பொது செய்தி

இந்தியா

புல்லட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் ரூ.1 லட்சம் கோடி: 1 சதவீதத்திற்கும் குறைவான வட்டி

Updated : அக் 23, 2015 | Added : அக் 22, 2015 | கருத்துகள் (46)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், முதன் முதலாக மேற்கொள்ளப்பட உள்ள, மிக அதிவேக, 'புல்லட் ரயில்' போக்குவரத்து திட்டத்திற்கு, தொழில்நுட்ப உதவி வழங்க முன்வந்துள்ள ஜப்பான், 1 சதவீதத்திற்கும் குறைவான வட்டியில், கடன் வழங்கவும் உறுதியளித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'வைர நாற்கர திட்டம்' என்ற புதுமையான ரயில்வே திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், சென்னை,
Rs 1 lakh crore in Japan

புதுடில்லி: இந்தியாவில், முதன் முதலாக மேற்கொள்ளப்பட உள்ள, மிக அதிவேக, 'புல்லட் ரயில்' போக்குவரத்து திட்டத்திற்கு, தொழில்நுட்ப உதவி வழங்க முன்வந்துள்ள ஜப்பான், 1 சதவீதத்திற்கும் குறைவான வட்டியில், கடன் வழங்கவும் உறுதியளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'வைர நாற்கர திட்டம்' என்ற புதுமையான ரயில்வே திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா ஆகிய நகரங்கள் இடையே, 10 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு மிகஅதிவேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

இதில், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து, குஜராத்தின் ஆமதாபாத் வரை, 505 கி.மீ.,க்கு, 'புல்லட் ரயில்' பாதை அமைக்கும் திட்டமும் அடங்கும். இத்திட்டத்தை செயல் படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த ஜப்பான், அது தொடர்பான அறிக்கையை, மத்திய அரசிடம் அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், 'திட்டத்திற்கான தொழில்நுட்ப உதவியுடன், 1 சதவீதத்திற்கும் குறைவான வட்டியில், லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கவும் தயார்' என, தெரிவித்துள்ளது.
வழக்கமாக, திட்டத்திற்கான தொழில்நுட்பம் அல்லது நிதி என, ஏதாவது ஒன்றைத்தான், ஒப்பந்த நாடுகள் தேர்வு செய்யும். ஆனால், அதற்கு மாறாக, ஜப்பான் நாடு, புல்லட் ரயில் திட்டத்திற்கு தொழில் நுட்ப உதவி வழங்குவதுடன், நிதியுதவி வழங்கவும் முன்வந்துள்ளது. ஜப்பானின் இந்த முடிவுக்கு, சீனா தான் காரணம் என, கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக, தெற்காசிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் அடிப்படை கட்டமைப்பு பணிகளில், சீனா அதிக அளவில் முதலீடு செய்து, ஜப்பானுக்கு கடும் போட்டியாக விளங்குகிறது.

அண்மையில், தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியா வில், ஜகர்தா - பான்டுங் இடையிலான, முதல் மிக அதிவேக ரயில் போக்குவரத்து திட்டத்தை, சீனா தட்டிச் சென்றது. இந்த திட்டத்தை பெற்று விடலாம் என, ஜப்பான், பல மாதங்களாக முயற்சித்து வந்த நிலையில், சீனா தட்டிச் சென்று விட்டது.

திட்டம் கைநழுவிப் போக, என்ன காரணம் என, ஜப்பான் ஆராய்ந்தது. அப்போது, சீனா, அந்த திட்டத்திற்கு, எவ்வித உத்தரவாதமும் இல்லாமல், 33 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க முன்வந்திருப்பது தெரிய வந்தது. அதுபோல, இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்தையும், சீனா தட்டிப் பறித்து விடாமல் தடுக்கும் வகையில், ஜப்பான், அவசர அவசரமாக, திட்ட
அறிக்கையுடன், நிதியுதவியும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனால், இந்த பிரம்மாண்ட திட்டம், ஜப்பானுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இருந்த போதிலும், மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்குப் பிறகே, இது குறித்து முடிவு செய்யப்படும் என, ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தோனேஷியாவின் புல்லட் ரயில் திட்டத்தை, சீனா தட்டிப் பறித்து உள்ளது வருத்தம் அளிக்கிறது. இதையடுத்து, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் போக்குவரத்து திட்டம் சார்ந்த முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உத்தர விட்டுள்ளார்.

