லண்டன் : இந்திய ரயில்வே உள்ளிட்ட இந்தியாவின் போக்குவரத்து கட்டமைப்புகள் விரிவாக்கத்திற்கு பிரிட்டன் அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் முனைப்புடன் இருப்பதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு, பிரிட்டன் போக்குவரத்து துறை அமைச்சர் பேட்ரிக் மேக்லாப்லின் உள்ளிட்ட அமைச்சர்களின் வேண்டுகோளின்பேரில், லண்டன் சென்றுள்ளார். மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில், பிரிட்டன் அமைச்சர்கள், தொழில்அதிபர்கள், முன்னணி வங்கிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டம் டவுனிங் ஸ்டீரிட்டில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சுரேஷ்பிரபு பேசியதாவது, இந்தியாவில் ரயில்வே உள்ளிட்ட போக்குவரத்து துறைகளின் கட்டமைப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, பிரிட்டன் அரசு மற்றும் அந்நாட்டு தொழில்நிறுவனங்கள், இந்தியாவில் அதிகளவு முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளன என்று சுரேஷ் பிரபு கூறினார்.
சர்வதேச அளவிலேயே, மிகப்பெரிய போக்குவரத்து கட்டமைப்பு கொண்ட இந்தியாவில், போக்குவரத்து வசதிகளை மேலும் அதிகப்படுத்துவதன் மூலம், சர்வதேச பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என்பதே பிரிட்டிஷாரின் எண்ணமாக உள்ளது என்று அமைச்சர் சுரேஷ் பிரபு மேலும் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE