பொது செய்தி

தமிழ்நாடு

ஆடு வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி

Added : செப் 28, 2015
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், அக்டோபர் 1ம் தேதி, பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி நடக்கிறது.இது குறித்து, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கூறியதாவது: வேளாண் சார்ந்த உப தொழிலில், வெள்ளாடு வளர்ப்பு, குறைந்த முதலீட்டில், நிறைய லாபம் தரும் தொழிலாக உள்ளது. விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள்

பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், அக்டோபர் 1ம் தேதி, பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி நடக்கிறது.
இது குறித்து, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கூறியதாவது: வேளாண் சார்ந்த உப தொழிலில், வெள்ளாடு வளர்ப்பு, குறைந்த முதலீட்டில், நிறைய லாபம் தரும் தொழிலாக உள்ளது. விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள் பயன் பெறும் வகையில், அக்டோபர் , 1ம் தேதி, காலை, 9.30 முதல் மாலை, 4 மணி வரையில், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், பரண் மேல் ஆடு வளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், 30ம் தேதிக்குள் தங்கள் பெயரை, 0427-2422550 எண்ணில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X