பொது செய்தி

தமிழ்நாடு

வீலர்களில் ஸ்பெஷல் அலாரம் :விபத்தில் சிக்கினால் ஒலி எழுப்பும்

Updated : அக் 23, 2015 | Added : அக் 23, 2015 | கருத்துகள் (1)
Share
Advertisement
'இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கினால், உடனே அபாய ஒலி எழுப்பும் வகையில், விசேஷ அலாரம் பொருத்த வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.நம்நாட்டில், 2014ல் நடந்த சாலை விபத்துகளில், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர். அதனால், இருசக்கர வாகனங்களில், பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு


'இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கினால், உடனே அபாய ஒலி எழுப்பும் வகையில், விசேஷ அலாரம் பொருத்த வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நம்நாட்டில், 2014ல் நடந்த சாலை விபத்துகளில், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர். அதனால், இருசக்கர வாகனங்களில், பாதுகாப்பு
அம்சங்களை அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, இருசக்கர வாகனங்களில், அபாய ஒலி எழுப்பக்கூடிய, 'ஸ்பெஷல் அலாரம்' பொருத்துவதை, மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. விபத்தில், வாகனம் சிக்கியதும், அக்கருவி பலத்த ஒலி எழுப்பும். அதை கேட்டு, அருகில்
இருப்பவர்களால் உதவிக்கு ஓடி வர முடியும் என்பதால், இந்த ஏற்பாடு.இதுதொடர்பாக, இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுடன், மத்திய சாலை போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்; நிறுவனங்களும், சம்மதம்
தெரிவித்துள்ளன. அதனால், 2017 முதல், விற்பனைக்கு வரும் அனைத்து இருசக்கர வாகனங்களிலும், இந்த கருவி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
மேலும், இருசக்கர வாகனங்களின் முகப்பு விளக்கு, விடாமல் எரியும் வகையிலும், மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, வாகனத்தை இயக்கியதும், முகப்பு விளக்கு எரிய துவங்கி விடும்; அணைக்க முடியாது. இன்ஜினை நிறுத்தும் போது தான், விளக்கு அணையும்.
இரவில், முகப்பு விளக்கு போடாமல் செல்லும் இருசக்கர வாகனங்களால், அதிக விபத்து நிகழ்வதை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தவிர, விலை உயர்ந்த பைக்குகளில் உள்ள, பாதுகாப்பு மிகுந்த பிரேக் வசதியான, 'ஆன்டி - லாக் பிரேக் சிஸ்டம்' வரும், 2016 முதல், சாதாரண பைக்குகளிலும் பொருத்தப்பட வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
24-அக்-201515:07:09 IST Report Abuse
Pasupathi Subbian போக்குவரத்தை மீறும்போதும்,போதையில் வண்டி ஓட்டும்போதும். இரண்டுபேருக்குமேல் பயணம் செய்ய முயலும் போதும் வண்டிகள் ஸ்டார்ட் ஆகாமல் ஆப் ஆகுமாறு கண்டுபிடிக்கவேணும் அப்போது தான் விபத்துகள் குறையும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X