றுத்திறனாளிகள் வீட்டில் உள்ள மின்உபகரணங்களை இயக்க உதவும் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளார். இக்கருவி அகச்சிவப்பு கதிர் (ஐ.ஆர்.,) மூலம் இயங்கும் வகையில் தலையில் ஒரு "ஹெல்மெட்' மாட்டப்படும். இதிலிருந்து வரும் கதிர்கள் மின்விசிறி, மின்விளக்குகளுடன் இணைப்பு கொடுக்கப்படும்.மாற்றுத்திறனாளி ஒருவரின் தலையில் இக்கருவியை பொருத்திய பிறகு அவர், தலையை அசைத்தால் மின்சார் உபகரணம் இயங்கும். மீண்டும் அசைத்தால் நிற்கும். இதன் மூலம் அலாரம் உள்ளிட்டவைகள் கூட இயக்க முடியும். ஆபத்து காலங்களில் மற்றவர்களின் உதவியை பெற இக்கருவி உதவும். இந்த கருவியை சட்டை பட்டனில் மாட்டிக் கொள்ளும் வகையிலும் தயாரிக்க முடியும். ஆண்டுதோறும் 6 முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கான கண்காட்சியில் இம்மாணவரின் கண்டுபிடிப்பு ராமநாதபுரம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது. நாமக்கல் மாவட்டம் மல்வசமுத்திரத்தில் நடந்த மாநில போட்டியில் 32 மாவட்டத்தைச் சேர்ந்த 2400 படைப்புகள் இடம்பெற்றன. இதில் இம்மாணவர் உட்பட42 பேர்களின் படைப்புகள் தேர்வாகி உள்ளது. தொடர்ந்து அக்., 26, 27 ல் டில்லி பிரகதி மைதானத்தில் நடக்கவுள்ள தேசிய போட்டியில் இம் மாணவரின் படைப்பு இடம் பெறவுள்ளது. இதில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வர், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

Manian - Chennai,இந்தியா
15-செப்-201500:57:40 IST Report Abuse
Manian அய்யா atara - Pune,இந்தியா: அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 60-70 க்கு முன்பு படிச்சவனுகு "மேதாவிகளாக' இருந்தாங்க, அதுக்கப்புறம் இப்போ "மேல் தாவி" களா இல்லெ இருக்குறாங்க. சின்ன புள்ளே அரசு உயர்நிலை பள்ளிலியே படிச்சாலுமே இத்தனையாவது செய்திருக்குதே அது போகட்டும் அய்யா நீங்க ஸ்கூலிலெ 9 ம் வகுப்பு படிக்கும் போது இது மாதிரி ஏதாவது கண்டு புடிசீங்களா. எந்த பேப்பருலியுமே ஒங்க பேரை கணோமே. பொறாமை, தாழ்வு உணர்ச்சி, போன்ற எண்ணங்களை தள்ளுங்க. ஆக்க வழியிலெ அறிவுப் பூர்வமாக ஓங்க வாழ்கையே மாத்திக்குங்க. கோபப்படாதீங்க. இல்லாடி இங்கிட்டு மதராசிலெ கீழ்ப் பக்கம் ஆசுபத்திரிக்கில்லே போகணும். அது மட்டும் வேண்டாம் ராசா. சீச்சீ இந்த பழம் புளிக்கும் கதையே மாதிரி இல்லெ இருக்கு ஒங்க வசனம்.
Rate this:
Cancel
atara - Pune,இந்தியா
14-செப்-201522:07:04 IST Report Abuse
atara Unmatured logic, There is no invention it is just re-make or re-assembling them. In Market for Rs.450 This type of device is commercially available , Let me ask him what is the IR Bandwidth that he understand from his trial assemble session. What is the De-coder and Encryption he is using in this tem . This is another version of Ramar pillai - Bio petrol well. May be great for school teachers of this government school. When a kid walks all parents and family members motivates, When the same kid runs for job post to pillar or for water post to pillar one will know what is poverty and soft terrorism in this world.
Rate this:
Cancel
சுந்தரராஜன் - Maldives,மாலத்தீவு
14-செப்-201508:41:08 IST Report Abuse
சுந்தரராஜன் வாழ்த்துக்கள்.மென் மேலும் வளர வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X