பத்து நாள் லீவு... பதவிக்கு கொடுத்த காவு!| Dinamalar

பத்து நாள் லீவு... பதவிக்கு கொடுத்த காவு!

Added : செப் 29, 2015
Share
ரேஸ்கோர்ஸ் நடைபாதை இருக்கையில் உட்கார்ந்து, மாநகராட்சி 'வை-ஃபை' உதவியுடன், தனது ஸ்மார்ட் போனில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள் மித்ரா. சொன்னது போலவே, சரியான நேரத்துக்கு வந்தாள் சித்ரா.''மித்து...நீயும் இந்த கூட்டத்துல சேர்ந்துட்டியா? ரேஸ்கோர்ஸ் நடைபாதையில, கடைக எதையும் பார்க்க முடியலை. பதிலுக்கு இந்த பசங்க கூட்டம் தான், ராப்பகலா இங்கேயே கடை விரிச்சிட்டு இருக்கு''
பத்து நாள் லீவு... பதவிக்கு கொடுத்த காவு!

ரேஸ்கோர்ஸ் நடைபாதை இருக்கையில் உட்கார்ந்து, மாநகராட்சி 'வை-ஃபை' உதவியுடன், தனது ஸ்மார்ட் போனில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள் மித்ரா. சொன்னது போலவே, சரியான நேரத்துக்கு வந்தாள் சித்ரா.
''மித்து...நீயும் இந்த கூட்டத்துல சேர்ந்துட்டியா? ரேஸ்கோர்ஸ் நடைபாதையில, கடைக எதையும் பார்க்க முடியலை. பதிலுக்கு இந்த பசங்க கூட்டம் தான், ராப்பகலா இங்கேயே கடை விரிச்சிட்டு இருக்கு'' என்ற சித்ரா,
'வா! ஒரு ரவுண்ட் போலாம்' என்று நடக்க ஆரம்பித்தாள்.
''ஆமாக்கா! ஆரோக்கியத்துக்காக சூப் வித்தவுங்க, சும்மா நிக்கிறதைப் பார்த்தா, பாவமா இருக்கு. ஆனாலும், ஒருத்தரை விட்டா, அப்புறமா நடைபாதையெல்லாம் கடை விரிச்சிர்றாங்க'' என்றாள் மித்ரா.
''ஒரு வாரத்துல, மறுபடியும் கடை போட்ருவாங்கன்னு தான் நினைச்சேன். ஆனா, அது மாதிரி எதுவும் நடக்கலை. மதிய நேரத்துல தான், கமர்சியல் டாக்ஸ் ஜே.சி., பங்களா முன்னால, பழையபடி தள்ளுவண்டி சாப்பாட்டுக் கடை முளைச்சிருக்கு. இப்பவே 'கன்ட்ரோல்' பண்ணலைன்னா, மறுபடியும் இது சந்தைக் கடையாயிரும்''
''அக்கா! நீ 'கன்ட்ரோல்'ன்னு சொன்னதும், எனக்கு 'கன்ட்ரோல் ரூம்' ஞாபகம் வந்துருச்சு. அங்க டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா பாணியில, ஒரு
தற்கொலை முயற்சி நடந்துருக்கு''
''ஹேய் மித்து...என்னடி சொல்ற?''
''நிஜமாத்தான்க்கா...நாமக்கல்ல 'டார்ச்சர்' பண்ணுனது ஆம்பள ஆபீசர்ஸ். இறந்தது லேடி டி.எஸ்.பி., இங்க தலைகீழா நடக்குது. முக்கியமான பொறுப்புல இருக்கிற ஒரு லேடி ஆபீசர், கிரேடு 1 போலீஸ்காரர் ஒருத்தர்க்கு பயங்கர 'டார்ச்சர்' கொடுத்திருக்காங்க. அவரு, ஆபீஸ் மொட்டை மாடியில இருந்து குதிக்கிறதுக்கு முடிவு பண்ணி, வெளிப்படையாவே புலம்பிட்டாராம்''
''அச்சச்சோ... அப்புறம் என்ன ஆச்சு?''
''மேல யாரும் போக விடாம, மொட்டை மாடிக்கதவைப் பூட்டி வச்சுட்டாங்களாம். அங்க இருக்கிற பெரிய ஆபீசர் மேல ஏற்கனவே ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' போய்த்தான், ஒரு முறை 'டீமோஷன்' ஆகி, அப்புறம் 'புரமோஷன்'ல வந்தாங்க. இப்போ, அவுங்க அமைதியா இருந்தாலும், அவுங்களோட வலக்கை மாதிரி இருக்கிற லேடி போலீஸ் தான் 'ஓவர்' ஆட்டமாம்'' என்றாள் சித்ரா.
