மேட்டூர்: டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலியானது, கொளத்தூர் சுற்றுப்பகுதி மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டூர் அடுத்த கொளத்தூர் சுற்றுப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, சுகாதார துறையினர், தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எனினும், டெங்கு காய்ச்சால் பாதித்த கொளத்தூர், பாலமலை ஊராட்சி செயலர் அர்ஜூனன் மகள் அனுசியா, நேற்று முன்தினம் பலியானார். கொளத்தூர், சின்னமேட்டூர் கிராமம், காளியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் ஈஸ்வரன், இவரது மனைவி வள்ளி. இவர்களது மகன் நடராஜ், 4. சிறுவன் அருகிலுள்ள அங்கன்வாடிக்கு சென்று வந்தான். கடந்த சில நாட்களாக நடராஜ்க்கு காய்ச்சல் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடராஜ், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் மரணத்துக்கு டெங்கு காய்ச்சலே காரணம் என, பெற்றோர் தெரிவித்தனர். கொளத்தூர் பகுதியில் கடந்த இரு நாளில் டெங்கு காய்ச்சலுக்கு இரு குழந்தைகள் பலியாகியுள்ளது சுற்றுப்பகுதி பொதுமக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE