கண்ணொளி திட்ட வாகனம் 10 ஆண்டுகளாக முடக்கம்

Added : அக் 02, 2015
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கண்ணொளி திட்டத்திற்கான வாகனம், 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் முடங்கி கிடக்கிறது.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை, வீடுகளுக்கு கொண்டு செல்வதற்காக, 1999ம் ஆண்டு கண்ணொளி திட்டத்திற்கான வாகனம் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, தினமும் 100க்கும்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கண்ணொளி திட்டத்திற்கான வாகனம், 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் முடங்கி கிடக்கிறது.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை, வீடுகளுக்கு கொண்டு செல்வதற்காக, 1999ம் ஆண்டு கண்ணொளி திட்டத்திற்கான வாகனம் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, தினமும் 100க்கும் மேற்பட்டோர் கண் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், கண்ணில் சதை வளர்தல், கண் புரை போன்ற பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, இங்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், வீடுகளுக்கு செல்ல அவதிப்பட்டு வந்தனர்.
அவர்களை வீடுகளுக்கு அழைத்து செல்லும் வகையில், இந்த வாகனம் பயன்பட்டது. இதை தவிர, மாவட்ட கண் பார்வை இழப்பு, தடுப்பு சங்கம் மூலம் நடைபெறும், கண் சிகிச்சை முகாம்களுக்கு, இந்த வாகனத்தில் நோயாளிகளை அழைத்து சென்றனர். கடந்த 2004ம் ஆண்டு வரை, இந்த வாகனம் இயங்கி வந்தது. அதன்பின் பல்வேறு காரணமாக செயல்படவில்லை. தற்போது, அந்த வாகனத்திற்கு ஓட்டுனர் இல்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அந்த வாகனம் பழுது பார்க்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X