தமிழ்நாடு

112 சுங்க சாவடிகளில் புதிய முறை வசூல் அமல் படுத்த திட்டம்: இன்று அறிவிப்பு வெளியாகும் என லாரி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு

Added : அக் 05, 2015
Share
Advertisement

சேலம்: லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக், ஐந்தாவது நாளாக நீடிக்கும் நிலையில், இன்று மத்திய அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 112 சுங்க சாவடிகளில், புதிய முறையில் சுங்க வசூல் செய்யும் திட்டம் குறித்த அறிவிப்பை, மத்திய அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு, லாரி உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அகில இந்திய மோட்டார் காங்கிரஸின், நாடு தழுவிய லாரி ஸ்டிரைக், ஐந்தாவது நாளை எட்டி உள்ள நிலையில், இன்று மாலை, தரை வழிப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரியுடன், ஏ.ஐ.எம்.டி.யூ.சி., தலைவர் பீமா பாத்வா, மாஜி தலைவர் சண்முகப்பா, தமிழகத்தின் சார்பில், திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அனிதா வேலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதற்கு முன்பாக நடக்கும், அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் நிர்வாக குழுக் கூட்டத்தில், மத்திய அரசின் உறுதிமொழிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அதில் முக்கியமாக, நாடு முழுவதும் செயல்படும், 373 சுங்கசாவடிகளில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 112 சுங்க சாவடிகளில், லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஆண்டுக்கு ஒரு முறை வசூல் செய்யும் முறை, சுங்க சாவடிக்கான பராமரிப்பு செலவுக்கான தொகையை மட்டும் வசூல் செய்து கொள்ளும் திட்டம் ஆகியன குறித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் பட்சத்தல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது.

அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் நிர்வாக குழு உறுப்பினர்கள், அனிதா வேலு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் சென்னகேசவன் ஆகியோர் கூறியதாவது: ஏ.ஐ.எம்.டி.யூ.சி.,யின் வேண்டுகோளை ஏற்று, நான்கு நாட்களாக, ஸ்டிரைக் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று)ஐந்தாவது நாளாக தொடரும் நிலையில், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. தனியார் சுங்க சாவடிகளில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு கால அவகாசம் கோரும் என, எதிர்பார்க்கிறோம். மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, 112 சுங்க சாவடிகளில், ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் வசூல் செய்தல், சர்வீஸ் கட்டணம் மட்டும் பெற்றுக் கொண்டு, வண்டிகளை அனுமதிப்பது உள்ளிட்ட முடிவுகள் குறித்த அறிவிப்புக்களை வெளியிடும் என, எதிர்பார்க்கிறோம். எங்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்படும். கோரிக்கையை நிறைவேறாத பட்சத்தில், நாளை முதல், காஸ் டாங்கர் லாரிகள், காஸ் புல்லட்டுக்கள், பெட்ரோல், டீஸல் பரிமாற்ற லாரிகள், காய்கறிகள், பால், தண்ணீர் என அனைத்து லாரிகளின் இயக்கத்தை நிறுத்த, அந்தந்த சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X