கெய்ச்சி இஷிபோக்குவரத்து துறை அமைச்சர்,ஜப்பான்

2 மணி நேரத்தில் 505 கி.மீ.,
* மும்பை - ஆமதாபாத் இடையிலான, 505 கி.மீ., துாரத்தை, அதிவிரைவு ரயில், 7 மணி நேரத்தில் கடக்கிறது. இந்த துாரத்தை, புல்லட் ரயில், இரண்டு மணி நேரத்தில் கடந்து விடும்
* இந்த ரயில் தடத்தில், 11 குகைப் பாதைகள் அமைய உள்ளன. அதில், மும்பையில் கடலுக்கடியில் அமைய உள்ள, குகைப் பாதையும் அடங்கும்
* புல்லட் ரயில் திட்டத்தின், 80 சதவீத செலவை, ஜப்பான் ஏற்பதாக தெரிவித்துள்ளது. அதே சமயம், ரயில் பெட்டிகள், ரயில் இன்ஜின்கள் உள்ளிட்ட சாதனங்களில், 30 சதவீதத்தை, தன்னிடம் பெற வேண்டும் என, ஜப்பான் நிபந்தனை விதித்துள்ளது
* இந்திய ரயில்களின் சராசரி வேகம், மணிக்கு, 54 கி.மீ.,
* அதிவேக ரயில்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் என்பதுடன், நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் பெருகும்
* டில்லி - மும்பை இடையிலான அதிவேக ரயில் போக்குவரத்து திட்டத்தை ஆய்வு செய்யும் பணி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தினமும் 2.3 கோடி பயணிகள்:
* இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக, 1962ல் போர் மூண்டது. இப்பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ள போதிலும், இரு நாடுகளின் பரஸ்பர வர்த்தகம் அதிகரித்து வருகிறது
* கடந்த ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு, நாட்டின்அடிப்படை கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இப்பணிகளில், பல நாடுகள் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றன
* இந்திய ரயில்வே, தினமும், 2.3 கோடி பயணிகளை கையாளுகிறது. இதை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், மூன்று கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnamoorthy - chennai,இந்தியா
24-அக்-201512:15:48 IST Report Abuse
krishnamoorthy இதற்க்கு 1 லட்சம் கோடி கடன் தர தயாராக இருக்கும். அதில் 50 % நாட்டின் சரக்கு ரயில் திட்டங்களை விரிவுபடுத்தி துரிதமாக கொண்டு செல்ல தருமா?. ஆக கடன் தர யார் வேண்டுமானாலும் முன் வருவார்கள், வாங்குபவர்கள்தான் தனது இன்றைய தேவை நாளைய தேவை, அடுத்த தலைமுறையின் தேவை என்று சிந்தித்து செயல் படவேண்டும்.
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
23-அக்-201523:26:21 IST Report Abuse
Manian இங்கே எழுதும் பலரும் எதிர்மறை எண்ணங்களியெ வெளி இடுகிறார்கள். இது வருத்தமாக உள்ளது. விண்வெளி தொழிலில் இப்போது நாம் பல மேல் நாடுகளுடன் போட்டி போட முடிகிறது. அதில் வேலையும் பலருக்கு கிடைத்துள்ளது. மேலும் விண்வெளி தாக்குதலுக்கு சைனா தயாரக உள்ள நிலையில் , இப்போது அமெரிக்காவே இந்த தொழில் நுட்ப முன்னேற்றத்தை கண்டு அஞ்சுகிறது. நம்மை காக்க யாரும் இல்லை. பொதுவாக தொழில், ஆராச்சிகள் முன்னேறினால் ஏழை மக்கள் வாழ்வும் முன்னேறும். உணவில்லை, தற்போதய ரயில்களில் தண்ணீர் இல்லை என்பதெல்லாம் உண்மையே. அவற்றை இப்போது யாராலும் தீர்க்க முடியாது. மக்களும் மனம் மாறி அதற்கு உழைக்க வேண்டும். லஞ்சம் குறைய வேண்டும். தகுதி மூலமெ எல்லாம் நடக்க வேண்டும் என்று பல முட்டுக் கட்டைகள் உள்ளன. எந்தப் பொருள் முதலில் வந்தாலும் விலை அதிகமே. அதையே பணக்காரர்கள் வாங்குகிரார்கள். பின்னால் அதுவே விலை குரைய்ந்து மலிவாகிறது. அப்போதுமே பல ஏழைகளும் அவற்ரை வாங்க முடியாது. அதற்க்காக மற்றவர்கள் எல்லாம் இது வேண்டாம் என்று இருகிறார்களா? செல்போன், டிவி, மோட்டார் சைக்கிள், எல்லாம் இப்பதுதானே ஏழைகளை அடைந்துள்ளது. அப்படி ஏழ்மை குறைய்ந்து விட்டதா? ஜப்பான் எதுவுமே இலவசமாக தராது. நாமும் எத்துணை பேருக்கு எல்லாம் இலவசமாக தருகிறோம்.?அவர்கள், சைனாவிடம் பயந்து நம்ககு உதவி செய்ய விரும்புகிறார்கள். அதை உபயோகித்து நாட்டில் புதிய தொழிலில் நுட்பங்களை நாம் உண்டாக்க வேண்டும், ஆக்க வழியில், அறிவுப் பூவர்வமாக முந்நேற்ற பாதையில் செல்ல நினையுங்கள்.
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
23-அக்-201522:48:02 IST Report Abuse
adalarasan கடனை டாலர் ரேட் படி திருப்பிகொடுக்கப்பட வேண்டும். டாலரின் மதிப்பு வருடத்திற்கு பத்து சதவிகிதம் உயருகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதனால்தான், வட்டி குறைவுபோல் மாயமான தோற்றம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X