ஆட்டோ மீட்டர் விவகாரம்... ஆர்.டி.ஓ.,க்கள் பேரம்!

Added : செப் 15, 2015 | கருத்துகள் (1)
Share
Advertisement
தோழிகளுடன் 'தனி ஒருவன்' பார்ப்பதற்காக, 'ஷாப்பிங் மால்' முன்பாக தனி ஒருத்தியாக காத்துக் கொண்டிருந்தாள் மித்ரா. மூச்சிரைக்க ஓடி வந்தாள் சித்ரா.''மெதுவா...மெதுவா...படம் போட இன்னும் அரை மணி நேரமிருக்கு. ஒரு 'காபி' சாப்பிடலாம்'' என்றாள் மித்ரா.''என்னடி... ஒன்னோட பிரண்ட்ஸ் எல்லாம், கிலோ கிராம் கணக்குல கொள்ளையடிக்கிற தியேட்டருக்கு தான போவாங்க. திடீர்னு இங்க
ஆட்டோ மீட்டர் விவகாரம்... ஆர்.டி.ஓ.,க்கள் பேரம்!

தோழிகளுடன் 'தனி ஒருவன்' பார்ப்பதற்காக, 'ஷாப்பிங் மால்' முன்பாக தனி ஒருத்தியாக காத்துக் கொண்டிருந்தாள் மித்ரா. மூச்சிரைக்க ஓடி வந்தாள் சித்ரா.
''மெதுவா...மெதுவா...படம் போட இன்னும் அரை மணி நேரமிருக்கு. ஒரு 'காபி' சாப்பிடலாம்'' என்றாள் மித்ரா.
''என்னடி... ஒன்னோட பிரண்ட்ஸ் எல்லாம், கிலோ கிராம் கணக்குல கொள்ளையடிக்கிற தியேட்டருக்கு தான போவாங்க. திடீர்னு இங்க
வந்துட்டீங்க?'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா! அங்க வண்டி 'பார்க்கிங்'லயிருந்து, எல்லாத்துலயும் செம கொள்ளை அடிக்கிறாங்க. சனி, ஞாயிறுன்னா 'பார்க்கிங்' ரேட் ஜாஸ்தி. இதுக்கெல்லாம் சட்டத்துலயே இடமில்லைங்கிறாங்க'' என்றாள் மித்ரா.
''அது மட்டுமா...எல்லாமே அநியாய விலை. எதையும் பாக்கெட்ல வித்தா, எம்.ஆர்.பி.,க்கு மேல விக்க முடியாதுன்னு இப்பிடி விக்கிறாங்க. இதுல 'ஸ்நாக்ஸ்' கொண்டு போனா, புடுங்கி வச்சுக்கிறாங்க. குடிக்க தண்ணி கூட வைக்கிறதில்லை''
''கலெக்டர், ஆர்.டி.ஓ., தான் இதுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்கணும். ராஜ்குமார்னு ஒரு கலெக்டர் இருந்தப்போ, இதே தியேட்டர் காம்ப்ளக்ஸ்ல லுங்கி கட்டிட்டுப் போய், விதிமீறலைக் கண்டுபிடிச்சு, நடவடிக்கை எடுத்ததா எங்கப்பா சொல்லுவாரு''
''இன்னிக்கு இருக்கிற ஆபீசர்கள் பல பேருக்கு, தங்களுக்கு என்ன அதிகாரம் இருக்குன்னே தெரியுறதில்லை'' என்றாள் சித்ரா.
''நீ வேற...நம்ம கார்ப்பரேஷன்ல இருக்கிற லேடி ஆபீசர், தன்னோட அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன்னோட டிரைவருக்கு, உதவி கமிஷனரோட குவாட்டர்சையே குடியிருக்கக் கொடுத்திருக்காரு, தெரியுமா?'' என்றாள் மித்ரா.
