தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் சொல்ல தயங்கும் அதிகாரிகள்!

Added : அக் 27, 2015
Advertisement
"தகவல் அறியும் உரிமை சட்டத்தில், "ஆன்-லைன்' முறையில் விண்ணப்பம் செய்யலாம்னு சொல்றாங்க. ஆனா, நம்மூரிலோ, எந்த கேள்வி கேட்டாலும், பதிலை ஒழுங்கா சொல்றதில்லை. உண்மையை மறைச்சு, மழுப்பலா பதில் சொல்றாங்க,'' என்றபடி, "டிவி'யை "ஆன்' செய்தாள் சித்ரா.தேங்காய் சட்னியுடன், சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜி, முந்திரி பக்கோடா, இஞ்சி டீ கொடுத்து உபசரித்த மித்ரா, "என்னாச்சுக்கா? நீங்க
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் சொல்ல தயங்கும் அதிகாரிகள்!

"தகவல் அறியும் உரிமை சட்டத்தில், "ஆன்-லைன்' முறையில் விண்ணப்பம் செய்யலாம்னு சொல்றாங்க. ஆனா, நம்மூரிலோ, எந்த கேள்வி கேட்டாலும், பதிலை ஒழுங்கா சொல்றதில்லை. உண்மையை மறைச்சு, மழுப்பலா பதில் சொல்றாங்க,'' என்றபடி, "டிவி'யை "ஆன்' செய்தாள் சித்ரா.
தேங்காய் சட்னியுடன், சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜி, முந்திரி பக்கோடா, இஞ்சி டீ கொடுத்து உபசரித்த மித்ரா, "என்னாச்சுக்கா? நீங்க எதுவும் கேள்வி கேட்டீங்களா? யார், மழுப்பலா பதில் சொன்னாங்க,'' என, துருவினாள்.
"அதுவா, திருப்பூர் "மாஸ்டர் பிளான்' நகல் கேட்டும், உள்ளூர் திட்டக்குழும எல்லை மறுசீரமைப்பு செய்திருந்தால், அதன் விவரத்தையும், உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு, தகவல் உரிமை சட்டத்தின் கீழ், ஒருத்தர் கேட்டிருக்கிறார். அதுக்கு, "மாஸ்டர் பிளான்' வரைபடம் வேண்டுமா? அல்லது அட்டவணை வேண்டுமா? என, தகவல் கேட்டவருக்கு மீண்டும் கேள்வி கேட்டு பதில் அனுப்பியிருக்கின்றனர். மற்றொரு கேள்விக்கு, "அரசு உத்தரவுப்படி, சீரமைக்கப்பட்டுள்ளது' என, பதில் சொல்லியிருக்கின்றனர்,'' என்றாள் சித்ரா.
"இதையெல்லாம், மாவட்ட அதிகாரிகள் கண்டிக்க மாட்டாங்களா?,'' என, ஆதங்கப்பட்டாள் மித்ரா.
"சில மாதங்களுக்கு முன்னாடி, நம்மூரில் இயக்கப்படும் டவுன் பஸ்களில் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணங்களை பற்றி, தகவல் உரிமை சட்டத்தில், இன்னொருவர் தகவல் வாங்கியிருக்கார். தகவல் கொடுத்த அலுவலர், ஒளிவு மறைவின்றி, அரசு பதிவேட்டில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெள்ளத்தெளிவா கொடுத்துட்டார். அதை கம்யூ., கட்சிக்காரங்க, பத்திரிகைகளில் பிரசுரிக்க வச்சு, மாவட்ட நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்துட்டாங்க. உடனே, தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்போருக்கு, "பதிவேட்டில் இருக்கும் எல்லா விஷயத்தையும் சொல்ல அவசியமில்லை'ன்னு அறிவுரை சொல்லியிருக்காங்க. அதுல இருந்து, எந்த கேள்வி கேட்டாலும், மழுப்பலாதான் பதில் வருது. உண்மையை மூடி மறைக்கிறாங்க. இந்த விஷயத்துல, மாவட்ட நிர்வாகம் மீதுதான் நடவடிக்கை எடுக்கணும்,'' என, பொங்கினாள் சித்ரா.
"தளபதி சென்ற இடத்துக்கெல்லாம், பிரசார வண்டி போகுதாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
"ஆமாப்பா, விடியல் மீட்பு பயணத்தில் ஒரு பகுதியா, திருப்பூருக்கு ஸ்டாலின் வந்திருந்தாருல்ல. அவர் சென்ற வழியெல்லாம், ஆளுங்கட்சி சாதனை விளக்க பேனர் வச்சு, நோகடிச்சிருந்தாங்க. இப்ப, எந்தெந்த வழித்தடத்தில், அவர் சென்றாரோ, அதே வழித்தடத்தில், அரசின் சாதனை விளக்க "டிஜிட்டல்' வேனை அனுப்பி, படக்காட்சிகளை ஒளிபரப்ப உத்தரவிட்டிருக்காங்க. புதுசா வந்திருக்கிற வாகனத்துல, படக்காட்சியை எத்தனை பேர் பார்க்குறாங்கன்னு, சென்னையில் இருந்தவாறு நேரடியா பார்க்கிற மாதிரி, "கேமரா' வசதி செஞ்சிருக்காங்க. அதனால, பிரசார வேனை, ஓரங்கட்டி நிறுத்தி வச்சிட்டு, "கணக்கு' மட்டும் காட்டிட்டு, "எஸ்கேப்' ஆக முடியாது. கூட்டத்தை வரவழைச்சு, வீடியோ ஓட்டியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கு,'' என்றாள் சித்ரா.
"ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை மதுக்கடையை மூடும் போராட்டம் நடத்துறாங்க; ஆனா, எதுவுமே எடுபடாம போயிடுதே,'' என, புலம்பினாள் மித்ரா.
"ஏன், என்னாச்சு? மதுக்கடையை மூடினால், மக்களுக்கு நல்லதுதானே,'' என, சித்ரா கேட்க, ""கடையை மூடினால், மக்களுக்கு நல்லது. அரசுக்கு வருவாய் போச்சே. நம்மூரில், முருகம்பாளையம் மதுக்கடையை மூடணும்னு ஏற்கனவே ஒரு தடவை போராட்டம் நடத்துனாங்க. மறுபடியும் ரெண்டு நாளைக்கு முன்னாடி, மாதர் சங்கத்தினர் திரண்டு வந்தாங்க. பிரச்னை வரக்கூடாதுன்னு, அன்னைக்கு கடையை திறக்கவே இல்லை. ஆனா, ஏகப்பட்ட மகளிர் போலீசாரை பாதுகாப்பு பணிக்கு நிறுத்தியிருந்தாங்க. மாதர் சங்கத்தில் இருந்தோ, 20 பேரே, போராட்டத்துக்கு வந்தாங்க. போலீஸ்காரங்க ரொம்பவே "அப்செட்' ஆகிட்டாங்க. அவர்களிடம் பேச்சு நடத்தி, கலைஞ்சு போக வச்சிட்டாங்க. இதே மாதிரி, எப்ப போராட்டம் நடந்தாலும், தீர்வு கெடைக்கறதில்லை. அதைப்பத்தி, மாதர் சங்கத்தினரும் கவலைப்படாம, கடைக்கு முன், கோஷமிட்டுட்டு போயிடுறாங்க,'' என, மித்ரா சொல்லி முடிப்பதற்கும், பஜ்ஜி தட்டு காலியாவதற்கும் சரியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X