''ஒரு சில போலீஸ் பண்றது தான், ஒட்டு மொத்த டிபார்ட்மென்ட்டுக்கே பேரு கெடுது. வெரைட்டிஹால்ல உளவு வேலை பார்த்த ஒரு போலீஸ்காரர் மேல ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' இருக்கு. பல வருஷமா, அதே ஸ்டேஷன்ல யூனிபார்ம் போடாமலே, கட்டப்பஞ்சாயத்து, திருட்டு விசிடி கலெக்ஷன் பார்த்த அவரை, இப்போ குனியமுத்தூர்க்கு மாத்தி விட்டாங்க'' என்றாள் மித்ரா.
''நல்ல விஷயம் தான நடந்திருக்கு'' என்று குறுக்கே புகுந்தாள் சித்ரா.
''முழுசாக்கேளுக்கா...இதுக்கு முன்னாடி, ஐ.எஸ்.,ல முக்கிய பொறுப்புல இருந்தவரோட 'சப்போர்ட்'லதான் இவரு யூனிபார்மே போடாம ஓட்னாரு. இப்ப அந்த ஆபீசர் 'ரிட்டயர்டு' ஆன பிறகும், இவரு 'குனியமுத்தூர்ல 'ஜாயின்' பண்ண மாட்டேன். பழைய இடத்துக்கே வந்துருவேன்'னு சவால் விடுறாராம்'' என்றாள் மித்ரா.
''போன வாரத்துல 'ரிட்டயர்டு' ஆன மருதமலை மன்னரும், மறுபடியும் விவசாயம் பாக்கிறதுக்கு இதே ஊருக்கு அதே பொறுப்புல வருவேன்னு சவால் விட்ருக்காராமே''
''ரிட்டயர்டு ஆவுறதுக்கு நாலு நாளைக்கு முன்னால கூட, பொறந்தநாள் கொண்டாடுறேங்கிற பேர்ல 24 பவுன் நகைய 'கிப்ட்'டா வாங்கிட்டு சென்னை பறந்துட்டாரு. திரும்ப வந்தவரு, 'ரிட்டயர்டு' ஆன அன்னிக்கு 'சென்ட் ஆஃப் பார்ட்டி'யில கூட கலந்துக்காம சென்னை போயிட்டாரு''
''அவருக்கு பதவி வாங்கிக் கொடுக்கத்தான், நம்மூரு 101வது வார்டு கவுன்சிலர் ஒருத்தரு இருக்காரே. ரோசமான அவரையும் சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பப்போறாங்க. அதுக்குள்ள, இவர்ட்ட எதையாவது வாங்கிட்டு, எங்கேயாவது 'போஸ்ட்டிங்' வாங்கிக் கொடுப்பாரு போலிருக்கு'' என்றாள் சித்ரா.
''அக்கா...நம்மூரு குப்பை மலையப் பாத்துட்டு, பாபா அணுமின் ஆராய்ச்சி மையத்தோட சீனியர் சயின்டிஸ்ட் டேனியல் செல்லப்பா மலைச்சுப் போயிட்டாராம்'' என்றாள் மித்ரா.
''என்ன சொன்னாராம்?''
''குப்பையப் பிரிக்காமலே, மலை மாதிரி குவிச்சு வச்சிருக்கீங்க. இப்பிடி இருந்தா, சுத்து வட்டாரத்துல எல்லாம் நிலத்தடி நீர் கெட்டுரும். பத்து வருஷத்துக்கு இதே மாதிரி விட்டா, அப்புறம் உங்களால இதை அழிக்கவே முடியாதுன்னு சொல்லிருக்காரு. இனிமே ஒழுங்கா பிரிக்கிறது மாதிரியிருந்தா, இப்ப இருக்கிற குப்பைகளை ரெண்டு வருஷத்துல 'பயோ-மைனிங்' முறையில அழிச்சுத் தர்றேன்னு
சொல்லிருக்காராம்''
''நாளைக்கு 'ஸ்மார்ட் சிட்டி' பத்தி கருத்துக் கேக்கப் போறாங்களாமே'' என்றாள் சித்ரா.
''மக்கள் சொல்றதை வச்சு, 50 பர்சன்டேஜ் திட்டம் தயாரிக்கணும்னு சொல்லிருக்காங்க. ஆனா, இந்த திட்டத்துல, 500 ஏக்கர்ல 'கிரீன் பீல்டு' அமைக்கிறதுக்கு, சிட்டியில மேற்குப் பக்கத்துல, ஏற்கனவே இடமெல்லாம் முடிவு பண்ணியாச்சாம்'' என்றாள் மித்ரா.
''இந்த திட்டத்துல, நம்ம 'மாண்புமிகு டாக்டர்' கொஞ்சம் கூட 'இன்ட்ரஸ்ட்' காமிக்காம இருக்காராமே'' என்றாள் சித்ரா.
''அதை விடு மித்து...அவருக்கும், டாக்டர் ஆபீசருக்கும் இருந்த உரசல் இப்போ எப்பிடியிருக்காம்?'' என்றாள் மித்ரா.