''நானும் கேள்விப்பட்டேன் மித்து...கார்ப்பரேஷன் ஏ.இ., இ.இ.,க்கெல்லாம் வீடே கிடைக்கிறதில்லையாம். ஆனா, பெரிய ஆபீசர்கள்ட்ட ஓ.ஏ., வேலை பாக்குற துப்புரவுப் பணியாளர்களுக்கு, இன்ஜினியர்களுக்கான வீடுகளைக் கொடுத்துர்றாங்களாம். சீக்கிரமே சங்கம் மூலமா, பிரச்னைய கிளப்பப்போறாங்களாம்''
''கார்ப்பரேஷன்ல நடக்க வேண்டிய வேலை எதுவும் நடக்குறதில்லை. டைகர் பிஸ்கட் இன்ஜினியருக்குப் பதிலா, டவுன் பஞ்சாயத்து டிபார்ட்மென்ட்லயிருந்து ராஜேந்திரன்னு புதுசா ஒரு இன்ஜினியர் வரப்போறாரு. அவரு வந்த பிறகாவது, வேகமா வேலை நடக்குதான்னு பார்ப்போம்''
''வேறென்ன வேலை நடக்கலைங்கிற?''
''கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான 31 நகர் நல மையங்கள்ல 13 டாக்டர், 69 நர்ஸ்க போஸ்ட்டிங் 'வேகன்ட்'டா இருக்கு. ஒவ்வொரு டாக்டரும், ரெண்டு இடத்தைப் பார்க்க வேண்டியிருக்காம். ஒரு டாக்டர், கார்ப்பரேஷன் கமிஷனரா இருக்கிறப்பவே இந்த நிலைமை!''
''ஆனா, தமிழ்நாட்டுலயே முதல் 'வை-பை' சிட்டிங்கிற பேரு, நமக்குக் கிடைக்கப்போகுதே. அதுக்கு, கார்ப்பரேஷன் தான காரணம்'' என்றாள் சித்ரா.
''அதென்னவோ உண்மை தான். ரேஸ்கோர்ஸ், கார்ப்பரேஷன் மெயின் ஆபீஸ்ல சூப்பரா 'வை-பை' எடுக்குது. அடுத்து அவிநாசி ரோடு, ஆர்.எஸ்.புரம், கணபதி, எல்லா பஸ் ஸ்டாண்ட்கள்லயும் இதைப் பண்ணிட்டு, முதல்வரை வச்சு, இதைத் திறக்கப்போறாங்களாம்'' என்றாள் மித்ரா.
''நல்ல விஷயம் தான் மித்து. ஆனா, ரேஸ்கோர்ஸ்ல பகல்ல, பொண்ணுங்களும், பசங்களும் பெரிய கூட்டமா ராப்பகலா இதே வேளையாத் திரியுறாங்க. நடுராத்திரியில பசங்க, 'லேப்-டாப்'பை வச்சிக்கிட்டு, எதையோ பாத்துட்டு இருக்கிறதைப் பார்த்தா, கொஞ்சம் பயமா இருக்கு'' என்றாள் சித்ரா.
''இப்போதைக்கு எந்த 'வெப்சைட்'டையும் தடுக்க முடியாதுக்கா. ஆனா, எந்த நம்பர்ல இருந்து, என்ன மாதிரியான 'வெப்சைட்'களை பாக்குறாங்கன்னு 'ரிக்கார்டு' ஆகுது. நல்ல விஷயத்தை நல்லதுக்கு பயன்படுத்துனா நல்லது'' என்றாள் மித்ரா.
''மித்து...நம்ம மேயர், டாக்டர் பட்டம் வாங்கிட்டாருல்ல...சீக்கிரமே, 'அம்மா'வைப் பாத்து, அதைக்காமிச்சு, ஆசி வாங்க முயற்சி பண்றாராம். சான்ஸ் கிடைக்குமான்னு தான் தெரியலை'' என்றாள் சித்ரா.
''ஏன்க்கா...அவரோட முயற்சியில தான், இப்போ சத்தி ரோடுக்கு ஓரளவுக்கு விமோட்சனம் கிடைக்குதுங்கிறாங்க. என்.எச்., ரோட்டுல, இந்தளவுக்கு கார்ப்பரேஷன் பண்றதே பெரிய விஷயம் தான். அதுல, டி.பி.ஓ.,வோட 'டீம் ஒர்க்' நல்லாருக்குதுன்னு பேசிக்கிறாங்க'' என்றாள் மித்ரா.
பேசிக்கொண்டே இருவரும் 'காபி ஷாப்'க்கு வந்து, காபிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு, பேச்சைத்தொடர்ந்தனர்.
