மதநல்லிணக்கமுளைப்பாரி ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதநல்லிணக்கமுளைப்பாரி ஊர்வலம்

Added : அக் 02, 2015
Share
கீழக்கரை:ஏர்வாடி, யாதவர் தெருவில் உள்ள வாழவந்த மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ஏர்வாடி தர்காவிற்குள் அம்மன் கரகம் முன்னே செல்ல முளைப்பாரி ஊர்வலம் மூன்று முறை வலம் வந்தது. பின்னர் உலக நன்மைக்காக இஸ்மாயில் ஆலிம்சா மவுலீது ஓதினார். பாதுஷா நாயகத்திற்கான இரண்டு முளைப்பாரியை தர்கா வாசல் முன் வைத்து கும்மி கொட்டி அம்மன்

கீழக்கரை:ஏர்வாடி, யாதவர் தெருவில் உள்ள வாழவந்த மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ஏர்வாடி தர்காவிற்குள் அம்மன் கரகம் முன்னே செல்ல முளைப்பாரி ஊர்வலம் மூன்று முறை வலம் வந்தது. பின்னர் உலக நன்மைக்காக இஸ்மாயில் ஆலிம்சா மவுலீது ஓதினார். பாதுஷா நாயகத்திற்கான இரண்டு முளைப்பாரியை தர்கா வாசல் முன் வைத்து கும்மி கொட்டி அம்மன் வாழ்த்துப் பாடல்களை பாடினர். சிறிதளவு முளைப்பாரியினை வழங்கினர். ஏர்வாடி தர்கா ஹக்தார் சபை மூத்த உறுப்பினர் துல்கருணை பாட்ஷா லெப்பை கோயில் விழா தலைவர் முத்துமணிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் ஏர்வாடி கடற்கரையில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து, முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந் நிகழ்ச்சி நடந்தது

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X