''உரசல் ஆனது நிஜம் தானாம். ஆனா, பெரிய அளவுல போகலையாம். இதை பூனை மாதிரி மோப்பம் பிடிச்ச பழைய 'டவுன் டாடி' ஆளுங்க தான், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு வந்தது மாதிரி, 'மாண்புமிகு டாக்டர்'க்கும் சிக்கலை ஏற்படுத்தலாம்னு, ஏதேதோ கதையைக் கட்டி விட்ருக்காங்க'' என்றாள் சித்ரா.
''ஆளுக்கு ஆளு முறைச்சிட்டு இருக்கிறதுனால, இடையில பல பேரு குளிர் காயுறாங்க''
''நீ சொல்றதைப் பார்த்தா, எங்கேயோ ஏதோ தப்பு நடக்கிறது மாதிரி தெரியுதே''
''ஆமாக்கா...சிட்டிக்கு சென்டர்ல இருக்கிற அண்ணாச்சி, சில அதிகாரிகளை வச்சுக்கிட்டு, ஏகப்பட்ட வேலை பண்றாராம். ரங்கே கவுடர் வீதியில, ஐகோர்ட் டெமாலிஷன் ஆர்டர் கொடுத்த ஒரு கட்டடத்துக்கு, போலியா அப்ரூவல் ரெடி பண்ணி, காப்பாத்தி விட்ருக்காரு. அப்புறம்...ஜெயின் கோவிலுக்கு எதிர்ல இருக்கிற கார்ப்பரேஷன் காம்ப்ளக்ஸ்ல ஒரு கடைய, 'இல்லீகலா' வேற ஆளுக்கு பேரு மாத்திக் கொடுத்திருக்காராம்'' என்றாள் மித்ரா.
''ஆதியிலயிருந்தே அவருக்கு இதே வேலை தான். அவரை விடு...அந்த மண்டலத்துல முக்கியமான பொறுப்புல இருக்கிற லேடி ஆபீசர், அந்த பொறுப்புக்கு எப்பிடி வந்தாங்கன்னு தெரியுமா?'' என்றாள் சித்ரா.
''என்ன...யாருக்காவது காசு கொடுத்திருப்பாங்க. இல்லேன்னா ரெகமண்டேஷனா இருக்கும்''
''அதில்லாமலா...ஆனா, அதை அவர் பிடிச்ச விதம் இருக்கே. அங்க முக்கிய பொறுப்புல இருந்த ஆபீசர், நல்ல பேரு வாங்கிட்டு இருந்தாரு. அவரு, குடும்ப நிகழ்ச்சிக்காக பத்து நாள் லீவ் போட்டுப் போனப்போ, இவுங்ககிட்ட 'இன்சார்ஜ்' கொடுத்துட்டுப் போயிருக்காரு. அவரு திரும்ப வர்றதுக்குள்ள இந்தம்மா, யாரையோ பிடிச்சு, நிரந்தர 'இன்சார்ஜ்' ஆயிட்டாங்க. அவரோட ஹஸ்பெண்ட், ரத்தத்தின் ரத்தமாம்''
''அக்கா...மருதமலையில ஒரு இட விவகாரமா, ஆபீசர்களை 'ரெட்டி' ஆபீசர் கூப்பிட்டுப் பேசுனார்னு பேசுனோமே. அவரு, வாராவாரம் கோயம்புத்துாருக்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிட்டு வந்துர்றாராம். விசாரிச்சா, அவரோட பையன், இங்க இருக்கிற பெரிய குரூப் 'டெக்' காலேஜ்ல படிக்கிறானாம்'' என்றாள் மித்ரா.
''இன்னோரு மேட்டர்...கோவில் நகைகளை சரி பாக்கிற ஆபீசரைப் பத்திப் பேசுனோமே. அவரை சேலத்துக்குத் துாக்கி விட்டாங்க. அநேகமா, பெரிய ஆபீசருக்கும் சீக்கிரமே ஓலை வந்துருமாம்'' என்றாள் சித்ரா.
''கோயம்புத்துார்ல கேபிள் ஆபரேட்டர்களுக்குள்ள இருக்கிற எல்லைத்தகராறைத் தீர்த்து வைக்க, ஆளும்கட்சி மாணவரணியில இருக்கிற ஒருத்தரை நியமிச்சிருக்காங்க. அவரு, ஃபுல்லா கட்டப்பஞ்சாயத்து பண்ணி, வசூல் தட்டி எடுக்குறாராம்'' என்றாள் மித்ரா.
''மித்து! திருமண உதவித்திட்டத்துக்கு பணமும், தங்கமும் கொடுக்கிற ஆபீஸ்ல, மகேஸ்வரிங்கிற புரோக்கர் தான், வசூல் தட்டி எடுக்குறாராம். பட்டதாரிப் பொண்ணுகள்ட்ட பத்தாயிரம் ரூபா வாங்கி, ஆபிசருக்கு அஞ்சாயிரம் கொடுத்துர்றாராம்'' என்று சித்ரா
சொல்லும்போதே, மித்ராவின் தோழி எதிரில் வர, பேச்சும், நடையும் தற்காலிகமாக தடைபட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X