''மித்து! நீ 'டீம் ஒர்க்'ன்னு சொன்னதும், எனக்கு டிஎம்கேல இருந்து, தேர்தல் அறிக்கைக்கு கருத்துக் கேட்க வந்த 'டீம்' ஞாபகம் வந்துச்சு. அன்னிக்கு கனிமொழி ஏன் வந்தவுடனே, திரும்பப் போயிட்டாங்க?''
''தொண்டை வலின்னு சொன்னாங்க. கூடப்போன மீனா லோகுவுக்கும் கூட, உண்மைக்காரணம் தெரியலையாம். அந்த கூட்டமே, இண்டஸ்ட்ரிக்காரங்க, தனி நபர்களைப் பார்த்து கேக்குறதுக்காகத்தான் ஏற்பாடு பண்ணுனது. ஆனா, எந்த இண்டஸ்ட்ரிக்காரங்களும் வந்து பார்த்ததாத் தெரியலை''
''வந்து பார்த்து, ஏதாவது உளவுத்துறை மூலமா, மேல விஷயம் போச்சுன்னா, எதுக்கு சிக்கல்னு பயந்திருப்பாங்க. கடைசியில கட்சிக்காரங்க சொன்னதைத்தான் கேட்டு எழுதிட்டுப் போனாங்களாம்'' என்றாள் சித்ரா.
''அது சரி! உலக முதலீட்டாளர்கள் மாநாடு பத்தி, நம்ம ஊர்ல இருக்கிற இண்டஸ்ட்ரிகாரங்க என்ன தான்க்கா பேசிக்கிறாங்க?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் மித்ரா.
''யாரு தைரியமா வெளியில பேசுறாங்க. ஏதாவது 'கமென்ட்' அடிச்சு, ஒண்ணுக்கு ரெண்டா வெளிய பரவுனா, கதை கந்தல்னு வாயையே திறக்க மாட்டேங்கிறாங்க. ஆனா, இந்த மாநாட்டால 'கொங்கு பெல்ட்'க்கு எந்த பிரயோஜனமுமில்லைங்கிறது தான் அவுங்க பேசுற ரகசியமாத் தெரியுது'' என்றாள் சித்ரா.
காபி வந்ததும், மெதுவாய் ருசித்தபடி கேட்டாள் சித்ரா.
''மித்து! அன்னிக்கு ஐ.ஏ.எஸ்., ரிசார்ட்ஸ்ன்னு சொன்னியே. அதுல ஏதாவது 'டெவலப்மென்ட்' இருக்கா''
''ஆமாக்கா...அந்த ரிட்டயர்டு ஆபீசருக்கு 'சப்போர்ட்'டா, இப்போ 'மாஸ்' ஆன பொறுப்புல இருக்கிற ஒரு 'ரெட்டி காரு' தான், இங்க இருக்கிற ஐ.ஏ.எஸ்., ஆபீசர்கள்ட்ட எல்லாம் பேசிருக்காரு''
''ஆனா, நம்ம டிஸ்ட்ரிக்ட் மேடம், இது சம்மந்தமா யாருக்கும் எந்த உத்தரவுமே தரலைங்கிறாங்க. அவுங்க பேரைச் சொல்லிட்டு, லேடி தாசில்தாரே நேரடியா களத்துல இறங்கி, ஏதேதோ பண்ணிருக்காங்க. இப்ப தான், இந்த விஷயமெல்லாம் பெரிய மேடத்துக்குத் தெரிய வந்துச்சாம்''
''அவுங்களுக்கு என்ன 'கமிட்மென்ட்'டோ தெரியலை. மேல இருந்து உத்தரவு வந்தா, கீழ இருக்கிற ஆபீசருங்க, ஒண்ணு மெரட்டுறாங்க. இல்லேன்னா பேரம் பேசுறாங்க'' என்றாள் மித்ரா.
''ஏன் மித்து...வேற எதுக்காவது பேரம் நடக்குதா?'' என்றாள் சித்ரா.
''ஆட்டோ மீட்டர் கேசு போட்ட, கன்ஸ்யூமர் அமைப்பு நிர்வாகிட்ட, கோயம்புத்தூர்ல இருக்கிற முக்கியமான டிரான்ஸ்போர்ட் ஆபீசர் தலைமையில, அஞ்சாறு ஆர்.டி.ஓ.,க்கள் போய் பேசிருக்காங்க''
''என்ன பேசுனாங்களாம்?''
