மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: 5 பேருக்கு தூக்கு

Added : செப் 30, 2015 | கருத்துகள் (73)
Advertisement
mumbai blast, death sentence, மும்பை குண்டுவெடிப்பு,தூக்கு தண்டனை

மும்பை : 2006ம் ஆண்டு மும்பையில் 7 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 12 பேரில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மும்பை சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது


மும்பை குண்டுவெடிப்பு வழக்கு விபரம் :


2006 ஜூலை 11: மும்பையில் மாலை 6.24 முதல் 6.35 மணி வரை 11 நிமிடங்களில், 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 209 பேர் பலி. 700 பேர் காயம். ஆர்.டி.எக்ஸ்., குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.* ஜூலை 21: வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., , லஷ்கர் இ தொய்பா மற்றும் தடை செய்யப்பட்ட சிமி ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் சதித் திட்டம் தீட்டியதாக பயங்கரவாத எதிர்ப்புக் குழு (ஏ.டி.எஸ்) குற்றம் சாட்டியது.* நவ., 30: மகாராஷ்டிரா ஒருங்கிணைந்த குற்ற நடவடிக்கை சிறப்பு சட்டப்படி (எம்.சி.ஒ.சி.ஏ.,), ஏ.டி.எஸ்., குற்றச்சாட்டு பதிவு செய்தது. 13 பேர் கைது செய்யப்பட்டனர். தவிர 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்டனர்.2007 ஜூன் 21: வழக்கு விசாரணை தொடங்கியது. இருப்பினும் குற்றவாளிகளில் ஒருவரான கமல் அன்சாரி என்பவர் எம்.சி.ஓ.சி.ஏ., விதி பொருந்தாது என மனுத்தாக்கல். 2008 பிப்., விசாரணை நிறுத்தப்பட்டது.2008 செப்., 23: இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 5 பேரை மும்பை புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.2010 பிப்., 13: சில குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வக்கீல் ஜாகித் ஆஜ்மி தனது அலுவலகத்தில் சுட்டுக் கொலை.* ஏப்., 23: விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியது.* ஜூன் 23: நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மீடியாக்களுக்கு தடை. சாட்சிகளின் வாக்குமூலம் 5,500 பக்கங்களில் பதிவானது.2013 ஆக., 30: இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் இணை இயக்குனரான யாசின் பட்கல் கைது.2014 ஆக., 20: எட்டு ஆண்டுகளாக நீடித்து வந்த வழக்கு விசாரணை நிறைவு.2015 செப்., 11: 13 பயங்கரவாதிகளில், 12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.


தூக்கு தண்டணை :

இவ்வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த 12 பேரின் தண்டனை விபரம் இன்று (செப்,30 ) அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடுகள் செய்ய உள்ளதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
01-அக்-201512:44:42 IST Report Abuse
christ 2006 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு 2015 ஆம் தீர்ப்பு. இதுல அப்பீல் வேற. இப்படி ஒரு குற்றத்துக்கே வருட கணக்கில் வழக்கை இழுத்தால் நாட்டில் எப்படி குற்றங்கள் குறையும் ? கடுமையான குற்றங்களை புரிந்தவர்களுக்கு குறிகிய நாட்களில் விசாரனைய முடித்து தண்டனை கொடுத்து விட வேண்டும் . அப்போது மட்டுமே நாட்டில் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு .
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
01-அக்-201510:02:09 IST Report Abuse
spr "குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடுகள் செய்ய உள்ளதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்." இந்த வழக்கறிஞர்கள் சமுதாயத்தால், கண்டிக்கப்பட வேண்டியவர்கள் இவர்களை சமுதாயப் புறக்கணிப்பு செய்ய வேண்டும். ஒரு மனிதனாக இதனைச் சொல்ல மனம் இடம் தரவல்லை எனினும் ஒரு இந்திய நாட்டு நலன் கருதி சொல்ல வேண்டியிருக்கிறது. காவற்துறை இது போன்ற குற்றவாளிகளை "என்கவுண்டரில்" போட்டுத் தள்ள வேண்டும் விசாரணை செலவாவது மிஞ்சும் இத்தகு குற்றங்களைச் செய்ய உடந்தையாக இருப்பவருக்கு அதீத கடுங்காவல் தண்டனை தரவேண்டும் அவர்கள் உதவுவதால் இத்தகு குற்றங்கள் மிகுதியாக நடக்கிறது. இதனால் குற்றங்கள் அறவே நிற்காது ஆனால் குறையும்
Rate this:
Share this comment
Cancel
R.Srinivasan - Theni,இந்தியா
01-அக்-201507:32:24 IST Report Abuse
R.Srinivasan ஒரு பாவமும் அறியாத குற்றமற்ற நூற்றுக் கணக்கான உயிர்கள் ஒரு நொடியில் பிரிக்கப்பட்டு விட்டது.....பாவம் செய்வதையும். குற்றம் செய்வதையும் தொழிலாகக் கொண்ட இந்தப்பாவிகள் ஆயுள் முழுவதும் அப்பீல் என்ற பெயரில் நிம்மதியாக சிறையில் வாழப்போகிறார்கள்.....தூக்குத் தண்டனை என்பது வெறும் பேப்பர் தண்டனைதான் இவர்களுக்கு.....கடவுளே...இதுதான் உன் நீதியா?....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X