அரசியல் செய்தி

தமிழ்நாடு

குஷ்பு... நக்மா... நமீதா... நடிகையரைத் தேடி காங்., பயணம்

Updated : அக் 31, 2015 | Added : அக் 30, 2015 | கருத்துகள் (19)
Advertisement
 குஷ்பு... நக்மா... நமீதா... நடிகையரைத் தேடி காங்., பயணம்

குஷ்பு, நக்மாவை தொடர்ந்து, நடிகை நமீதாவையும், காங் கிரசில் சேர்க்கும் முயற்சிக்கு, டில்லி மேலிடம் பச்சைக் கொடி காட்டி உள்ளது. இதையடுத்து, நமீதா தரப்புடன் பேச்சு நடந்து
வருவதாக,கட்சி வட்டாரம் தெரிவித்தது.

தமிழக காங்கிரசில், சினிமா நட்சத்திரங்களை சேர்க்க, டில்லி மேலிடம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்றதும், நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து, வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கார்த்திக்கை காங்கிரசில் இணையும்படி வலியுறுத்தினர். அதற்கான முயற்சியில், காங்., மீடியா ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி இறங்கினார்.சட்டசபை தேர்தலுக்கு முன், தன் முடிவை அறிவிப்பதாக கூறிய கார்த்திக், 'எஸ்கேப்' ஆகி விட்டார். இருப்பினும் நடிகர், நடிகையரை இழுக்கும் முயற்சி தொடர்கிறது.

முதலில், நடிகை குஷ்புவை இணைத்தனர். அவருக்கு, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே காங்கிரசில் சேர்ந்திருந்த, நடிகை நக்மாவுக்கு, கடந்த மாதம், அகில இந்திய மகளிர் காங்., பொதுச் செயலர் பதவி அளித்து, தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக்கினர்.

இதை பார்த்ததும், நடிகை நமீதாவுக்கும் அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது; அதை, நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். அதையடுத்து, அவரை, தி.மு.க.,வுக்கு இழுக்க சிலர் முயன்றனர்; அவர் பிடிகொடுக்கவில்லை.

தற்போது, பிரபல நடிகர் ஒருவர் மூலமாக, நமீதாவை காங்கிரசில் சேர்க்க, பேச்சு நடக்கிறது.
'காங்கிரசில் நமீதா இணைந்தால், அவரது சொந்த மாநிலமான குஜராத் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்படுவார்' என, வாக்குறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அகில இந்திய காங்., மீடியா ஒருங்கிணைப்பாளர், எஸ்.வி.ரமணி கூறுகையில், ''நமீதாவை காங்கிரசில்சேர்க்க, பேச்சு நடக்கிறது. அவர் காங்கிரசில் இணைந்தால், அவர் மூலம், தமிழக காங்கிரசை வலுப்படுத்தும் திட்டமும் உள்ளது,''என்றார்.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Victor - Chennai,இந்தியா
31-அக்-201520:33:04 IST Report Abuse
Victor காங்கிரஸ் நிலைமை இதுதான்...
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
31-அக்-201520:14:49 IST Report Abuse
Somiah M காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கட்சி நடத்துவதை விட .....................கரக ஆட்ட குழு நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாரோ ?
Rate this:
Share this comment
Cancel
SINGA RAJA - MADURAI,இந்தியா
31-அக்-201519:10:47 IST Report Abuse
SINGA RAJA இதன் மூலம் குஸ்புவிற்கு பியூஸ் பிடுங்கியிருக்கிறார்கள். குஸ்பு இனி வேறு கட்சிக்கு தாவ கொஞ்சம் டயம் எடுத்துக் கொள்வார். வேண்டுமானால் நடிகர் கார்த்திக் கட்சியில் குஸ்பு இணையலாம். அங்கு கார்த்திக்கைத் தவிர கட்சியில் வேறுயாரும் இல்லாததால், அங்கே எந்த கோஷ்டியும் உருவாக வாய்ப்பில்லை. குஸ்புவும் சோலோவாக அங்கே ஒரு ரவுண்டு வரலாம். பாவம், நினைச்சது ஒண்ணு.., நடப்பது ஒண்ணு... அதனால முழிக்குது குஸ்பு ' கண் ' ணு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X