பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பெற்ற போலீசாரை கோவில் பாதுகாப்பு பணியில் அமர்த்த உத்தரவு

Added : செப் 23, 2015
Advertisement

சேலம்: சேலத்தில், பிரசித்தி பெற்ற மூன்று கோவில்களில், ஓய்வு பெற்ற போலீசாரை பணியில் அமர்த்தவும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாநகரில், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில், அழகிரிநாத ஸ்வாமி கோவில், சுகவனேஸ்வரர் கோவில் ஆகிய மூன்று கோவில்களிலும், பாதுகாப்பு வசதியை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் உத்தரவின்பேரில், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மணிவண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், கோவில் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பக்தர்கள் அதிகம் வந்து செல்லும், மூன்று கோவில்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். கோவில் உள்ளேயும், வெளியேயும், 'சிசிடிவி' கேமரா, சுழலும் வகையிலான கேமரா பொருத்தப்பட வேண்டும். பக்தர்களை சோதித்து அனுப்பும் மெட்டல் டிடெக்டர் இயந்திரம் அமைக்க வேண்டும். பாதுகாப்பு பணியில், முன்னாள் ராணுவத்தினரையோ, ஓய்வு பெற்ற போலீசாரையோ தற்காலிக அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். கேமராவில் பதிவாவதை, 90 நாட்களுக்கு அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும், என, மூன்று கோவில் அதிகாரிகளிடமும், போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X