சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியுடன் 'உல்லாசம்'மதபோதகர் கைது

Added : அக் 16, 2015 | கருத்துகள் (3)
Advertisement

வேலுார்: மாணவியுடன், 'உல்லாசமாக' இருந்து விட்டு, திருமணத்துக்கு மறுத்த கிறிஸ்தவ மதபோதகர் கைதானார்.வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த ஜலகாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது பெண், அருகில் உள்ள அரசு பெண்கள் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, அப்துல்லாபுரத்தைச் சேர்ந்த தீபக்குமார், 47, ஜலகாம்பாறை அருகே உள்ள, மிட்டூர் கிறிஸ்தவ தேவாலயத்தில், மதபோதகராக இருந்து வருகிறார்.தேவாலயத்துக்கு, அடிக்கடி மாணவி சென்றபோது, மதபோதகருடன் பழகி உள்ளார். இதையடுத்து, அவர், பல இடங்களுக்கு, மாணவியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம், மாணவியை, சென்னைக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, அவருடன் மதபோதகர், 'உல்லாசமாக' இருந்ததாக தெரிகிறது. இதன்பின், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, அவரை, மாணவி வலியுறுத்தியதற்கு, மறுப்பு தெரிவித்து உள்ளார்.
அத்துடன், 'சம்பவத்தை வெளியே தெரிவித்தால், கொலை செய்துவிடுவேன்' எனவும், மதபோதகர் மிரட்டி உள்ளார். இதுகுறித்து, திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசில், மாணவி புகார் கொடுத்தார். வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, மதபோதகர் தீபக்குமாரை கைது செய்தனர்.

***

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suman - Lucknow  ( Posted via: Dinamalar Android App )
16-அக்-201521:48:42 IST Report Abuse
suman போலி மதசார்பின்மைவாதி யாரையும் காணும் ஓ தப்பு செய்தது இந்து மதத்தவன் இல்லை அதனாலயா
Rate this:
Share this comment
Cancel
malar - chennai,இந்தியா
16-அக்-201509:04:53 IST Report Abuse
malar மத போதகர் செய்தது மிகவும் தவறு தான் சரி.. நான் தலையில் அடித்து கொள்கிறேன். வாக்குறுதி கொடுத்தா நம்பி உடனே ஒப்பு கொள்வாளா, அப்புறம் கேட்பவள் முதலிலேயே கேட்டு திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டியதுதானே. அப்போ இந்த பெண்ணின் தப்பும் இருக்கிறது அல்லவா.... எந்த வேலை செய்தாலும் ஆண் ஆண் தானே. இவர்களால் அனாவசியமாக போலிசுக்கு வேலை... இதெல்லாம் யார் காசு ?மக்கள் வரி பணம் ..
Rate this:
Share this comment
Cancel
Vijay_USA - Philadelphia,யூ.எஸ்.ஏ
16-அக்-201506:34:35 IST Report Abuse
Vijay_USA தீபத்துக்கு கொஞ்சம் 'திரிய' கிள்ளி போடணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X