Confussion in Poltical parties | சட்டசபை தேர்தல் நெருங்குவதால் கட்சிகளில் குழப்பம் ஆரம்பம்: இந்திய கம்யூ., - ம.ம.க.,வில் கூட்டணியால் சலசலப்பு Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :

Dinamalar Banner Tamil News

Advertisement

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதால், எந்த கூட்டணிக்கு செல்வது என்பதில், கட்சிகளில் குழப்பம் ஆரம்பமாகி உள்ளது. இந்திய கம்யூ., மற்றும், ம.ம.க., எனப்படும், மனித நேய மக்கள் கட்சியில், இது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, ஒரு அணி அமைக்கும் எண்ணத்தில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மற்றும், ம.ம.க., இணைந்து, மக்கள் நல கூட்டு இயக்கத்தை ஏற்படுத்தின. இதிலிருந்து, திடீரென விலகிய, ம.ம.க., 'பெரிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி, எம்.எல்.ஏ.,க்களை பெற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு உள்ளது. எனவே, மக்கள் நல கூட்டு இயக்கத்தில் நீடிக்க முடியாது' என, காரணம் கூறியது.இந்நிலையில், எந்த பெரிய கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்துவது என்பதில், ம.ம.க.,வில் குழப்பம் ஏற்பட்டது. '2011 தேர்தல் போல், அ.தி.மு.க., கூட்டணியில் தொடர வேண்டும்' என, எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா விருப்பம் தெரிவித்தார். இதற்கு, ம.ம.க., பொதுச் செயலர் தமீமுன் அன்சாரி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால், கட்சி நிர்வாகிகளுக்குள் மோதல் வெடித்தது. ஜவாஹிருல்லா, கட்சியின் பொதுக்குழுவை, சென்னை தாம்பரத்தில், நேற்று காலை கூட்டினார். ஆனால், 'பொதுச் செயலரான எனக்குத் தான், பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் உண்டு. ஜவாஹிருல்லா கூட்டம், சட்டப்படி செல்லாது. நிர்வாகிகள் என் பக்கமே உள்ளனர்' எனக் கூறி, எழும்பூரில் போட்டி பொதுக்குழுவை கூட்டினார், தமீமுன் அன்சாரி.ஒரு கட்சியின், இரு பொதுக்குழு கூட்டங்கள் நேற்று நடந்தன. ஜவாஹிருல்லா கூட்டிய பொதுக்குழுவில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி, பொதுச் செயலர் தமீமுன் அன்சாரி, துணை பொதுச் செயலர் ஆரூண் ரஷீத் ஆகியோரை, பொறுப்புகளிலிருந்து நீக்கினர்.

தமீமுன் அன்சாரி கூட்டிய பொதுக்குழுவில், 'எங்களை நீக்கும் உரிமை, ஜவாஹிருல்லா

பொதுக்குழுவுக்கு இல்லை. நாங்கள் தான் உண்மையான, ம.ம.க., எங்கள் பலத்தை, சட்ட ரீதியாக நிரூபிப்போம்' என, அறிவித்தனர். இதனால், ம.ம.க., இரண்டாக உடைந்தது. யார் தலைமையிலான, ம.ம.க., உண்மையானது என நிரூபிக்க, இரு தரப்பினரும், நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போதைக்கு வேண்டாம்:

இதற்கிடையில், மக்கள் நல கூட்டு இயக்கத்தில், துவக்கம் முதல் இருந்து வரும், இந்திய கம்யூ., கட்சியிலும், கூட்டணி விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. 'திருவாரூரில் நடக்கும் மக்கள் நல கூட்டு இயக்க பொதுக் கூட்டத்தில், மக்கள் நல கூட்டணி உதயமாகும்' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த திங்கள் கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே காரணம் என, கூறப்படுகிறது.

