பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று வழி கண்ட விவசாயிகள்: விவசாயத்திற்கு சூரியஒளி மின்சாரம்:மின்தடை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

Added : அக் 31, 2015 | கருத்துகள் (14)
Advertisement
மாற்று வழி கண்ட விவசாயிகள்: விவசாயத்திற்கு சூரியஒளி மின்சாரம்:மின்தடை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நெல் விவசாயம் செய்தவர்கள் கூட தண்ணீர் பற்றாக்குறையால் மாற்று விவசாயத்திற்கு மாறியும், மின்தடையால் பல பிரச்னைகளை சந்தித்த இவர்கள், சூரியஒளி மின்சாரம் பயன்பாடுக்கு மாறி வருகின்றனர் .

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் சிற்றாறுகள் மூலம் மலையடிவாரத்திற்கு வருகிறது. அங்கிருந்து ஆறுகள் மூலம் கண்மாய்களில் தண்ணீர் வந்து சேர்கிறது. ஒரு கண்மாய் நிறைந்தவுடன் மற்றவற்றிற்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய் அமைப்பு இருந்தது. கண்மாய் பாசனத்தில் நெல், கரும்பு, வாழை, மா, பலா உற்பத்தி செய்தனர். தற்போது ஆறுகள் குறுகியது. வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் சிக்கியதால் கண்மாய்களில் தண்ணீர் சேமிக்க முடியவில்லை. கண்மாய்களும் முறையாக தூர்வாராததால் மழையால் கிடைக்கும் தண்ணீரும் வீணாகிறது. கண்மாய் பாசன நிலங்கள் பல இடங்களில் பிளாட்டுகளாக மாறின. சில இடங்களில் கருவேல முள் மரம் வளர்ந்து உள்ளன. இதனால் நெல் விவசாயத்தில் இருந்து மாற்றுமுறை விவசாயத்திற்கு பலர் மாறினர்.தோப்பு அமைத்து மா, தென்னை, வாழை, பலா விவசாயத்தில் ஈடுபட்டனர். இதற்கு குறைந்த அளவு தண்ணீர் தேவை என்பதால் விவசாயிகள் கவலை இல்லாமல் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த வகை விவசாயத்திற்கு மின்தடை மூலம் ஆபத்து வந்தது.

கிணற்று தண்ணீரை மின்மோட்டார் வைத்து சப்ளை செய்யும்போது திடீரென மின்தடை ஏற்படும். கடைசி வரை தண்ணீர் செல்லாததால் கடைகோடியில் உள்ள மரங்கள் வாடின. சொட்டு நீர் பாசனத்தில் விவசாயிகள் ஈடுபட்ட போதும் இது போன்ற பிரச்னையை சந்தித்தனர். இது தவிர மின்தடை ஏற்படும்போது தோப்பில் இருக்கும் விவசாயிகள் நகருக்கு உர மூடை, விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க செல்வர். இதை பயன்படுத்தி மின்மோட்டார் திருட்டு நடந்தது. மின்கம்பத்தில் இருந்து மின்மோட்டாருக்கு வரும் ஒயரை துண்டித்து கிணற்றுக்குள் இறங்கி மோட்டாரை ஒரு கும்பல் திருடியது. மின்மோட்டார், ஒயர், எலக்ட்ரீசியன் கூலி என பல ஆயிரம் ரூபாய் செலவை விவசாயிகள் சந்தித்தனர். அடிக்கடி ஏற்பட்டதால் விவசாயிகள் நொந்துபோயினர்.

மின்தட்டுப்பாட்டை சமாளித்து விவசாயத்தை காப்பாற்றும் கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டது. இதற்காக தோப்புகளில் சூரியஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் "பிளான்ட்' அமைக்க துவங்கி உள்ளனர். தோப்பில் இந்த பிளான்ட் அமைத்து கிணற்றில் இருந்து தண்ணீரை தாராளமாக பாய்ச்சுகின்றனர். மின்மோட்டார் அறை அமைத்து அதற்கான மின் தேவையையும், இந்த பிளான்ட் மூலம் பெறுகின்றனர். மின்தடை, குறைந்த மின் சப்ளை போன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளனர்.

