கழிப்பறை சர்ச்சை ஏன்? அவிழுமா, மர்ம முடிச்சு?

Added : செப் 29, 2015
Share
Advertisement
""வார்டுக்கு ஒரு பூங்கா ஏற்படுத்தினால், நல்லாயிருக்கும்; விடுமுறை அன்னைக்கு குடும்பத்தோடு ஜாலியா போயிட்டு வரலாம்; அந்த வசதி மட்டும், நம்மூர்ல இன்னும் செஞ்சு தராம இருக்காங்க?'' என, வருத்தத்துடன் கூறியபடி வந்தாள் மித்ரா.அவளுக்கு இஞ்சி டீ, அப்பள பஜ்ஜி, முந்திரி பக்கோடா கொடுத்து உபசரித்த சித்ரா, ""ஆண்டிபாளையம் குளத்துல, சூப்பரா பூங்கா அமைச்சிக்கிட்டு வர்றாங்களே.
கழிப்பறை சர்ச்சை ஏன்? அவிழுமா, மர்ம முடிச்சு?

""வார்டுக்கு ஒரு பூங்கா ஏற்படுத்தினால், நல்லாயிருக்கும்; விடுமுறை அன்னைக்கு குடும்பத்தோடு ஜாலியா போயிட்டு வரலாம்; அந்த வசதி மட்டும், நம்மூர்ல இன்னும் செஞ்சு தராம இருக்காங்க?'' என, வருத்தத்துடன் கூறியபடி வந்தாள் மித்ரா.
அவளுக்கு இஞ்சி டீ, அப்பள பஜ்ஜி, முந்திரி பக்கோடா கொடுத்து உபசரித்த சித்ரா, ""ஆண்டிபாளையம் குளத்துல, சூப்பரா பூங்கா அமைச்சிக்கிட்டு வர்றாங்களே. அப்புறம் என்ன? ஜாலியா, "போட்டிங்' போகலாமே,'' என்றாள்.
""யாருமே நெனைச்சு பார்க்க முடியாத அளவுக்கு, ரொம்ப அழகா மாத்திக்கிட்டு இருக்காங்க. உள்ளூர் திட்டக்குழுமத்துல இருந்து, 35 லட்சம் ரூபாய் ஒதுக்கியிருக்காங்க, சுற்றுச்சுவர், மரங்கள், செடிகள், புல்வெளி,
நீரூற்று "ரெடி' பண்ணிட்டாங்க. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைச்சதும், திறக்கலாம்னு காத்திருக்காங்க. இதுக்கு, 16 லட்சம் செலவாகும்னு கணக்கு போட்டிருக்காங்க. வாரத்துக்கு ரெண்டு தடவை, "விசிட்' அடிக்கிற கலெக்டர், நிதி ஒதுக்குறதுக்கு, தாமதம் செஞ்சுக்கிட்டு இருக்காரு. அதனால, "லேட்' ஆகிக்கிட்டே இருக்கு. தேர்தல் வர்றதுக்குள்ள வேலையை முடிச்சு, பயன்பாட்டுக்கு கொண்டு வரணும். இதே மாதிரி, வார்டுக்கு ஒரு பூங்கா அமைக்கணும்னு ஆசைப்படுறாரு. ஆனா, மாநகராட்சி நிர்வாகம் ஒத்துழைக்க மாட்டேங்குது.
எந்த வேலையா இருந்தாலும், ஜவ்வா இழுக்குது,'' என்றாள் மித்ரா.
""தேர்தல்னு சொன்னதும், ஞாபகத்துக்கு வருது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கறதுக்கு வாய்ப்பு கெடைச்சிருந்தும், கட்சிக்காரங்க ஆர்வமில்லாம இருக்காங்களே, ஏன்? ஆளும்கட்சியிலும் பூத்துக்கு ஒரு சேகரிப்பாளர் நியமிச்சிருக்காங்க, இருந்தாலும், யாரும் வேலை செய்ற மாதிரி தெரியலையே,'' என, சித்ரா முடிப்பதற்குள், ""ஓட்டுச்சாவடி, தேர்தல் வேலைன்னு வந்தாலே, தொண்டர்கள் தரப்புல, "கரன்சி'யை எதிர்பார்ப்பாங்க. தண்ணி காட்டிட்டே இருந்தா, எப்படி ஆர்வமா வேலை பார்ப்பாங்க,'' என, இடைச்செறுகலாக கூறினாள் மித்ரா.
""அதெல்லாம் சரி, அடிப்படை வசதி செய்து தரலைன்னு, 59வது வார்டில் பா.ஜ., கட்சிக்காரங்க உண்ணாவிரதம் இருந்தாங்களே; அதிகாரிகள் தரப்புல, உண்ணாவிரத பந்தலுக்கே போயி, விளக்கம் வேற சொல்லியிருக்காங்க, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கறுப்புக் கொடி
ஏத்தப் போறாம்னு சொல்றாங்க.
என்ன பிரச்னை? இதுல, ஏதேனும் "சமாச்சாரம்' இருக்குதா?,'' என, கேட்டாள் சித்ரா.
""ஆமாக்கா, ஆண்டிபாளையம் பிரிவுல, ஒரு கழிப்பறை இருக்குது. அந்தக்காலத்துல, "டிரஸ்ட்' சார்பில் தானமா கொடுத்த இடம், "ரிசர்வ் சைட்'டுக்கு பொதுவா, கழிப்பறை கட்டியிருக்காங்க. தானக்கிரையமா கொடுத்த இடத்துக்கான பத்திரம், மாநகராட்சி கைவசம் இப்போதைக்கு இல்லை. அதனால, அந்த இடத்தை வித்துட்டாங்க. இடத்தை வாங்குனவங்க, கழிப்பறையை இடிக்க முயற்சி செய்றாங்க; வேறு இடத்துக்கு மாத்துங்கன்னு சொல்றாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கழிப்பறையை மூடி வச்சாங்க; பொதுமக்கள் தரப்புல, ஏகப்பட்ட புகைச்சல்; கொதிச்சு எழுந்துட்டாங்க. கட்சிக்காரங்க நடத்துன போராட்டத்திலும், பெருந்திரளா கலந்துக்கிட்டாங்க. அதிகாரிகள் தரப்புல, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துட்டாங்க; இடிக்க முயற்சி செஞ்சவங்க மீது போலீசில் புகார் செஞ்சிருக்காங்க. சம்பந்தப்பட்ட இடத்தை தான கிரையமா வாங்கிக் கொடுத்தவர், ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு பெண் பிரமுகர். இப்ப, அந்த இடத்தை விக்கிறதுக்கு உதவியா இருந்ததும், அதே பிரமுகருன்னு, ஊருக்குள்ள பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X