சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளா பவனில் மாட்டிறைச்சி மெனு ; இந்து சேனா எதிர்ப்பால் பதட்டம்

Updated : அக் 27, 2015 | Added : அக் 27, 2015 | கருத்துகள் (74)
Advertisement
கேரளா பவனில் மாட்டிறைச்சி மெனு  இந்து சேனா எதிர்ப்பால் பதட்டம்

புதுடில்லி: டில்லியில் உள்ள கேரள அரசு பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது என்ற தகவல் போனில் புகாராக வந்ததால் போலீசார் அங்கு சென்று மாட்டிறைச்சி பரிமாற்றத்தை நிறுத்துமாறு கேட்டு கொண்டனர் . இதற்கு கேரள அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .
சமீப காலமாக மாட்டிறைச்சி விவகாரம்சூடு பிடித்துள்ளது . பசுக்கள் வதைபடுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக இந்து சேனா அமைப்பினர் இது தொடர்பாக மாட்டிறைச்சிக்கு தடை பெறுவதில் மும்முரமாக உள்ளனர். உ. பி., மாநிலம் தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக எழுந்த வதந்தியால் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் காஷ்மீரில் மாட்டிறைச்சி பார்ட்டி நடத்திய சுயேச்சை எம்எல்ஏ, ரசீத் என்பவர் சட்டசபையில் தாக்கப்பட்டார். அவர் டில்லி வந்த போது கறுப்பு மை வீசப்பட்டது. மாடுகள் வெட்டப்படுவதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என யோகாகுரு பாபா ராம்தேவ் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் தற்போது கேரள அரசுக்கு மாட்டிறைச்சி விவகாரம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.


டில்லியில் ஜந்தர் மந்தரில் கேரள பவன் உள்ளது. இங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது இதனை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒரு குரல் போலீஸ் ஸ்டேஷன் போனில் ஒலித்தது. இதனையடுத்து போலீசார் கேரள பவனுக்கு சென்று பிரச்னைகள் ஏதும் வராமல் இருக்க மாட்டிறைச்சியை நிறுத்தி கொள்ளுங்கள் என கேட்டு கொண்டனர்.

போலீசின் இந்த முயற்சிக்கு கேரள அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது . அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி இது குறித்து கூறுகையில், கேரள பவன் கேன்டீன் ஒன்றும் தனியார் ஓட்டல் அல்ல . இங்கு மக்கள் பிரதிநிதிகள் தங்குகின்றனர் . போலீசார் நடந்து கொண்ட விதம் கண்டனத்திற்குரியது , இதனை நாங்கள் பிரச்னையாக்குவோம் . இந்துசேனா அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்.
இது குறித்து கேரள தலைமை செயலர் கூறுகையில்; நாங்கள் எருமை மாட்டுக்கறி தான் தருகிறோம் . பசு மாடு அல்ல என்றார் .


கேரள எம்.பி.,க்கள் போராட்டம்: மாட்டிறைச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கேரள எம்.பி.,க்கள் டில்லி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து டில்லியில் ஆர்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர் .

கெஜ்ரிவால் எதிர்ப்பு :
டில்லியில் உள்ள கேரள பவனில் மாட்டிறைச்சி பரிமாற்றம் தொடர்பாக போலீஸ் நுழைந்து சில நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.கேரள பவனுக்குள் நுழைய வேண்டிய அவசியம் போலீசாருக்கு ஏன் வந்தது ?இது தான் அவர்கள் வேலையா ? என்றும் கேட்டுள்ளார் .

