அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்புமணியே முதல்வர் வேட்பாளர் பா.ஜ.,வுக்கு ராமதாஸ் நிபந்தனை

Added : அக் 06, 2015 | கருத்துகள் (25)
Share
Advertisement
 அன்புமணியே முதல்வர் வேட்பாளர் பா.ஜ.,வுக்கு ராமதாஸ் நிபந்தனை

சென்னை:''அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்று, பா.ஜ., எங்கள் கூட்டணியில் இணைந்தால் வரவேற்போம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, பா.ம.க., சார்பில், தமிழகம் முழுவதும், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை, நுங்கம்பாக்கத்தில், வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தை, ராமதாஸ் துவக்கி வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி:
வரும் சட்டசபை தேர்தலில், பா.ம.க., தனித்து போட்டியிடுவது என, முடிவெடுத்து, எங்கள் கட்சி சார்பில், இளைஞர் அணி தலைவர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து விட்டோம். 'எங்கள் தலைமையை ஏற்று, யார் கூட்டணியில் இணைந்தாலும் ஏற்றுக் கொள்வோம்' என்றும் கூறி விட்டோம்.அன்புமணியை, முதல்வர் வேட்பாளராக ஏற்று, பா.ஜ., எங்கள் கூட்டணியில் இணைந்தால் வரவேற்போம். 'மக்கள் நல கூட்டணி' என்ற பெயரில், நான்கு சிறு கட்சிகள் இணைந்து, தனி அணியாக தேர்தலை சந்திக்கப் போவதாக சொல்லி வருகின்றனர். அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
08-அக்-201500:07:27 IST Report Abuse
Balaji இவர்களின் கட்சியில் AK . மூர்த்தி என்று திறமையான ஒருவர் இருந்தார்.... அவர் மத்திய அமைச்சராக இருந்த போது அருமையாக செயல்பட்டார்.... அவர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தால் எங்கே தன மகனுக்கு அரசியலில் எதிர்காலம் இல்லாமல் போய்விடுமோ என்றே அவரை ஓரங்கட்டினார் இந்த ஐயா.... சரியான சுயநலவாதி....
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-அக்-201519:54:15 IST Report Abuse
Pasupathi Subbian நினைப்புதான் பிழைப்பை கெடுக்குது தலைவரே . தமிழகத்தின் தலை எழுத்து அவ்வளவு மோசமாகி விட்டதா என்ன ?
Rate this:
Cancel
ravichandran - madurai,இந்தியா
07-அக்-201518:43:11 IST Report Abuse
ravichandran தவளை தன் வாயால் கெடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X