மதுரை:''புழல் சிறைக்குள் பிலால் மாலிக், 'போலீஸ்' பக்ருதீன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுஉள்ளது,'' என பிலால் மாலிக் சகோதரர் கஜினி கூறினார்.புழல் சிறை கலவரத்தை தொடர்ந்து 'பன்னா' இஸ்மாயில் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.
மதுரையில் பிலால் மாலிக் சகோதரர் கஜினி கூறியதாவது:புழல் சிறையில் பிரியாணி கேட்டு கலவரத்தை ஏற்படுத்தியதாக போலீசார் கூறுவது ஏற்புடையதல்ல. தனித்தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மோதிக் கொள்ள வாய்ப்பு இல்லை. தகராறு ஏற்பட்டிருந்தால் பிலால்மாலிக், 'போலீஸ்' பக்ருதீனுக்கும் காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் போலீசாருக்கு மட்டும் காயம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். கைதிகளுக்குள் மோதலை ஏற்படுத்தி போலி 'என்கவுன்டர்' மூலம் பிலால் மாலிக், பக்ருதீனை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக சந்தேகிக்கிறோம்.
அவர்களை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும். அதற்கு முன் இருவரும் நலமுடன் இருப்பது குறித்து உறுதி செய்ய, பத்திரிகை மூலம் அறிவிக்க வேண்டும் என்றார்.
பிலால் மாலிக் தாயார் மும்தாஜ், மனைவி அசீனாபானு, பக்ருதீன் தாயார் சைய்யதுமீரான் உடன் இருந்தனர்.மதுரை சிறையில் 'பன்னா': பன்னா இஸ்மாயில் நேற்று மதியம், மதுரை சிறைக்கு கொண்டு வரப்பட்டார்.அவர் ரிமாண்ட் கைதிகள் உள்ள 2 வது 'செல்'லில் அடைக்கப்பட்டார். அவரை சிறை காவலர்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE