அதிசயம்...ஆச்சரியம்...இமயம்: நடக்கும் மீன், தும்மும் குரங்கு : 211 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு | Dinamalar

அதிசயம்...ஆச்சரியம்...இமயம்: நடக்கும் மீன், தும்மும் குரங்கு : 211 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

Added : அக் 08, 2015 | கருத்துகள் (3) | |
இமயமலை அதிசயம் நிறைந்த உலகம். இங்கு பாம்பு தலை கொண்ட நடக்கும் மீன்கள், தும்மும் குரங்கு, சத்தமாக பாடும் பறவை, ஊதா நிற கண்களை உடைய தவளை, விசித்திரமான வாழை, அற்புதமான பூக்கள் என 211 வகையிலான புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு இமயமலையில் சமீபத்தில் ஆய்வுகள் நடந்தன. இப்பகுதி 'ஆசியாவின் அற்புதம்' என அழைக்கப்படுகிறது. இது, அரிய உயிரினங்களின் இடமாக திகழ்கிறது.
அதிசயம்...ஆச்சரியம்...இமயம்:  நடக்கும் மீன், தும்மும் குரங்கு :  211 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

இமயமலை அதிசயம் நிறைந்த உலகம். இங்கு பாம்பு தலை கொண்ட நடக்கும் மீன்கள், தும்மும் குரங்கு, சத்தமாக பாடும் பறவை, ஊதா நிற கண்களை உடைய தவளை, விசித்திரமான வாழை, அற்புதமான பூக்கள் என 211 வகையிலான புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு இமயமலையில் சமீபத்தில் ஆய்வுகள் நடந்தன. இப்பகுதி 'ஆசியாவின் அற்புதம்' என அழைக்கப்படுகிறது. இது, அரிய உயிரினங்களின் இடமாக திகழ்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் (அருணாசலப்பிரதேசம், சிக்கிம், மேற்கு வங்காளம்), பூடான், நேபாளம், மியான்மர் மற்றும் தெற்கு திபெத் ஆகியவை இங்கு உள்ளன. கடந்த 2009 முதல்- 2014 வரை ஆராய்ச்சி செய்த போது புதிய வகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன என இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (டபிள்யூ.டபிள்யூ.எப்.,) தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1998 முதல் 2008 வரையிலான காலத்தில் 354 வகையிலான உயிரினங்கள் கண்டறிப்பட்டன.


பாம்பு தலை மீன்கள் :

சன்னா ஆன்ட்ரா என்ற இவ்வகை மீன்கள் நிலத்திலும் வாழக்கூடியவை. பாம்பு தலை கொண்ட இந்த மீன்கள் தொடர்ந்து 4 நாட்கள் நிலத்தில் வாழும். மற்ற விலங்குகளிடமிருந்து பதுங்கி வாழும். இவை மேற்கு வங்க பகுதியில் காணப்படுகின்றன.


வித்தியாசமான வாழை :

இந்த புதிய வகை வாழை மரத்தின் பூ, சாதாரண வழைப் பூவில் வித்தியாசமுடையது. இதற்கு பிரபல 'வாழைப்பழ' விஞ்ஞானி மர்க்கு ஹாக்கினன் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


மழையை கணிக்கும் குரங்கு :

"ஸ்னப்பி' என அழைக்கப்படும் இந்த குரங்கு தனது சுவாசத்தின் மூலம் மழை வருவதை முன் கூட்டியே கணித்து விடும். மழையில் நனைந்தால் மனிதர்களை போல தும்மும். இதை தவிர்ப்பதற்காக மழைக்காலங்களில் தனது தலையை முழங்காலோடு சேர்த்து வைத்துக்கொள்ளும். இது மியான்மர் பகுதியில் வாழ்கின்றன.

ஊதா நிற கண்களுடைய தவளை
சத்தமாக பாடும் பறவை
பெண்கள் அணியும் தங்க நகைகள் போன்ற பாம்பு

*211 புதிய உயிரினங்கள் எவை
*133 தாவர வகைகள்
*26 மீன் வகைகள்
*39 முதுகெலும்பில்லாத உயிரினங்கள்
*10 நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள்
*1 ஊர்வன
*1 பறவை
*1 பாலுட்டி


எத்தனை உயிரினங்கள்:

* 10,000 தாவர வகைகள்
* 977 பறவையினங்கள் வாழ்கின்றன.
* 300 புலி, சிறுத்தை உள்ளிட்ட பாலூட்டிகள்
* 269 நன்னீரில் வாழும் மீன்வகைகள்
* 176 ஊர்ந்து செல்பவை
* 105 நீர் நிலத்தில் வாழ்பவை

100: சுமார் 100 கோடி மக்கள் பனிபடர்ந்த இமயமலையை குடிநீருக்காக நம்பி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X