'புட் பேங்க்' குழுவை பார்த்தால் ஏழையின் பசி பறந்து போகும்!

Updated : அக் 26, 2015 | Added : அக் 25, 2015 | கருத்துகள் (10)
Advertisement
தி.நகர்:சென்னையில், வீடின்றி தெருவோரம் பசிக் கொடுமையால் வசிக்கும் ஆயிரம் பேருக்கு, இலவச உணவளிக்கிறது, 'புட் பேங்க்' குழு.தி.நகரை சேர்ந்தவர் சினேகா மோகன்தாஸ், 23; விஷூவல் கம்யூனிகேஷன் பட்டதாரி. அவரது தந்தை மோகன்தாஸ், 63; முன்னாள் துணை ஆட்சியர். சினேகா சினிமா துறையில், தற்போது பின்னணி பாடகியாக இருக்கிறார்.சினேகா ஒருமுறை, மயிலாப்பூர் சாய்பாபா கோவிலுக்கு சென்றபோது,
 'புட் பேங்க்' குழுவை பார்த்தால் ஏழையின் பசி பறந்து போகும்!

தி.நகர்:சென்னையில், வீடின்றி தெருவோரம் பசிக் கொடுமையால் வசிக்கும் ஆயிரம் பேருக்கு, இலவச உணவளிக்கிறது, 'புட் பேங்க்' குழு.தி.நகரை சேர்ந்தவர் சினேகா மோகன்தாஸ், 23; விஷூவல் கம்யூனிகேஷன் பட்டதாரி. அவரது தந்தை மோகன்தாஸ், 63; முன்னாள் துணை ஆட்சியர். சினேகா சினிமா துறையில், தற்போது பின்னணி பாடகியாக இருக்கிறார்.