ராஜபாளையம் பொன்னுச்சாமி, "" மின்தட்டுப்பாடால் விவசாயம் பாதித்தது. இதற்கான மாற்று ஏற்பாடு குறித்து யோசித்தபோது தான் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க முயற்சி செய்தேன். 80 சதவீத அரசு மானியத்துடன் விவசாய பொறியியல் துறை உதவியுடன் சூரிய ஒளி மின் பிளான்ட் தோப்பில் அமைத்தேன். இதற்காக ஒரு லட்சம் ரூபாய்செலுத்தினால் நான்கு லட்சம் ரூபாய் அரசு மானியமாக கிடைத்தது. வெயில் காலத்தில் தான் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும், அப்போது தான் மின்தட்டுப்பாடும் அதிகமாக இருக்கும். இந்த இரண்டையுமே சூரிய ஒளி மின்சக்தியால் எளிதாக சமாளிக்கலாம், '' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
02-நவ-201510:22:49 IST Report Abuse
Srinivasan Kannaiya சூரியனை நம்புங்கள்...( தி மு க அல்ல) எப்பொழுது நல்ல வாழ்வு உண்டு... தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு லட்சம் கோடி கடனில் அணைந்து போயிற்று..
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
01-நவ-201519:41:01 IST Report Abuse
கதிரழகன், SSLC ஏனுங்க மோட்டர திருடுரவங்க சோலார திருடமாட்டானுவளா? விவசாயிகள் எல்லாம் ஒண்ணு செய்யணும். ரகசியமா காசுபோட்டு திருட்டு சோலார் பொருள வாங்கற கமிசன் ஏஜெண்டுகள் செட்டப்பு செய்யணும். களவாணிப் பசங்க விக்க வர்றபோது, அவங்கள கண்டுகிடணும். அப்புறம் அவங்கள புடிச்சு தென்ன மரத்துல கட்டி நாலு போடு போட்ட நெசமான களவாணிகள காட்டிக் கொடுப்பாணுவ. (நெச களவாணிகங்க நேரடியா விக்க மாட்டானுவ. அடிமாட்டு வெலக்கி கெடக்கிற மொத ஆளு தலையில கட்டிவிட்டுட்டு ஓடிவானுவ. அவிங்கள புடிக்கணும்). நெச களவாணிப் பசங்கள போட்டு தள்ளிடணும். அப்புறம் சனங்க திருட்டு சாமான் வாங்கறதில்ல ன்னு ஒரு ஒத்துமையா முடிவா இருந்தா திருட்டு கொறையும்.
Rate this:
Share this comment
Cancel
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
01-நவ-201518:44:24 IST Report Abuse
R.சுதாகர் நம் மக்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். நீரின்றி அமையாது உலகு... இங்கு மின்சாரமோ, மற்றவையோ, அனைத்துமே தற்காலிக பிரச்சனை தான். முழுமுதல் பிரச்சனை தண்ணீர் தான். முன்பு வானம் பார்த்து, பயிரிட்டோம், மழை நீரை தேக்கி ஒரு போகம் விளைவித்தோம், பின்னர் முப்போகத்துக்கு ஆசைப்பட்டோம், ராட்சத நீர் உறிஞ்சிகளை கணக்கின்றி வயல்வெளிகளில் விதைத்தோம், எங்கும் மானியம், மின்சாரம் முழுவதும் இலவசம், அரசால் தாக்குப் பிடிக்காத பட்சத்தில் மின்சாரத்தை 14 மணி நேரமாக குறைத்தது இப்போது மின்தடையை காரணம் சொல்லி சூரியஒளி மின்சாரம் துணையுடன் தண்ணீரை மேலும் கபளீகரம் செய்யத் துணிந்து விட்டோம். மீதம் இருக்கின்ற நிலத்தடி நீரையும் ஆயிரம் அடி ஆழத்துக்கு உறிஞ்சிய பிறகு தண்ணீருக்கு என்ன செய்வீர்கள்? சூரியன் மேலே காய, பூமி மாதா கீழே தகிக்க கண்ணீரால் பயிர் வளர்ப்பீர்களோ... நீங்கள் பயிருக்கு பாய்ச்சும் தண்ணீரில் அந்த தாவரம் 0.001 % கூட தக்க வைத்துக் கொள்வதில்லையே... இறைத்த தண்ணீர் முழுவதும் ஆவியாகத் தானே செல்கிறது. அதை மேம்படுத்த, சுழற்சி முறையில் ஏதாவது செய்திருந்தால் நாங்கள் உங்களை கோவில் கட்டி கும்பிடுவோம். சூரியன் உதவியுடன் நிலத்தடி நீரை இப்போது வரைமுறை இல்லாமல் உங்கள் இஷ்டம் போல் உறிஞ்சுங்கள்... இதில் ஐந்தில் நான்கு பங்கு மானியம் வேறு. நாம் எதனை நோக்கி பயணிக்கிறோம் என்று எனக்கு கொஞ்சம் கூட விளங்கவில்லை... ( சவுதியிலிருந்து எழுதுவது சுலபம் என்று சிலர் அறைகூவல் விடுக்கலாம், சவுதியை பார்த்த பின்னர் தான் தண்ணீரின் அருமை தெரிகிறது.) ஒன்று மட்டும் நிச்சயம். இயற்கையை யார் பாழாக்கினாலும் அதன் பலனை நாம் அனைவருடைய தலைமுறையும் சேர்ந்தே அனுபவிக்கும். அப்போது அதை பார்த்து கண்ணீர் வடிப்பதைத் தவிர நம்மால் வேறொன்றும் செய்ய இயலாமல் போயிருப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X