தமிழ்நாடு

மழையால் நிரம்பும் ஏரிகள்: நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

Added : அக் 05, 2015
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களில், 575 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதால், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெய்யும் மழையால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதால், ஏரி, குளம், கண்மாய் பல ஆண்டுகளாக நிரம்பாமல் உள்ளது. இதன் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, பாசனத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் சிரமப்பட்டனர். விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால், மாவட்டத்தில் உள்ள, 1,154 ஏரி, குளம், குட்டை மற்றும் நீர்நிலைகளில், தண்ணீர் இன்றி, கருவேலம் மரங்கள் மட்டுமே காட்சியளிக்கிறது. மேலும் நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, பாரூர், கிருஷ்ணகிரி, நெடுங்கல், பெனுகொண்டாபுரம், ராயக்கோட்டை, போச்சம்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த, 2 ம் தேதி முதல், 4 ம் தேதி வரை, மூன்று நாட்களில் மட்டும், 575 மில்லி மீட்டர் அளவிற்கு கனமழை பெய்ததால், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. தேன்கனிக்கோட்டை தாலுகா தளி பகுதியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 3 ஏரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள, 7 ஏரிகள் என மொத்தம், 10 ஏரிகள் கனமழை காரணமாக நிரம்பியுள்ளது. அத்துடன் சில ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. மாவட்டத்தில் ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால், விவசாய தொழில் மேன்மையடையும் என, விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X