''அண்ணனுக்கு என்ன வேணும்னு கேளுங்கன்னு, அந்த பெரிய ஆபீசர் சொல்லிருக்காரு. அதுக்கு ஆர்.டி.ஓ., ஒருத்தரு, 'மறுபடியும் கோர்ட்டுக்குப் போயிராதீங்க. என்ன வேணும்னு சொல்லுங்க. செஞ்சிருவோம்'னு சொல்லிருக்காரு. கடைசியில அவரு மடங்குனாரா, மடங்கலையான்னு தெரியலை'' என்றாள் மித்ரா.
''மறுபடியும் அவர் கோர்ட்டுக்குப் போறாரா, இல்லையாங்கிறதுலயே அது தெரிஞ்சிருமே'' என்றாள் சித்ரா.
''அதை விடு. சிட்டிக்கு நடுவுல இருக்கிற ஆர்.டி.ஓ., வாகன சோதனைங்கிற பேர்ல, தினமும் நாலு டிரைவிங் ஸ்கூல்காரங்களைக் கூப்பிட்டு, ஆட்டோக்களை சோதனை போடுறது, போட்டோ ஒட்டுறதுன்னு பெரிய இம்சையக் கொடுக்குறாராமே'' என்றாள் மித்ரா.
''அவரு, புரோக்கர்கள்ட்ட பணத்தையும் வாங்கிக்கிட்டு, லைசென்ஸ், எப்.சி., கொடுக்கிறதுக்கு ஏகப்பட்ட கெடுபிடியும் பண்றாராம்'' என்றாள் சித்ரா.
''இதெல்லாம் பரவாயில்லைக்கா. சிட்டிக்கு புதுசா வந்திருக்கிற இன்ஜினியரு, 40 லட்ச ரூபா கொடுத்துட்டு வந்திருக்கேன்னு, எச்.டி., லைன்காரங்ககிட்ட எல்லாம், செம்மயா வசூலைப் போடுறாராம்''
''மித்து! நம்ம சிட்டிக்குள்ள இருக்கிற ஒரு கோவில்ல ரெண்டு ஐம்பொன் சிலை, 108 கலசத்துல 100 கலசங்களையும் காணோம்'' என்றாள் சித்ரா.
''இந்த அநியாயம் எந்தக்கோவில்ல நடக்குதுக்கா?'' என்றாள் மித்ரா.
''நம்மூர்ல தெப்பக்குளம் இருக்கிற ஒரேயொரு கோவில்ல தான். சோழர் காலத்துக் கோவிலு. திருப்பணி, கும்பாபிஷேகம் எதுவுமே நடக்கலை. அந்த சிலை எல்லாம் வெளிநாட்டுக்குப் போயிருக்கும்னு சந்தேகப்படுறாங்க'' என்றாள் சித்ரா.
''அக்கா! மருதமலை ரோட்டுல, பெரிய காம்பவுண்டுக்கு வெளியில பூ விக்கிற அம்மா, ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. மூணு வருஷமா, தினமும் ரெண்டு முழம் பூ, ஓசிக்கு வாங்குனவரு, ரிட்டயர்டு ஆகப்போறாருல்ல...அதான்!''
''ஓ...இந்த வாரம் அவரு, ரிட்டயர்டு ஆகுறாருல்ல...அதுக்குள்ள ஏதாவது நடக்குமா மித்து'' என்று சித்ரா கேட்கும்போதே, மித்ராவின் அலைபேசியில் தோழியின் அழைப்பு வர, இருவரும் 'பில்'லுக்குப் பணம் வைத்து விட்டு, தியேட்டரை நோக்கி ஓடினார்கள்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayarajan Vellaichamy - Chennai,இந்தியா
15-செப்-201516:29:30 IST Report Abuse
Jayarajan Vellaichamy கண்ணுக்கு தெரிஞ்சு இப்படி நாள்தோறும் நடக்கிற அநியாயங்களை அதிகாரிகளோ மேலிடமோ கண்டுக்க மாட்டார்கள்..நாம்தான் நேரடியாக போராட வேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X