சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடி

Added : அக் 11, 2015
Advertisement

செம்பியம்: செம்பியத்தில், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, பலகோடி ரூபாய் மோசடி செய்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், காந்தி கிராமம் நீலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா, 53. தேவாலயம் ஒன்றில் பிரசங்கம் செய்து வந்தாள். அங்கு, பொருளாதார பிரச்னைக்காக பிரார்த்தனை செய்ய வருவோரிடம், 'பணத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கான வழிமுறை கள் தெரிந்த நபர்களை எனக்கு தெரியும்' என கூறி, அவர்களை, துாத்துக்குடி மட்டக்கடை, தட்டார் தெருவைச் சேர்ந்த தாம்சன் என்ற ஜோயல், 24, என்பவனிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.

தாம்சன், அந்த நபர்களிடம், பத்து லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தான். இவ்வாறு, ௧௫க்கும் மேற்பட்டோர், அவனிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழந்த தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெரம்பூர், எம்.பி.எம். தெருவைச் சேர்ந்த வடிவேல், 30, என்பவரிடம், மல்லிகாவும், தாம்சனும், இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் கேட்டனர்.
சந்தேகம் அடைந்த வடிவேல், செம்பியம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதையடுத்து, போலீசார், மல்லிகா, தாம்சன், மதுரையை சேர்ந்த முகமது யூசுப், 22, துாத்துக்குடியை சேர்ந்த செபஸ்டின், 39, ஆகியோரை கைது செய்தனர்.

கைதான நபர்கள் விசாரணை யில் கூறியதாவது: எங்களுக்கு, இதுபோல் பணத்தை இரட்டிப்பாக்கி ஏமாற்றும் வித்தையை சொல்லி தந்தது துாத்துக்குடி, பேருந்து நிலையம் அருகே உள்ள பிரதீப், 40, என்பவன் தான். நிறைய பேருக்கு அவன் சொல்லி கொடுத்துள்ளான். அவர்களும் எங்களைப் போல், பல இடங்களில் மோசடி செய்து வருகின்றனர். நாங்கள் போலீசிடம் சிக்கிக்கொண்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். போலீசார் கூறுகையில், 'இந்த நபர்களால் பாதிக்கப்பட்டோர் எங்களிடம் புகார் அளிக்கலாம். பிரதீப்பை பிடிக்க தனிப்படை துாத்துக்குடிக்கு விரைந்துள்ளது' என்றனர்.

ஆட்டையை போட்டது எப்படி?
கைது செய்யப்பட்டோர் அளித்த வாக்குமூலம்: தொழில் அதிபர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களை முதலில் குறிவைப்போம். பின், அவர்களை அணுகி, கறுப்பு காகிதத்தை பணமாக மாற்றும் வித்தையை கற்று தருவதாக தெரிவிப்போம். அவர்களை பேச்சில் மயக்கி சம்மதம் பெறுவோம்.
எங்களிடம் மசியும் நபர்களை, ரகசிய இடத்திற்கு அழைத்து செல்வோம். அங்கு, ஒரு பாத்திரத்தில், காயத்திற்கு போடும் 'டிஞ்ஜரை' அளவுக்கு அதிகமாக ஊற்றுவோம். அதன் உள்ளே, அவர்களுக்கு தெரியாமல் ஏற்கனவே பணத்தை போட்டு வைத்து இருப்போம். பின், 'டிஞ்ஜர்' ஊற்றப்பட்ட பாத்திரத்தில், ரூபாய் நோட்டு அளவு கொண்ட கறுப்பு காகிதத்தை போடுவோம். அந்த காகிதம் டிஞ்ஜரில் கரைந்துவிடும் அதன் பின், பாத்திரத்தில் உள்ள டிஞ்ஜரை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு, பாருங்கள், கறுப்பு நிற காகிதம் ரூபாய் நோட்டாக மாறிவிட்டது என, தெரிவிப்போம். இதை நம்பி, பலர் ஒரு கோடி ரூபாய் வரை தந்தனர். அதற்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்பு நிற காகிதத்தை கொடுத்து மோசடி செய்தோம். டிஞ்ஜரில் மூழ்கடிக்கப்பட்ட காகிதம், நிறம் மாறி இருக்கும் என்பதால் பலர் சந்தேகம் அடைவர். அதற்காக, 'புகைப்பட பிலிம் கழுவும் திரவத்தில் போட்டு எடுத்து, பளபளக்கும் ரூபாய் நோட்டுகளாக மாறிவிட்டது பாருங்கள்' என்போம். இதை நம்பி, பலர் ஒரு கோடி ரூபாய் வரை தந்தனர். அதற்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்பு நிற காகிதத்தை கொடுத்து மோசடி செய்தோம்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X