சென்னையில், நேற்று முன்தினம் பேட்டி அளித்த, இந்திய கம்யூ., முன்னாள் தலைவர் தா.பாண்டியன், 'தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதம் உள்ளது. இப்போதே, கூட்டணிக்கு என்ன அவசரம்?' என, கேள்வி எழுப்பினார். இதனால், மக்கள் நலகூட்டணியை, இக்கட்சியும் விரும்பவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. இக்கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம், அ.தி.மு.க., அணியில் சேரும் விருப்பம் காணப்படுகிறது. இதேபோல், மார்க்சிஸ்ட்கட்சியிலும், மக்கள் நல கூட்டணியை ஏற்படுத்துவதில், மாற்று கருத்துகள் எழுந்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது: எம்.எல்.ஏ.,க்கள் கருத்து தெரிவிக்கலாம்; ஆனால், அது இறுதி முடிவாகாது. கட்சி தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது. 'திருவாரூர் கூட்டத்தில், மக்கள் நல கூட்டணி அறிவிக்கப்படும்' என, வைகோ தான் தெரிவித்தார். ஆனால், அதுபோன்ற செயல் திட்டம் எதுவும்

அறிவிக்கப்படவில்லை. குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிப்பது போன்ற பணிகள், கூட்டு இயக்கத்துக்காகவே தவிர, தேர்தல் கூட்டணிக்கானது அல்ல. தேர்தல் வரும்போது, கூட்டணியை தலைமை முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.




பூத் ஏஜன்டுக்கு கூட ஆளில்லை!

மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம், சென்னை, தாம்பரத்தில் நேற்று, கட்சி தலைவர் ரிபாயி தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு பின், ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், பொது செயலராக இருந்த தமீமுன் அன்சாரி, இணை பொதுச் செயலராக இருந்த, ஆரூண் ரஷீத் ஆகியோர் கட்சி பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை. பா.ஜ., அல்லாத கூட்டணியில் இடம் பெறுவோம். பூத் ஏஜன்டுகளை நியமிக்க கூட, மக்கள் நல கூட்டணிக்கு வலிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manitha neyan - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
07-அக்-201517:02:27 IST Report Abuse

manitha neyanஅடிச்சுக்குட்டு சாங்கடா

Rate this:
Palani Baba Thani Oruvan - Vyasarpadi, Chennai,இந்தியா
07-அக்-201515:01:17 IST Report Abuse

Palani Baba Thani Oruvanமததின் போர்வையில் அரசியல் ...பதவி ஆசை..

Rate this:
desadasan - mumbai,இந்தியா
07-அக்-201514:36:39 IST Report Abuse

desadasanகனவு காண்பது அவரவர் உரிமை...

Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-அக்-201514:31:50 IST Report Abuse

Swaminathan Nathஇந்த காரிய வாதிகளால் மக்களுக்கு பலன் இல்லை, பொறுத்திருந்து பார்க்கலாம்,,

Rate this:
SENTHILKUMAR - VELLORE,இந்தியா
07-அக்-201514:10:58 IST Report Abuse

SENTHILKUMARதி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 2016 தேர்தலுக்கு முன் தங்கள் சுயநலத்துக்காக தமிழ்நாட்டிலுள்ள மற்ற கட்சிகளை இரண்டாகவோ ,மூன்றாகவோ பிளவுபடுத்திவிடும். அப்புறம் நேரடி போட்டி தி.மு.க.வுக்கும் , அ.தி.மு.க.வுக்கும்தான் . .

Rate this:
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
07-அக்-201513:12:43 IST Report Abuse

Karuppu Samyஇது வைகோ வுக்காக எழுதிய கட்டுரை?

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
07-அக்-201513:07:21 IST Report Abuse

Cheran Perumalம.ம.க இரண்டாக பிரிந்தாலும் ஒவ்வொன்றும் தி.மு.க அல்லது அ.தி.மு.க வுடன் கூட்டு சேர்ந்து தலா 5 இடங்களை பெற்று குறைந்தது தலா 2 சீட்டாவது ஜெயித்து விடுவார்கள். செலவுக்கு பணமும் இரட்டிப்பாக கிடைக்கும். இந்த லாபத்தை கணக்கு பண்ணித்தான் இரண்டாக பிரிந்து விட்டார்கள். புரிகிறதா தேர்தல் கணக்கு?

