அரசியல் செய்தி

தமிழ்நாடு

குஷ்புக்கு 'செக்' வைக்க களமிறங்கும் நக்மா?

Added : அக் 10, 2015 | கருத்துகள் (6)
Advertisement
 குஷ்புக்கு 'செக்' வைக்க களமிறங்கும் நக்மா?

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் நக்மாவை வைத்து, கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவுக்கு, 'செக்' வைக்க, கட்சித் தலைவர்கள் சிலர் முயற்சிப்பதாக, அக்கட்சிவட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த, 2009ம் ஆண்டு, லோக்சபா தேர்தலுக்கு முன், நடிகை நக்மா, காங்கிரசில் இணைந்தார். முக்கியத்துவம்அவர், வட மாநிலங்களில் கட்சிக்காக, தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கட்சி படுதோல்வி அடைந்து விட்டது. ஆனாலும், அவர் காங்கிரசிலேயே இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு கட்சியில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், நக்மாவுக்குப் பின், காங்கிரசில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு, கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அவருக்கு, அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுஉள்ளது. இதனால், தமிழக காங்கிரசில் அவர் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கூடவே, அவர் கட்சியில் தனக்கென ஒரு கோஷ்டியையும் உருவாக்கி
வருவதாகவும் தெரிகிறது. சமீபத்தில், தன் பிறந்த நாள் விழாவை, வெகு விமரிசையாக அவர் கொண்டாட, கட்சியின் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், குஷ்பு வின் அசுர வளர்ச்சியும், அவருக்கு கட்சியினர் கொடுக்கும் முக்கியத்துவமும், கட்சித் தலைவர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை.
அதனால், குஷ்புக்கு போட்டியாக, முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஹசீனா சையதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியை வழங்குவதோடு, நக்மாவுக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் கொடுக்க, மேலிடத்தில் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக மகளிர் காங்கிரசில்,
ஏற்கனவே பல கோஷ்டிகள் இருந்தாலும் புதிதாக குஷ்பு கோஷ்டியும் உருவாகி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த, பலரும் டில்லி மேலிடத்தை வலியுறுத்துகின்றனர்.
இதற்காக, டில்லி சென்று தலைமையை வலியுறுத்துகின்றனர். அதற்கேற்றார் போல, நக்மாவை, தமிழகம் மற்றும் ஆந்திர மாநில மகளிர் காங்., மேலிட பொறுப்
பாளராக நியமிக்கவும், தேர்தலுக்கு முன், நக்மாவை தமிழகம் அழைத்து வந்து தீவிர பிரசார பயணம் மேற்கொள்ள வைக்கவும், கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி
உள்ளனர். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sutha - Chennai,இந்தியா
12-அக்-201506:13:34 IST Report Abuse
Sutha நக்மா ஏற்கனவே கிறித்தவ பிரச்சார பீரங்கியாக இருப்பதால் அவருக்கு சோனியா இந்த பதவியைக் கொடுத்திருக்கிறார் போல் தெரிகிறது.ராஜீவ் காலத்திலிருந்தே எப்பவும் கிறித்தவ காங்கிரசாக இருப்பதில்தான் அவர்களுக்கு சந்தோசம்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-அக்-201520:01:57 IST Report Abuse
Pasupathi Subbian நக்மாவுக்கு அடுத்தது நமீதா வருவாரா. தலைவர்கள் ஆவல். காந்தியின் கனவு இப்போது நடிகர்கள் கையில்
Rate this:
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-அக்-201516:08:00 IST Report Abuse
Sriram V இது சாவுற கட்சி, அவங்க தலைவரே கட்சியியை அடக்கம் செய்து விடுவார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X