குழந்தை பால் 'புட்டிக்காக'தாமதமாக புறப்பட்ட ரயில் மதுரையில் ருசிகரம்

Updated : அக் 29, 2015 | Added : அக் 28, 2015 | கருத்துகள் (21)
Advertisement
மதுரை: மதுரை ஸ்டேஷனில் இருந்து மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட சிக்னல் கிடைத்த நிலையில், குழந்தையின் பால் 'புட்டிக்காக' 2 நிமிடம் நிறுத்தப்பட்டது.துாத்துக்குடியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 7:55 மணிக்கு மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வந்தது. ஐந்து நிமிடங்களுக்கு பின், இரண்டாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த நேரத்தில், ரயிலில் இருந்து
 குழந்தை பால் 'புட்டிக்காக'தாமதமாக புறப்பட்ட ரயில் மதுரையில் ருசிகரம்

மதுரை: மதுரை ஸ்டேஷனில் இருந்து மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட சிக்னல் கிடைத்த நிலையில், குழந்தையின் பால் 'புட்டிக்காக' 2 நிமிடம் நிறுத்தப்பட்டது.


துாத்துக்குடியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 7:55 மணிக்கு மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வந்தது. ஐந்து நிமிடங்களுக்கு பின், இரண்டாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த நேரத்தில், ரயிலில் இருந்து குழந்தையின் பால்புட்டி, தவறி விழுந்தது. பசியில் இருந்த குழந்தை அழுதது. செய்வதறியாது பெற்றோர் தவித்தனர்.
அப்போது அங்கு நின்றிருந்த ஸ்டேஷன் மேலாளர் பிரேம்குமார், உடனடியாக ரயிலை நிறுத்துமாறு டிரைவருக்கு தகவல் கொடுக்கும்படி அங்கிருந்த ஊழியரிடம் தெரிவித்தார். அதற்குள் சிக்னல் கொடுக்கப்பட்டது.உடனடியாக அந்த ஊழியர், ஓடிச்சென்று டிரைவரிடம் தகவல் தெரிவித்தார். ரயில் நிறுத்தப்பட்டது. இதை அறிந்த பெற்றோர், கீழே இறங்கி பால்புட்டியை எடுத்துக்கொண்டு, குழந்தையின் பசியை போக்கினர்.
இதனால் 2 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.ஸ்டேஷன் மேலாளர் பிரேம்குமாருக்கு குழந்தையின் பெற்றோர் மட்டுமின்றி, சக பயணிகளும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
29-அக்-201520:07:03 IST Report Abuse
Krishnamurthy Venkatesan குமரன் மீது பிரேமை கொண்டதால் தான் பிரேம்குமார் ரயிலை நிறுத்தினார். பல மணி நேரங்கள் கால தாமதமாக வரும் ரயில்கள் ஒரு உயர்ந்த நோக்கத்தோடு செய்யப்பட்ட காரியத்திற்கு சில மணிகள் (துளிகள்) காலதாமதம் ஆனால் தவறில்லை. திரு பிரேம்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். குழந்தைகளை அந்த பெற்றோர் இன்னும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
29-அக்-201520:03:26 IST Report Abuse
Sundeli Siththar மனித நேயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பிரேம்குமார் அவர்களுக்கு கோடானுகோடி நன்றி.
Rate this:
Cancel
jr2658 - Rochester,யூ.எஸ்.ஏ
29-அக்-201519:43:13 IST Report Abuse
jr2658 கடவுள் இருக்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X