காதலியை நண்பர்களுக்குவிருந்தாக்கிய காதலன் கைது

Added : செப் 21, 2015 | கருத்துகள் (9)
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி அருகே, 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்; மூவரை தேடி வருகின்றனர்.புதுச்சேரி கடற்கரை சாலையில், கடந்த, 11ம் தேதி நடந்து சென்ற, 16 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். அவ்வழியாக வந்தவர்கள், சிறுமியை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்தபோது, எட்டு மாத கர்ப்பமாக இருந்ததை அறிந்து, அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக, சைல்டுலைன் மூலம், குழந்தை நல குழும சேர்மன் டாக்டர் வித்யா ராம்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சிறுமியிடம், குழந்தை நல குழும அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அப்போது, தனக்கு நடந்த கொடுமை குறித்து, சிறுமி கூறியதாவது:எனது பெற்றோர் இறந்து விட்டனர். சகோதரர் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தேன். பின், ஜவுளி கடையில் வேலை செய்தபோது, ராஜ்குமார், 26, அறிமுகம் ஆனார். நட்புரீதியாக பழகிய என்னை, காதலிப்பதாக கூறினார். ஒரு நாள் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள தோப்பினை சுற்றிக்காட்டி, இளநீர் குடிக்க கொடுத்தார். அதை குடித்ததும் மயக்கமாகி விட்டேன்.
அப்போது, ராஜ்குமாரும், அவரது நண்பர்களும் என்னை பலாத்காரம் செய்து சீரழித்தனர். மயக்கம் தெளிந்து கதறி அழுத என்னிடம், ௧,௦௦௦ ரூபாயை திணித்து விட்டு சென்று விட்டனர். என் எதிர்காலமே சீரழிந்து விட்டது. ராஜ்குமார், அவர்களது நண்பர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்.இவ்வாறு சிறுமி, கண்ணீர் மல்க கூறி உள்ளார்.சிறுமியை சீரழித்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ராஜ்குமாரின் நண்பர்கள் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.காதலிப்பதாக கூறி, 16 வயது சிறுமியை, நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம், புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
அரசு பள்ளியில் அதிர்ச்சி:புதுக்குப்பம் அரசு துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை, அங்கு வேலை செய்யும் துப்புரவு ஊழியர் ஒருவர், கடந்த, 9ம் தேதி சாக்லெட் கொடுத்து அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்ததோடு, மற்ற சிறுமியரையும் அழைத்து வருமாறு கூறி உள்ளார்.இது குறித்து, சிறுமி கூறியபோது, ஆசிரியை ஒருவர் அலட்சியப்படுத்தியுள்ளார். பின், சைல்டு லைன் மூலமாக, குழந்தை நல குழும அதிகாரி கொடுத்த புகாரை அடுத்து, துப்புரவு ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சிறுமியை அலட்சியம் செய்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க, கல்வித் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா
21-செப்-201520:05:57 IST Report Abuse
Madurai K.சிவகுமார் இந்த மாதிரியான திட்டமிட்ட குற்ற செயல்களுக்கு சிறை தண்டனையோடு ஒவ்வொரு மாதமும் 10 சவுக்கு அடி பொது மக்கள் முன்னிலையில் கொடுக்க வேண்டும். இது கொஞ்சம் ஓவராக தான் தெரியும். சும்மா உட்காரவைத்து சோறு போட்டால் தண்டனையின் வலி தெரியாது. இந்த அடியின் மூலமாக வலி என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். அப்போதுதாவது மற்றவர்கள் மனதில் தோலை உரித்து தொங்க விட்டுவிடுவார்கள் என்ற பயம் கொஞ்சமாவது இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
21-செப்-201512:32:24 IST Report Abuse
Mohammed Abdul Kadar திருமணம் ஆகாமல் கற்பழிப்பு தவறில் ஈடு பட்டால் அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் ,மறுத்தால் 10 வருடம் சிறை ,அந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் அவன் திருமணம் செய்ய அனுமதிக்க கூடாது
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-செப்-201512:10:50 IST Report Abuse
Nallavan Nallavan அந்தச் சிறுமிக்கு பெற்றோர் இல்லாததே ஒரு முக்கியக் காரணம் என்பதே எனது கருத்து .... எந்த உறவினரும் பெற்றோருக்கு ஈடாக மாட்டார்கள் ..... வழிகாட்ட, அன்பு செலுத்த பெற்றோர் இல்லாததால் அந்த மிருகத்தை நம்பியிருக்கிறாள் .... குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தூக்கிலிடவேண்டும் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X