சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமதுரை அருகே தண்டவாளத்தில் விரிசல்: விபத்தை தவிர்த்த விவசாயி

Added : அக் 07, 2015 | கருத்துகள் (16)
Share
Advertisement
வடமதுரை:வடமதுரை அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை பார்த்த விவசாயி, சிவப்பு துணியை காட்டி திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை- அய்யலுார் ஸ்டேஷன்களுக்கு இடையே நரசிங்கபுரம் பகுதியில், நேற்று காலை மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது பலத்த
 வடமதுரை அருகே தண்டவாளத்தில் விரிசல்: விபத்தை தவிர்த்த விவசாயி

வடமதுரை:வடமதுரை அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை பார்த்த விவசாயி, சிவப்பு துணியை காட்டி திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை- அய்யலுார் ஸ்டேஷன்களுக்கு இடையே நரசிங்கபுரம் பகுதியில், நேற்று காலை மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது
பலத்த சத்தம் கேட்டுள்ளது. அருகில் கோயில் கட்டுமான பகுதியில் இருந்த நாடுகண்டனுார் விவசாயி ரங்கசாமி இதை கவனித்தார்.தண்டவாள பகுதியில் சென்று சத்தத்திற்கான காரணத்தை தேடியபோது, 'வெல்டிங்' பகுதி உடைந்து விரிசல் ஏற்பட்டிருந்ததை பார்த்தார். உடனே உள்ளூர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சிலுவைமுத்துவுக்கு தகவல் தந்தார். சிலுவைமுத்து ரயில்பாதைக்கு வந்து பார்த்த பின்னர், அவருக்கு தெரிந்த அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.அதற்குள் திருச்சி-- திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், அய்யலுாரை கடந்து வடமதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே இருவரும் சமயோசிதமாக செயல்பட்டு, ரங்கசாமி அணிந்திருந்த சிவப்பு கலர் பனியனை கழற்றி, சுழற்றியபடி ரயில் வந்த திசை நோக்கி ஓடினர்.
இவர்களது எச்சரிக்கையை புரிந்த கொண்ட டிரைவர்கள், ரயிலின் வேகத்தை குறைத்து நிறுத்தினர். விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு சில மீட்டர் முன்னால்
ரயில் நின்றது. தகவலறிந்த வடமதுரை 'கீ-மேன்' பரமசிவம் மற்றும் ஊழியர்கள், இரும்புச் சட்டங்களை பொருத்தி தற்காலிகமாக தண்டவாளத்தை சீரமைத்த பின்னர் புறப்பட்டு சென்றது. இதனால் 40 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
malar - chennai,இந்தியா
09-அக்-201504:02:58 IST Report Abuse
malar மிக அருமையாக செயல்பட்ட ரங்கசாமி சிலுவை முத்துவிற்கு என் பாராட்டுகள். ஆண்டவர் தாமே இவர்களை ஆசிர்வதிப்பாராக...
Rate this:
Cancel
Maha - New york,யூ.எஸ்.ஏ
08-அக்-201521:10:52 IST Report Abuse
Maha நான் வாஷிங்டனில் இருந்து எழுதுகிறேன். இந்த செய்தி படித்தவுடன் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, விபத்து தடுக்கப்பட்டுள்ளது, உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளன. அதே சமயம், இந்த உயிர் காத்த நல்ல மனிதர், ரெங்கசாமி, பார்த்தவுடன், எங்கோ பார்த்த யாபகம் வந்தது. இவர் ஏன் உறவினர்- ஒன்று விட்ட சகோதரர். (My cousin). :).
Rate this:
Cancel
sudhapriyan - riyadh,சவுதி அரேபியா
08-அக்-201517:15:19 IST Report Abuse
sudhapriyan ரங்கசாமி மற்றும் சிலுவை முத்துக்கு வாழ்த்துக்கள். எத்தனை உயிர்களை காப்பாற்றிய நீங்களும் ஒரு கடவுள் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X