"லேடி' அதிகாரியின் "மூவ்" ஊழியர்கள் "திக்... திக்...'

Added : செப் 15, 2015
Share
Advertisement
சிறு நெல்லி, சப்போட்டா மரக்கன்றுகளுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.""என்னக்கா, நீங்களும் மரக்கன்று நட ஆரம்பிச்சிட்டீங்களா,'' என, கேட்டாள் மித்ரா.""ஆமாப்பா, இன்னும் ரெண்டு வருஷத்துல, நம்மூர் பசுமையாகிடும். எல்லா தரப்பிலும், மரக்கன்று நட ஆரம்பிச்சிட்டாங்க. பெரிய பெரிய தொழில் நிறுவனத்தினர், தன்னார்வ தொண்டு அமைப்புகள், ரோட்டரி, லயன்ஸ் கிளப்புகள் என அனைத்து
"லேடி' அதிகாரியின் "மூவ்" ஊழியர்கள் "திக்... திக்...'

சிறு நெல்லி, சப்போட்டா மரக்கன்றுகளுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.
""என்னக்கா, நீங்களும் மரக்கன்று நட ஆரம்பிச்சிட்டீங்களா,'' என, கேட்டாள் மித்ரா.
""ஆமாப்பா, இன்னும் ரெண்டு வருஷத்துல, நம்மூர் பசுமையாகிடும். எல்லா தரப்பிலும், மரக்கன்று நட ஆரம்பிச்சிட்டாங்க. பெரிய பெரிய தொழில் நிறுவனத்தினர், தன்னார்வ தொண்டு அமைப்புகள், ரோட்டரி, லயன்ஸ் கிளப்புகள் என அனைத்து தரப்பினரும், பசுமை வளையத்துக்குள் வர ஆரம்பிச்சிட்டாங்க. நல்ல ஆரோக்கியமான சூழலா அமைஞ்சிருக்கு. கலாம் கனவை நனவாக்குற விதத்துல, ஒரு லட்சம் மரக்கன்று நடனும்னு தீவிரமா இருக்காங்க. அதான், நானும் ரெண்டு கன்று வாங்கிட்டு வந்தேன்,'' என்றாள் சித்ரா.
""அமாவாசை அன்னைக்கு கோவிலுக்கு போயிருந்தேன். உண்டியல் காணிக்கையில், யாரோ "கை' வச்சிட்டாங்களாமே,'' என மித்ரா, பேச்சை நிறுத்தினாள்.
""அதுவா, கோவில் நிர்வாகத்துல ஏகப்பட்ட குழப்பமும், ஊழியர்களுக்குள் "பாலிடிக்ஸ்'சும் இருக்கு. அரசியல்வாதிகளும் மூக்கை நுழைக்கிறாங்க. சமீபத்தில் உண்டியல் திறந்து காணிக்கையை எண்ணியபோது, ரெண்டு பணக்கட்டை "லவட்டி'ட்டாங்கன்னு, குற்றச்சாட்டு எழுந்திருக்கு. மூன்று ஊழியர்கள் மீது சந்தேக கண் விழுந்திருக்கு. இருந்தாலும், ஆதாரம் இல்லையேன்னு, அதிகாரி தரப்பு முழிக்குது. இருந்தாலும், புதுசா வந்திருக்கிற "லேடி' அதிகாரி, கோவில் நிர்வாகத்தை எப்படி வழி நடத்திக் கொண்டு போகப் போறாங்கங்கறதை, ஊழியர்கள் தரப்புல உன்னிப்பா கவனிச்சிட்டு இருக்காங்க,'' என, சித்ரா சொல்லி முடிப்பதற்குள், ""கோவில்ல தெனமும் பூஜை நடத்துவாங்க; அன்னதானம் போடுவாங்க. அவ்ளோ தானே? இதுல என்ன சிக்கல் இருக்கு,'' என மித்ரா, விவரம் புரியாமல் öŒான்னாள்.
""நம்மூர்ல பெருமாள் கோவிலுக்கும், ஈஸ்வரன் கோவிலுக்கும் ஒரே நிர்வாகம்தான். சைவமும், வைணவமும் இணைந்த கோவில். ரெண்டு கோவில் தேரோட்டமும் அடுத்தடுத்த நாள் நடக்கும். பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை வெகுவிமரிசையா நடத்திட்டாங்க. நன்கொடையாளர்கள் மூலமா, ஈஸ்வரன் கோவில்ல திருப்பணி நடந்துக்கிட்டு இருக்கு; வளைஞ்சு நெளிஞ்சு போற அதிகாரியா இருக்கனும்னு, புதுசா நியமிச்சிருக்காங்க. இவர், என்ன செய்யப் போறார்ன்னு பார்ப்போம்,'' என்றாள் சித்ரா.
""இப்பெல்லாம், எது நடந்தாலும், "வாட்ஸ்அப்'பில் தகவல் பரவிடுது,'' என மித்ரா சொல்ல, ""ஆமா, நானும் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். சேலம் ரயில்வே கோட்டத்தில், அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை, எல்லோரும் இணைஞ்சு, "வாட்ஸ்அப்' குரூப் ஏற்படுத்தியிருக்காங்க; திருப்பூர்காரங்களும் இணைஞ்சிருக்காங்க. ரயில் தாமதம்; தடம் புரண்டது; பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியம் முதல், அனைத்து விதமான தகவல்களையும் பரிமாறிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
""இதுமாதிரி, நவீன தொழில்நுட்பங்களை நல்லதுக்கு பயன்படுத்தினால், நாட்டுக்கும், மக்களுக்கும் பிரயோஜனம்தானே,'' என பாராட்டிய மித்ரா, ""பறிமுதல் செஞ்ச பொருளெல்லாம் காணாம போயிடுச்சாமே,'' என, அங்கலாய்த்தாள்.
""ஆமாப்பா, முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் "டிபாசிட்' வசூலிச்சு, ஈமு கோழி பிசினஸ் பார்த்த நிறுவனத்தை போலீஸ்காரங்க "சீல்' வச்சாங்க. பறிமுதல் செஞ்ச பொருட்களை, ஒரு கிடங்கில் வச்சிருந்தாங்க. ஏலம் விடுறதுக்காக, கிடங்கை திறந்து பார்த்தா, வெறும் காலி அட்டை பெட்டிதான் இருந்துச்சு. ரூ.2.7 கோடி மதிப்புள்ள பொருட்களை காணலை. கோர்ட் நடவடிக்கைக்கு ஆளாகிடுவோமோன்னு, வருவாய்த்துறையினர் ரொம்பவே பயந்து போயிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""அசால்டா இருந்தா, தண்டனையை அனுபவிச்சுத்தானே ஆகனும்,'' என, மித்ரா சாபமிட, ""அரசு அதிகாரிகள் தரப்புல ஒத்தாசை இல்லாம, அவ்ளோ பொருட்களை எடுத்துட்டு போயிருக்க முடியாது. அதிரடி நடவடிக்கை எடுக்காம, இன்னமும் மவுனமா இருந்தாங்கன்னா, நெலமை ரொம்ப மோசமாயிடும். ஏற்கனவே, ரேஷன் அரிசி மூட்டை மாயமான விவகாரத்துல, இன்னும் உண்மையை கண்டுபிடிக்கலை. இப்படியே போனா, "திருட்டு கும்பல்' ஊரையே காலி பண்ணிடும் போலிருக்கு,'' என, வருத்தப்பட்டாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X