தண்டனை... மாணவருக்கா, ஆசிரியருக்கா?

Updated : அக் 18, 2015 | Added : அக் 18, 2015 | கருத்துகள் (30) | |
Advertisement
மாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், இன்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கத் துவங்கிஉள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது?இளமை காலத்தில் மாணவர்கள் அதிகப்படியான நேரத்தை
தண்டனை... மாணவருக்கா, ஆசிரியருக்கா?

மாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், இன்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கத் துவங்கிஉள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது?

இளமை காலத்தில் மாணவர்கள் அதிகப்படியான நேரத்தை பள்ளியில் தான் செலவிடுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் தாய், தந்தை இருவருமே வேலைக்குச் சென்று விடுவதாலும், தனிக்குடும்பங்களாக வாழ்வதாலும், குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு, ஆசிரியர்களுக்கே அதிகம் உள்ளது.ஆனால், இன்றைய மாணவர்கள் தாங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும்; யாரும் தங்களை உடல் ரீதியாக, மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது என, நினைக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள், 'தற்கொலை' என்ற மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஆசிரியர்கள் தான். இன்றைக்கு ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் மாணவர்களை கண்டித்து நல்வழிப்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனால், அதே நேரத்தில் கல்வி அதிகாரிகளின், 100 சதவீத தேர்ச்சி என்ற நிலையை எட்டியாக வேண்டிய கட்டாயம் என, இருதலைக் கொள்ளி எறும்புகளாக ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால், 'சிறைத் தண்டனை' என ஒரு செய்தி வந்தாலும் வந்தது, ஆசிரியர்களின் மரியாதை அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இச்செய்தியைப் பார்த்த, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட, 'இனிமே எங்க மேலே கை வைக்க முடியாது' என பேசிக் கொண்டனர் என்பதே இதற்கு சாட்சி.மாணவர்களை அடிக்கக் கூடாது என நினைப்பது தவறில்லை. ஆனால், அதை ஏன் ஊடகங்களில் வெளியிட்டு மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்? ஆசிரியர்களுக்கு மட்டும் சுற்றறிக்கை அனுப்பி எச்சரிக்கை விடுக்கலாமே. அவ்வாறு செய்யாததன் விளைவு பொய்யான புகார்கள், பாலியல் தொந்தரவு உள்ளிட்டவை, மிரட்டல்கள், தற்கொலை முயற்சிகள்.சமீபத்தில், மதுரையில் உள்ள கிராமப் புற நடுநிலைப் பள்ளி மாணவியர் சிலர், பேன் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். காரணம் கேட்டால், தலைமை ஆசிரியர் திட்டியதால் என்கின்றனர். இதனால் அந்த ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.

மற்றொரு மாவட்டத்தில், மாணவரை ஆசிரியர் அடித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற பல சம்பவங்கள் நாடு முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. திட்டினாலும், அடித்தாலும் ஆசிரியர்களுக்கு சஸ்பெண்ட் உத்தரவு வழங்கினால், மாணவர்கள் திருந்துவது எப்போது? மாணவரை திருத்துவது யார்?அந்தக் காலத்தில் நாம் ஆசிரியர்களிடம் அடிவாங்கவில்லையா? அப்படியே அடி வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து சொன்னால், நம்மிடம் பெற்றோர் கேட்கும் முதல் கேள்வி, 'நீ என்ன செஞ்ச?' என்பதாகத் தானே இருக்கும். நம்மை நல்வழிப்படுத்த பெரியோர் கொடுக்கும் சில தண்டனைகள் எப்படி குற்றமாகும்? சின்னஞ்சிறுவராய் இருக்கும்போதே திருத்தினால் தானே உண்டு. 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பர். அப்படிப்பட்ட சூழலில் ஆசிரியர்களின் திட்டுதல் மற்றும் அடித்தல் என்பது பழி வாங்கும் நோக்கில் செய்யப்படும் தண்டனை அல்ல என்பதை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.ஆசிரியருக்கும், மாணவருக்கும் இடையே ஏன் இந்த பிளவு என்பதை சற்று ஆராய்ந்தால் சில உண்மைகள் புலப்படும்.ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேக்கம் அளிக்காமல், தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் உள்ளது.

முன்பு கல்வியில் அடிப்படை திறன்கள் மாணவர்களுக்கு தெரியவில்லை என்றால், ஆரம்ப வகுப்புகளிலேயே வடிகட்டி தேர்ச்சி அளிப்பர். பெயிலாக்கி மீண்டும் படிக்க வைப்பர். அதனால், பெரியவர்களாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும்போது, பாடப்பகுதிகளை புரிந்து கொள்ளும் திறனை பெறுவர். இதனால், ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் பணி சிரமம்
இல்லாமல் இருந்தது.

ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக உள்ளது. 8ம் வகுப்பு வரை மாணவன் பள்ளிக்கு வருகிறானா, இல்லையா... படிப்பானா, இல்லையோ... 'பாஸ்' என்ற நிலை வந்தது விட்டது. அதனால், மாணவனுக்கு குறிப்பாக கிராமப்புற மாணவனுக்கும், பெற்றோருக்கும் கல்வியின் மேல் சிரத்தை இல்லாமல் போய் விட்டது. அதனால், அம்மாணவன் படிப்பை தவிர, மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தும் வாய்ப்பு ஏற்படுகிறது. இப்படிப்பட்ட மாணவர்கள் உயர் வகுப்புகளுக்கு செல்லும்போதும், 10ம் வகுப்பில் பொதுத் தேர்வை சந்திக்கும்போதும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எட்டு ஆண்டுகள் வரை படிப்பில் கவனம் செலுத்தாமல், 'பாஸ்' செய்து கொண்டே வந்தவன், கடைசியில் இரண்டு ஆண்டுகளில் வெற்றிக் கோப்பையை எட்டுவதற்குள் விழி பிதுங்குகிறான். அவனை, 'பாஸ்' என்ற நிலைக்கு கொண்டு வர ஆசிரியர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

100 சதவீத தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடுகையில், ஆசிரியர்கள் மாணவர்களை படிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். தேர்ச்சி காண்பிக்கவில்லை என்றால் வேறு பள்ளிகளுக்கு மாற்றம், விளக்கம் கொண்டுக்க வேண்டிய கட்டாயம் போன்ற பல இடர்பாடுகளை தலைமை ஆசிரியரும், பாட ஆசிரியர்களும் சந்திக்கின்றனர். இந்த முரண்பாட்டை கல்வித் துறை அதிகாரிகள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

மேலும், பெற்றோர் கொடுக்கும் அளவுக்கதிகமான சுதந்திரம், மாணவர்களை தவறான பாதைக்கு திசை திருப்பி விடுகிறது. இதனால் மாணவர்கள், 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என அலைகின்றனர். பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறி விடுகின்றனர். போதை பழக்கம், தவறான சேர்க்கை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.எனவே, சமுதாயம் சிறந்தோங்க வேண்டுமெனில், ஆசிரியர்களின் கண்டிப்பு மிக மிக அவசியம் என்பதை கல்வித் துறையும், பெற்றோரும் உணர வேண்டும்.
sr.shanthi39@gmail.com
- எஸ்.ஆர்.சாந்தி -
சமூக ஆர்வலர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (30)