Rate this:
muthu Rajendran - chennai,இந்தியா
07-அக்-201512:41:39 IST Report Abuse

muthu Rajendranசரியோ தவறோ தமிழகம் இன்னும் மூன்றாவது அணிக்கு தயாராக இல்லை என்பதே உண்மை,இரு கழகங்கள் தங்களது வலிமையை பொருத்து தனித்தோ கூட்டணி அமைத்தோ வெற்றிபெறுவார்கள். தமிழத்தில் உள்ள கட்சிகளில் மதிமுக , பொதுடைமை கட்சிகள் தவிர மற்ற கட்சிகளில் எல்லாமே தனிநபர் வாரிசு அரசியல் ,குடும்ப ஆதிக்கம், ஜாதி இவற்றில் ஒன்றோ இரண்டு அம்சங்கள் உள்ளன.. ஊழல் என்பதை பார்த்தால் இதுவரை ஆண்ட , ஆள்கின்ற கட்சிகள் மீது லஞ்ச லாவண்ய புகார்கள் உள்ளன. பாமக மத்திய அமைச்சர் மீது சி பி ஐ வழக்கு உள்ளது. மற்றபடி சிறுசிறு கட்சிகளை பார்த்தால் மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ளவர்களே 15 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள கார்களில் பவனி வருவதை பார்க்கிறோம்.ரியல் எஸ்டேட்ஸ் கட்டபஞ்சாயத்து போன்ற தொழில்களில் பொதுடைமை கட்சிகள் தவிர எல்லா கட்சிகளும் ஈடுபடுகின்றன.கிட்ட தட்ட அரசியல் ஒரு தொழில் போல ஆகிவிட்டது. லஞ்சம் லாவண்யத்தை பொறுத்தவரை முன்பு மேல்மட்டத்தில் திட்டங்கள் செயல்படுத்துவதில் டெண்டர் முறைகளில் ஊழல் நடந்தன .நடக்கின்றன. அதேபோல் அரசு பணி நியமனங்கள் மாறுதல்கள் ஏன் விருதுகள் பெறுவதில் கூட தொகைகள் கேட்பது வழக்கமாக போய்விட்டது.ஆட்சி மாற்றம் ஆனாலும் இவைகளில் மாற்றம் இல்லை. சொல்லபோனால் கேட்கும் தொகையின் அளவு கூடிகொண்டே போகிறது. இது தவிர தற்போது அன்றாடம் வாரிசு சாதி ,வருமான ,இருப்பிட சான்றிதழ்கள் ,பிறப்பு இறப்பு சான்றிதல் பெறுதல் குடும்ப அட்டை பெறுதல் அல்லது மாற்றங்கள் செய்தல் வீடு இடிக்க மற்றும் கட்ட அனுமதி , குடிநீர் , கழிவு நீர் , மின் இணைப்பு ஆகிய எல்லாவற்றிற்கும் மக்கள் அலைக்கழிக்க படுகிறார்கள் அல்லது அததற்கு ஒரு தொகை வசுலிக்கபடுகிறது. சென்ற தேர்தலின்போது நில அபகரிப்பு ,நியமன மாறுதல்களுக்கு வசூல் ஆகிய இரண்டு காரணங்கள் ஆட்சி மாற்றத்திற்கு உதவின. இந்த தடவை மேற்சொன்ன காரணங்கள் இந்த தேர்தலின் அம்சங்களாக இருக்கலாம்.குறிப்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரிகள் கூட்டணி அமைத்து செய்யும் தொல்லைகளும் முக்கிய அம்சமாக இருக்கும்

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
07-அக்-201512:21:08 IST Report Abuse

ganapati sbபாஜகாவிர்க்கு எதிரான கட்சிகளோடு கூட்டணி என நல்ல கல்வியாளரான ஜவஹர் கூறும்போது அது காங்கிரஸ் அல்லது கம்முநிச்டோடு தான் முடியும் என்பதை புரிந்துதான் சொல்கிரார என தெரியவில்லை. மற்ற தமிழகத்தின் அனைத்து பெரு சிறு கட்சிகளும் பாஜகவோடு கூட்டணி வைத்த கட்சிதான். மதிமுக போல மமக கட்சியில் பிளவு செய்ததும் இவர் கூட்டு சேர நினைக்கும் பெரிய கட்சிகள்தான் என்பதும் புரியாதவரில்லை. பேசாமல் இவர் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் தனித்து நின்று பெரும்பான்மையான முஸ்லிம்களின் வாக்குகளை வாங்கிவிட்டால் பின்னர் கூட்டணிக்கு தானாக மற்றவர்கள் வருவார்கள்.

Rate this:
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா
07-அக்-201511:52:52 IST Report Abuse

புதுகை வானம்பாடி இம்முறை கட்டுமரம் கரை ஏறுகிறது........... அதில் பயணம் செய்பவர்கள் பிழைத்து கொள்வார்கள் ..............110 விதிக்கு மே மதம் முதல் விடுமுறை கிடைக்கும் என்பது உறுதி .....

Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X