ஆதரவற்ற பிணங்கள் அடக்கம் செய்து பைக் மெக்கானிக்குகளின் மனிதாபிமானம்

Added : செப் 20, 2015 | கருத்துகள் (5)
Advertisement
சேலம்:ஆதரவற்ற பிணங்களை முறைப்படி அடக்கம் செய்து, மெக்கானிக்குகள் மனிதாபிமானத்தை உயிர்ப்பித்து வருகின்றனர். சேலம், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ஒளி அறக்கட்டளை என்ற அமைப்பு உள்ளது. ஆதரவற்ற நிலையில் மரணம் அடைவோரின் உடல்களை போலீஸார் உதவியோடு, நல்லடக்கம் செய்வதுதான் இந்த அமைப்பின் பணி. ஆறு ஆண்டுகளாக, இந்த சேவையில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு, கடந்த, 2009ல்,
 ஆதரவற்ற பிணங்கள் அடக்கம் செய்து பைக் மெக்கானிக்குகளின் மனிதாபிமானம்

சேலம்:ஆதரவற்ற பிணங்களை முறைப்படி அடக்கம் செய்து, மெக்கானிக்குகள் மனிதாபிமானத்தை உயிர்ப்பித்து வருகின்றனர். சேலம், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ஒளி அறக்கட்டளை என்ற அமைப்பு உள்ளது. ஆதரவற்ற நிலையில் மரணம் அடைவோரின் உடல்களை போலீஸார் உதவியோடு, நல்லடக்கம் செய்வதுதான் இந்த அமைப்பின் பணி. ஆறு ஆண்டுகளாக, இந்த சேவையில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

இந்த அமைப்பு, கடந்த, 2009ல், துவக்கப்பட்டது. ஆறு பேர் கொண்ட மெக்கானிக் குழு இதை துவக்கியது. இதுவரை, 1,600க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்துள்ளனர். இதற்கு யாரிடமும் இந்த அமைப்பினர் கையேந்த வில்லை. தங்கள் சொந்த செலவாக ஏற்றுக்கொள்கின்றனர்.

அமைப்பை துவங்கிய காலத்தில், பிணங்களை தகனம் செய்ய மிகுந்த சிரமப்பட்டுள்ளனர். உடல்களை எடுத்து செல்ல வாடகை வண்டிகளையே பயன்படுத்தியுள்ளனர்.இந்த தொடர் சேவையை பாராட்டி கடந்த, 2011 ல், நாமக்கல் பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் சரவணக்குமார், ஆம்புலன்ஸ் ஒன்றை ஒளி அறக்கட்டளைக்கு இலவசமாக வழங்கினார்.
அதை பயன்படுத்தி, இப்போது உடல்களை எடுத்துச்சென்று அடக்கம் செய்கின்றனர்.
இந்த அமைப்பை சேர்ந்த காமராஜ் கூறியதாவது:

பழனிசாமி, ஸ்ரீதர், பெருமாள், புஷ்பநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து, அமைப்பை துவக்கினோம். அறக்கட்டளையின் சேவையை பார்த்து, டிரக்கர்ஸ் கிளப், அமுதசுரபி உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வந்தன. அறக்கட்டளைக்கு தேவையான பணத்தை வங்கி சேமிப்பு கணக்கில் வைத்துள்ளோம். நாங்கள் அனைவரும் மெக்கானிக் தொழில் செய்து வருகிறோம். ஆதரவற்ற நிலையில் உடல் கிடந்தால், எங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டு, அடக்கம் செய்யும் பணிகளை துவக்குவோம்.

எங்கள் சேவையை பார்த்து பல இளைஞர்கள் அமைப்பில் சேர்ந்துள்ளனர். இந்த புனித சேவையை செய்வதற்கு குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளிப்பதால், சிறப்பாக செயல்பட முடிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
21-செப்-201508:20:03 IST Report Abuse
Rangiem N Annamalai நெஞ்சார்ந்த நன்றிகள். நீங்கள் கோவில் செல்ல வேண்டியது இல்லை. இப்போது செய்யும் செயலால் நீங்களும் உங்கள் வம்சம் முழுவதும் நன்றாக இருக்கும் .
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
20-செப்-201523:35:12 IST Report Abuse
K.Sugavanam உங்களை இறைவன் மேலும் நல்ல நிலைக்கு கொண்டு செல்வார்..தன்னலமற்ற தியாகம்..மகத்தான பணி..
Rate this:
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
20-செப்-201519:59:31 IST Report Abuse
kundalakesi இதற்கு என் ஜீஒக்கள் வராது. பத்திரிக்கைகளும் பகிராது. அதுதான் தொண்டு. வாழ்க நின் மனித மரியாதைப் பணி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X