டில்லி போலீஸ் மறுப்பு : கேரள பவனில் ரெய்டு நடத்தவில்லை என டில்லி போலீஸ் கமிஷனர் பாசி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில் ; பாதுகாப்பு காரணமாக போலீசார் அங்கு சென்றனர் . வேறு ஏதும் நடக்கவில்லை என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj - Bukit Merah,சிங்கப்பூர்
28-அக்-201510:03:10 IST Report Abuse
Selvaraj மாட்டிறைச்சி அல்லது அசைவம் உண்பது தனி மனிதனின் விருப்பு, வெறுப்புக்குட்பட்டது, அதில் மற்றவர்கள் தலையிடுவது நாகரிகமற்ற செயல். அதே சமயம் சக மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் நாத்திகம் பேசுறோம், திராவிடம் பேசுறோம், பார்பனிய எதிர்ப்பு அரசியல் பண்றோம்ன்னு சொல்லிக்கிட்டு ஒரு பெரிய சமூகத்தின் புனித இடத்திலேயே பிரியாணி சாப்பிடுவது, இறைச்சி கடை நடத்துவது மாட்டிறைச்சி விருந்து வைப்பது என்றால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். இங்கே கருத்து கூறும் சில நண்பர்கள் மற்ற உயிரினங்கள் அனைத்தும் மனிதனுக்காக படைக்கப்பட்டவை, அதனால் எல்லா உயிரினங்களையும் பிடித்து சாப்பிடலாம் என்கிறார்கள். அனைத்து உயிர்களையும் படைத்த இறைவன் இறுதியாக மனிதனை ஆறறிவுடன் படைத்தான் அவற்றை காத்தருள்வதற்காக. குறைவான உடலுழைப்பு உள்ள இக்காலத்தில், மனிதன் மாமிச பட்சிகளை போல உயிர்களை கொன்று உண்டு வாழவேண்டிய அவசியமில்லை, அது இரத்த அழுத்தம், கொழுப்பு, அதிக உடல் பருமன் போன்ற வேறு விதமான விளைவுகளையே ஏற்படுத்தும் இதற்கு அமெரிக்கா போன்ற நாடுகளே உதாரணம்.
Rate this:
Share this comment
Cancel
Freethinker - Chennai,இந்தியா
28-அக்-201507:26:57 IST Report Abuse
Freethinker ஒவ்வொரு சிறு சிறு குழுவும், அமைப்பும் தன சொந்த விருப்பு வெறுப்பையே ஒட்டு மொத்த நாடும் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை திணித்தால் குட்டி குட்டி நாடுகளாக பிரிந்து போவதுதான் ஒரே வழி. மாட்டுக்கறி உண்பது ஒன்றும் எந்த மதத்துக்கும் எதிரானது இல்லை. வேத, புராண காலங்களிலே கூட மாட்டுக்கறி உண்ணப்பட்டு வந்துள்ளது. இராமன் கூட மாட்டுக்கறி உண்டான் என்று கூறப்பட்டிருக்கிறது என்றெல்லாம் தெரிந்தும் பிரச்சனை பண்ணினால் அவர்கள் நோக்கம் என்ன என்பதை நாம்தான் வேண்டும்.
Rate this:
Share this comment
abdulrajak - trichy,இந்தியா
28-அக்-201510:00:04 IST Report Abuse
abdulrajakபிரச்சனயே ராமன் தான். ராமன் ஒரு சத்ரியன். அவர் மாட்டு கறி திங்கலாம். ராவணன் பிராமணன்,அவர் மாட்டு கறி தின்றதாக ஆதாரம் உள்ளதா ? இப்படி மாட்டு கறி திங்காத பிராமண வகுப்பில் உள்ள ஒரு பிரிவினர் கூறுவார்கள் ....
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
28-அக்-201521:05:22 IST Report Abuse
Nallavan Nallavanஅப்துல் ஜி .... ராமனையும், ராவணனையும் நீங்கள் நம்புவதாக இருந்தால் ராமாயணத்தை வரலாறு என்பதையும், ராமன் கடவுள் அவதாரம் என்பதையும் நம்ப வேண்டி வரும் .... இந்து மதத்தில் தூதர்களுக்கு இடமில்லை .... Freethinker, ராமன் மாட்டுக்கறி உண்டதாக எதில் கூறப்பட்டிருக்கிறது என்பதை எனக்குத் தெரிவிக்க முடியுமா ???? நான் ஒருவேளை இந்த செய்திக்கான கருத்துப்பகுதியை மீண்டும் காணாது போகலாம் .... வேறு எங்கும் கருத்துத் தெரிவிக்கும்போது எனக்குப் பதில் கருத்தாக அந்த விபரத்தை அளிக்கும்படி வேண்டுகிறேன் .......
Rate this:
Share this comment
Cancel
Sutha - Chennai,இந்தியா
28-அக்-201507:10:25 IST Report Abuse
Sutha அவரவர்க்கு விரும்பியதைத்தான் இது வரை சாப்பிட்டு வந்தார்கள். இன்னும் அதுதான் தொடரும்.இதை எல்லாம் சட்டம் போட்டுத் தடுக்க முடியாது.மனிதன், எது நாட்டில் குறைந்த விலையில் கிடைக்கிறதோ அதையே சாப்பிட விரும்புகிறான்.எனவே எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று இருப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X