அரசியல் செய்தி

தமிழ்நாடு

நக்மாவுக்கு பொறுப்பு குஷ்பு வெறுப்பு?

Added : அக் 15, 2015 | கருத்துகள் (34)
Advertisement
 நக்மாவுக்கு பொறுப்பு குஷ்பு வெறுப்பு?


தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மகளிர் காங்., மேலிட பொறுப்பாளராக, நடிகை நக்மா நியமிக்கப்பட்டு உள்ளார்.அகில இந்திய மகளிர் காங்., பொதுச் செயலராக, நடிகை நக்மா, செயலராக, ஹசீனா சையது ஆகியோர், சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். தேசிய நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கு, மாநிலங்களில் கட்சி விவகாரங்களை கவனிக்க, மேலிடப் பொறுப்பு வழங்கப்படுவது, காங்கிரசின் வழக்கம்.
அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மகளிர் காங்., மேலிட பொறுப்பாளராக நக்மாவும்; கேரளா மற்றும் லட்சத்தீவு மாநில மேலிட பொறுப்பாளராக, ஹசீனா சையதும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சத்தியமூர்த்தி பவனில், இன்று காலை நடக்கும் நிகழ்ச்சியில், நக்மா மற்றும் ஹசீனா ஆகிய இருவரும், தமிழக காங்., தலைவர் இளங்கோவன் முன்னிலையில் பொறுப்பேற்கின்றனர்.அவர்களை வரவேற்க, தமிழக காங்கிரசார் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிகழ்ச்சியை, அகில இந்திய காங்., செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு புறக்கணிப்பார் என, தகவல் பரவியிருக்கிறது. இதனால், காங்கிரசினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தமிழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: துாத்துக்குடியில், 17ம் தேதி, மண்டல மாநாடு நடக்கிறது. மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், இதில் பங்கேற்கிறார். தமிழக மகளிர் காங்கிரசில் நிலவும் கோஷ்டிப் பூசலுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நக்மா, குஷ்பு, ஹசீனா சையது, விஜயதாரணி ஆகியோரை, ஒரே மேடையில் கைகோர்க்க வைக்க, அவர் திட்டமிட்டு உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

***

Advertisement


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - சென்னை,இந்தியா
16-அக்-201521:33:06 IST Report Abuse
தமிழன் நக்மா வாழும் இந்திரா காந்தி. ஒரு தலை சிறந்த நிர்வாகி. குஷ்பு, வாழும் மணியம்மை. இந்தியாவை மீட்டெடுக்க வந்த திலகங்கள். :-) எப்புடீ?
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
16-அக்-201520:10:10 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> சினிமாகாரிகளை நம்பும் காங்கிரெஸ் பொதுமக்களை கண்டுக்கறதே இல்லே. அதனால் பொதுமக்களும் வோட்டுபோடும்போது காங்கிரசுக்கு நாமம் பட்டையா போடுறாக
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-அக்-201520:00:18 IST Report Abuse
Pasupathi Subbian இவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டதால் இனி அக்கட்சி தலைவர்கள் நடிக்கபோய்விடலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X