சினேகா ஒருமுறை, மயிலாப்பூர் சாய்பாபா கோவிலுக்கு சென்றபோது, கோவிலுக்கு வெளியில் தெருவோரம் முதியவர்கள் பலர், பசியோடு இருப்பதை கண்டார். அருகில் உள்ள ஓட்டலில் உணவு பொட்டலங்களை வாங்கி, அவர்களுக்கு கொடுத்து உள்ளார்.அன்று வீடு திரும்பிய அவர், 'இன்று ஒரு நாள் நாம் உணவு வாங்கி கொடுத்து விட்டோம்; இனி வரும் நாட்களில், அவர்களுக்கு யார் உணவு கொடுப்பர்' என, யோசித்தார்.நண்பர்களிடம் அது குறித்து பேசி உள்ளார். அனைவருக்கும் உணவு வழங்குவது சாத்தியமான ஒன்றா? என, சினேகா குழம்பினார். 'நாம், ஏன் பேஸ்புக் மூலம், அதற்கு ஆதரவு திரட்டக்கூடாது' என, யோசித்து உள்ளார்.
உடனே பேஸ்புக்கில், 'புட் பேங்க்' எனும் குழுவை துவக்கினார். அதில், முதலில் தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் சேர்த்துள்ளார். 'புட் பேங்க்' அமைப்பில் யாரும் ஓட்டலில் உணவு வாங்கி கொடுக்கக் கூடாது. வீட்டில் சமைக்கும் போது, கூடுதலாக இரண்டு பேருக்கு சேர்த்து சமைத்து, அதை பசியில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது தான், 'புட் பேங்க்' குழுவின் முக்கிய விதி.
முதலில், 1,000க்கும் மேற்பட்ட நண்பர்கள் சினேகாவின், 'புட் பேங்க்' குழுவில் இணைந்துள்ளனர். ஆரம்பத்தில் தி.நகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு, 55 உணவு பொட்டலங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது, சென்னை முழுவதும், 1,000 உணவு பொட்டலங்கள் கொடுக்கப்படுகின்றன. 'புட் பேங்க்' அமைப்பில் தற்போது, 8,000 பேர் இணைந்துஉள்ளனர்.
சென்னையில் தற்போது, அண்ணா நகர், போரூர். ராயப்பேட்டை என, 14 பகுதிகளில், 'புட் பேங்க்' குழுவில் உள்ளவர்கள், உணவு அளிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். சினேகாவின் இந்த முயற்சி, தற்போது மும்பை, கோல்கட்டா, புனே, கோவா ஆகிய பகுதிகளில், அங்குள்ள மக்களால், 'புட் பேங்க்' தொடங்கப்பட்டுள்ளது. இதே போல, கண் தானம் பற்றி சினேகா எடுத்த குறும்படம் ஒன்று, தேசிய அளவில் நடந்த படவிழாவில், விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'புட் பேங்க்' குழு பற்றி சினேகா கூறியதாவது:இந்த உலகத்தில் கொடிய நோய் பசி. இந்தப் பசியால், நொடிக்கு எத்தனையோ பேர் இறந்து போகின்றனர். ஆனால், அப்படி பசியால் இறந்து போகும் எல்லாரையும் காப்பாற்ற முடியாது. இங்கு என் கண் முன், பசியால் துடிப்பவர்களுக்கு உணவு அளிப்பதே, எங்கள், 'புட் பேங்க்' குழுவின் நோக்கம். இந்த சேவைக்காக, யாரிடமும் பணம் வாங்குவதில்லை.வீட்டில் சமைக்கும் உணவு மட்டுமே வாங்கப்படுகிறது. இந்தக் குழுவில் அனைவரும் சமம். 'புட் பேங்க்' குழுவில், ஐ.டி.,யில் வேலை செய்பவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என, பலதரப்பட்ட மக்கள் அங்கம் வகிக்கின்றனர். இதனால் பிரபலம் ஆவது எங்கள் நோக்கமல்ல. பசியை முற்றிலும் போக்க வேண்டும் என்பதே, எங்களின் விருப்பம்.பசியில் வாடும் மக்களுக்கு வீட்டு உணவு அளிக்க, பேஸ்புக்கில் உள்ள எங்களுடைய, 'புட் பேங்க்' குழுவில் யார் வேண்டுமானாலும் இணைந்து செயல்படலாம். பசியில் துடிக்கும் வயிற்றுக்கு, உணவு அளிக்கும் பணியை, கடவுள் எனக்கு தந்துள்ளார். எதையும் எதிர்பார்க்காமல், மனத்திருப்தியுடன் இந்த சேவையை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்பு எண்: 044 -24331522.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneer - Puduchery,இந்தியா
26-அக்-201522:04:14 IST Report Abuse
Panneer "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் " என்ற பாரதியின் வரிகள் அன்று சொன்னது. இன்று பசியுடன் வறுமையில் உழலும் இயலாதவர்கள் முதியோர் இருந்துகொண்டுதான் உள்ளனர்.. இப்பட்பட்டவர்களுக்கு ஒருவேளை உணவளிக்க தனியார் ஸ்தாபனங்களால் இயலாத காரியம்.. 'புட் பேங்க்' குழுவை பார்த்தால் ஏழையின் பசி பறந்து போகும் என்ற செய்தி மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஆறுதலான செய்தி.. சங்க இலக்கியங்களில் மணிமேகலை அட்சயபாத்திரம் பெற்றதாகவும் அதன் மூலம் பசிப்பினி போக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது...ஒருகாலத்தில் வீடுகளில் அம்மா தாயே என்றால் குடும்ப பெண்மணிகள் பசிக்கு உணவளிக்கும் பரந்த மனப்பன்மையுடன் இருந்தனர்..இன்று பூட்டப்பட்ட இரும்பு கதவுகள்,அடுக்குமாடி என மாறி விட்ட நிலையில் வீடுகளில் பசிக்கு உணவளிப்பது இயலாதததாகி விட்டது...பசியால் வாடாமல் சாகாமல் காப்பற்றவேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடையது.. ஆட்சிபொறுப்பில் வருபவர்கள் போடும் திட்டங்கள் அனைத்துமே பதவியை தக்கவைதுகொள்ளவும் சொத்து குவிக்கவும் மட்டும் தான் ..யாரும் மக்களுக்காக சேவை செய்ய அரசியலுக்கு வருவதில்லை...வேஷதாரிகள் அரசியலில் பிரகாசிக்கிறார்கள். ஜனநாயகம் மக்களுக்காக இல்லை..மக்களை எமார்ருபவர்களுக்காகவே.
Rate this:
Cancel
Sulo Sundar - Mysore,இந்தியா
26-அக்-201519:23:16 IST Report Abuse
Sulo Sundar அற்றார் அழி பசி தீர்த்த அன்ன பூரணியின் தயாள குணத்தால் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்கள் பசியாறுகின்றன.....இந்த நல்ல பெண்ணின் செய்கையால் சென்னையில் இன்னும் பல ஏழைகள் பசி ஆற்றபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது....வாழ்க இவர்கள் தொண்டு அற்றார் அழி பசி தீர்த்தல் அது ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி (பேங்க் லாக்கர் )
Rate this:
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
26-அக்-201517:32:18 IST Report Abuse
Rangiem N Annamalai நல்ல யோசனை நல்ல வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் ஸ்னேகா குழுவினருக்கு . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X