ராமேஸ்வரம்:கடலில் மூழ்கி மாயமான மீனவரை மீட்க கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் "ஸ்டிரைக்' கில் ஈடுபட்டனர். நேற்று ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் தலைவர் சேசுராஜா தலைமையில் நடந்தது. இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர் படகு கடலுக்குள் மூழ்கியது. படகில் இருந்த மீனவர் வில்வராஜ் மாயமானார். அவரை மீட்கும் வரை விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது. ஒரிரு தினங்களில் மீனவர் உடலை மீட்க விரைவான அனுமதி வழங்காவிடில், போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், மீனவர் வில்வராஜ் உடலை மீட்டு தரக் கோரி அவரது உறவினர்கள் ராமேஸ்வரம் மீன்துறை டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு, கோஷமிட்டனர். அவர்களை மீனவர் சங்க நிர்வாகிகள் சமரசம் செய்தனர்.
தினமலர் அன்றே சொன்னது: மீனவர் சங்க தலைவர் போஸ் இலங்கை கடற்படை கப்பல் மோதியதால் தான் ராமேஸ்வரம் மீனவர் படகு மூழ்கியதாக செய்தி வெளியிட்ட தினமலருக்கு மீனவர் சங்க தலைவர் போஸ் நன்றி தெரிவித்தார். மேலும் படகில் சிக்கி மாயமான மீனவரை விரைவில் மீட்கவேண்டும். தாமதித்தால் மீனவர்களை திரட்டி மீன்துறை அலுவலகம் முன்பு முற்றுகையிட போவதாகவும் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE