பொது செய்தி

தமிழ்நாடு

விருதுகளை குவித்த எழுத்தாளர் கவுதம நீலாம்பரன்

Added : செப் 14, 2015 | கருத்துகள் (1)
Advertisement
கௌதம நீலாம்பரன்

சென்னை: பிரபல எழுத்தாளராக திகழ்ந்தவர் இன்று மறைந்த கவுதம நீலாம்பரன். 200-க்கும் மேற்பட்ட சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வரலாற்று நவீனங்கள், வானொலி மற்றும் தொலைக் காட்சி நாடகங்கள் என 65 நூல்களை எழுதியுள்ளவர் கெளதம நீலாம்பரன்

இவரது இயற்பெயர் க.கைலாசநாதன். இவர் பிறந்ததேதி.14-06-1948. பத்திரிகை உலகில் 40 ஆண்டுகள் அனுபவமுள்ளவர் ”தீபம்”', 'இதயம் பேசுகிறது”. "ஞான பூமி:. " ஆனந்த விகடன் : , : குங்குமம் ", "முத்தாரம்”, "குங்குமச் சிமிழ்” , ஆகிய ஏடுகளில் பணிபுரிந்த இவர், தற்பொழுது முழு நேர எழுத்துப் பணியில் கவனம் செலுத்தி வருகின்றார்.

படைப்புகள்: தினமலர் வார மலர், சிறுவர் மலர், தீபம், கணையாழி, கல்கி, கலைமகள், அமுதசுரபி, குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், இதயம் பேசிகிறது. ஞானபூமி, முத்தாரம், முல்லைச்சரம், கலாவல்லி, தினமணி கதிர், சுதேச மித்திரன், தினத்தந்தி, மலேசிய வானம்பாடி போன்ற தமிழ் ஏடுகளில் இவரது படைப்புகள் பிரசுரமாகியுள்ளன.

வரலாற்றுப் புதினங்கள் படைப்பதில் வல்லுனரான இவர் படைத்த வரலாற்று நவீனங்கள் வாசகரிடம் பரந்த செல்வாக்கைப் பெற்றன. அவை:


சேது பந்தனம், மன்னன் மாடத்து நிலவு, ஈழவேந்தன் சங்கிலி, பல்லவன் தந்த அரியணை, வெற்றித் திலகம், விஜய நந்தினி, பல்லவ மோகினி, மாசிடோனிய மாவீரன், சோழவேங்கை, கலிங்கமோகினி, வேங்கை விஜயம், வீரத்தளபதி மருதநாயகம், மோகினிக் கோட்டை, கோச்சடையன், ரணதீரன், ரஜபுதன இளவரசி, சுதந்திர வேங்கை ( பூலித்தேவன் வரலாறு ).


சிறுவர் நவீனங்கள் படைப்பதிலும் அவர் செய்த சாதனைகள் பற்பல. மாயப் பூக்கள், மாயத் தீவு, நெருப்பு மண்டபம், மாயக் கோட்டை எனப்பல.


சிறுகதைகளின் தனிச்சிறப்புக்கு ஒரு சான்று, இவர் எழுதிய நூற்றுக்கணக்கான சரித்திரச் சிறுகதைகளும், சமூகச் சிறுகதைகளும் ஒரே தொகுதியாக ஆயிரம் பக்கங்களில் "சரித்திரமும் சமூகமும்” என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.


அவரது பெருமைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக ஒரு வார இதழில் அவர் தொடர்ந்து மூன்றரை ஆண்டுகள் எழுதிய சிறப்புத் தொடர், "புத்தர் சரிதம்.” 728 பக்கங்களில் நூலாகவும் வெளிவந்து, பரிசுகளை பெற்றுள்ளது.


சமூகப் புதினங்கள் :-

காவியமாய் ஒரு காதல், ஜென்ம சக்கரம், கலா என்றொரு நிலா.

கவிதை நூல்கள் :- இதயமின்னல், அம்பரம்


நாடக நூல்கள் :- சேரன் தந்த பரிசு, மானுட தரிசனம், ஞான யுத்தம்


கட்டுரை நூல்கள் :- நலம் தரும்நற்சிந்தனைகள், இதய நதி, அருள் மலர்கள், ஞானத் தேனீ, சில ஜன்னல்கள்
இவர் பெற்ற விருதுகள் :-


.அமுத சுரபி ( ஸ்ரீராம் டிரஸ்ட் ) - சுஜாதா பிலிம்ஸ் இணந்து வழங்கிய பாரதி விருது, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய "பேராசிரியர் கல்கி இலக்கிய விருது”, .சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய "தமிழ் வாகைச் செம்மல்”. .மன்னார்குடி செங்கமலர்த் தாயார் கல்வி அறக்கட்டளை விருது,,.கவிதை உறவு: வழங்கிய தமிழ்மாமணி விருது. சைதை மகாத்மா நூலகம் வழங்கிய :சக்தி கிருஷ்ணசாமி விருது, .கவிஞர் பொன்னடியான் சழங்கிய 'இலக்கியப் பேரொளி” விருது, மற்றும் திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் வழங்கிய 'கதைக்கலைச் செம்மல் விருது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
satish chandran - chennai,இந்தியா
15-செப்-201506:26:20 IST Report Abuse
satish chandran சிறந்த எழுத்தாளர் ..அமைதியில் உறங்கட்டும் அவரின் ஆன்மா .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X