அ.தி.மு.க., கவுன்சிலருக்கு 4 மனைவியர்: முதல் மனைவி போலீசில் பகீர் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கவுன்சிலருக்கு 4 மனைவியர்: முதல் மனைவி போலீசில் பகீர் புகார்

Added : செப் 23, 2015

சேலம்: சேலம் மாநகராட்சி, 20வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர், நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு, தன்னை மிரட்டுவதாக, முதல் மனைவி சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.
சேலம், 20வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ரவீந்திரன். இவரின் முதல் மனைவி சுதா, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணமாகி, 23 ஆண்டாகிறது. எனது கணவர் ரவீந்திரன், 20வது வார்டு கவுன்சிலராகவும், அ.தி.மு.க., செயலாளராகவும் உள்ளார். ஒவ்வொரு முறையும், வெவ்வேறு திருமணங்கள் என்ற வகையில், போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் புவனேஸ்வரி, பெரியார் நகர் ராமநாதன் மகள் புவனேஸ்வரி, பழைய சூரமங்கலம் பாலு மனைவி சந்தியா, அதே பகுதியை சேர்ந்த வாசு மகள் சத்யா என, நான்கு பெண்களை திருமணம் செய்துள்ளார். அம்மா உணவகத்தில், இவர்கள் வேலை செய்த நிலையில், அவர்களை திருமணம் செய்து கொண்டார். ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டால், இந்த பதவியில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பர். நீ விருப்பம் இருந்தால் இரு; இல்லையெனில் விவாகரத்து வாங்கி கொண்டு போ என்று சொல்கிறார். இந்த பிரச்னையில் கோர்ட்டுக்கு சென்று விட்ட நிலையிலும், அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் கவுன்சிலர்; எனக்கு மந்திரி, மாவட்டம், பகுதி என்று எல்லோரும் உதவி செய்வார்கள். உனக்கு யார் வருவார்; பதவி இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், இந்த பிரச்னையில் தலையிட்டு, கவுன்சிலர் பதவியையும், வார்டு செயலாளர் பதவியையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X