Ravi Thinakaran - Batticaloa,இலங்கை
10-நவ-201520:46:46 IST Report Abuse
Ravi Thinakaran இந்தக் கட்டுரையில் எந்த தவறும் இல்லை. இப்பொழுது ஆசிரியர்களுக்குத்தான் கட்டுப்பாடு அதிகமே தவிர மாணவர்களுக்கு சட்ட ரீதியான கட்டுப்பாடு எதுவும் இல்லை. இப்படி இருந்துகொண்டு எவ்வாறு மாணவர்களின் பெறுபேற்றை ஆசிரியர் கூட்டுவது? இதெல்லாம் வேறொன்றுமில்லை. உதவி செய்வதாக சொல்லும் உலகமயவாக்க ஏகாதிபத்திய வாதிகள் எமது முன்னேறி வரும் நாடுகளை வளராமல் தடுக்கும் சூழ்ச்சியான உபாயம் தான் இது. ஏனென்றால் மிகவும் முக்கியமான நாடு என்று உலகம் போற்றுகின்ற ஒரு பெரிய நாடே 'சர்வதேச சிறுவர் உரிமைகள் பட்டயத்'தில் கைச்சாத்திடாதபோது எம்மவர்கள் மட்டும் இந்த சதிக்கு இரையகிப்போனார்கள். ஆசிரியர்களை கட்டுப்படுத்த சட்டங்கள் இருந்தால் மாணவர்களையும் பெற்றோரையும் கட்டுப்படுத்த கட்டாயம் சட்டங்கள் வேண்டும்.மற்றைய எல்லாம் வெட்டிப்பேச்சு
Rate this:
Cancel
Sindhu Babu - Madurai,இந்தியா
06-நவ-201523:28:27 IST Report Abuse
Sindhu Babu இந்த கட்டுரை முழுக்க முழுக்க ஆசிரியரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால்அதை எப்படி சாத்தியபடுத்த வேண்டும் என்பது ஆசிரியரின் நடவடிக்கையில் தான் உள்ளது. காரணம் மாணவர்கள் சமுகத்தின் கண்ணாடி. ஒரு சமுகம் எப்படி செயல்படுகிறதோ அதன் பிரதிபலிப்பாகவே மாணவர்கள் இருப்பார்கள். ஒரு மாணவனின் சமுகம் என்பது பெரும்பகுதி ஆசிரியரை சார்ந்தே உள்ளது. அவன் தனது வாழ்வில் பெரும்பகுதியை பள்ளியில் தான் செலவிடுகிறான். " இன்றைய மாணவர்கள் தாங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் யாரும் தங்களை உடல் ரீதியாக, மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது என, நினைக்கின்றனர். // என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்த வாக்கியத்திலேயே வன்முறை உள்ளது. மாணவன் ஒன்றும் ஆசிரியரின் அடிமை இல்லையே உங்களின் துன்புறுத்தல்களை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சம்பவகளை மட்டுமே கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த மாணவர்களும் ஆசிரியர்களை மிரட்டுவதை போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் 1980 களில் ஆசிரியரின் கண்டிப்புக்கும் பிரம்படிக்கும் பயந்து பள்ளி செல்லாமல் வாழ்வை தொலைத்தவர்களின் எண்ணிக்கை கணிசமானது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இன்றைய மாணவனின் நிலை என்பது எதோ ஓர் இரவில் ஒட்டுமொத்தமாக மாற்றிஅமைக்கப்படதல்ல. பல சமுக ஆர்வலர்களும், நீதிமான்களும் , உண்மையான ஆசிரியர்களும் கலந்து ஆலோசித்து.. கொண்டுவரப்பட்ட மாற்றமாகும். இன்னும் கொண்டுவரப்படவேண்டிய மாற்றங்கள் ஏராளம் ..அவைகளும் சாத்தியமாகும் காலம் மிக அருகில் தன் உள்ளது. அன்பில் மூலம் மாணவர்களை அனுககூடியவர்களுக்கு மட்டுமே இனி ஆசிரியப்பணி சாத்தியமாகும் ...
Rate this:
A.Natarajan - TRICHY,இந்தியா
08-நவ-201509:08:44 IST Report Abuse
A.NatarajanSir, Teachers are God. No doubt in this. All students are equal. Concentrate on your students capability and improve your s level continuously. Learning computer ss for teachers is a must. Then only the teachers can impart quality education.The quality of students depend on quality of teachers. So first improve your standards. Sacrifice your life for making INDIA strong and it is in your hands to bring prosperity to students life....
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
29-அக்-201504:47:57 IST Report Abuse
Manian எஸ்.ஆர்.சாந்தி - சமூக ஆர்வலர்: அம்மா, நீங்க ஒரு கலவை சோறில்லெ தந்திருக்கீங்க.இதெல்லாம் பிரிச்சு உதாரணமாக, மாணவர்கள் குற்றம் -30%, ஆசிரியர் குற்றம் -40%, பெற்றோர் குற்றம்-25%, அரசியல் வியாதிகள், பள்ளி அதிகாரிகள் குற்றம் 5% - இந்த மாதிரி விவரம் இல்லையே." மாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. " - அது சரி, அந்தக் காலத்திலே இருந்தவனகுக மாதிரி யாரு, எத்தனை சதவிகிதம் இப்போ இருக்காங்கண்ணு புள்ளி வெவரம் இருக்கா?எந்த மாதிரி ஊரிலே எந்த மாதிரி பிரச்சினை இருக்குன்னு வேவரம் இருக்கா? மனோ நிலை சரி இல்லாதவர்கள்- மன அழுத்தம், ஏழ்மை, வழி காட்டி இல்லாமை, தாய் வயிற்றில் இருக்கும் போது ஊட்ட சத்தில்லாமல் பிறந்தவர்கள், மரபணு கோளாறு உள்ளவர்கள், மூளையில் முழு வளர்ச்சி இல்லாதவர்கட், லஞ்சம் கொடுத்து வாங்கி வாழும் 80% மக்கள், கடவுள் இல்லை என்று சொல்லி மக்களை பகுத்தறிவாளிகள் என்ற போர்வையில் ஏமாற்றி கொள்ளை அடித்தவர்கள் , கல்வி சிந்தநை செய்து வாழ்வை முன்னேற்ற என்பதறர்க்கு பதிலாக எப்படியே வேலைக்கு உதவும் என்ற எண்ணம், தகுதியை பின் தள்ளி, சுயநலம் காரணாமாக அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமகா சிந்திக்காமல், அடிப்படை காரங்க்களை நன்றாக ஆராயமல், ஜாதி, மதம், இட ஒகுக்கீடு என்று செய்த மிகப் பெரிய தவறுகளை இப்போது யாரலுமே சரி செய்ய முடியாது. இந்த தண்டனை ஓட்டு மொத்த தமிழ் நாட்டிற்கே சொந்தம். அறிவாளிகள் எப்போவோ பறந்து விட்டார்கள்.முட்டாள்களுக்கு உதவ வர மாட்டார்கள். திருகு வளையார் நமது மக்களை "கால் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கே " கொண்டு சேர்த்து விட்டார். இப்போது ஈவெராவின் திருடர்கள் கழகங்களே எங்கும் நிறைந்துள்ளார்கள். உண்மை கசக்கும், ஒப்புக் கொள்ள மனசு இடம் தராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X