தடைகள் தீர்வாகுமா?: மத்திய அரசை சீண்டும் ரகுராம் ராஜன்

Updated : அக் 31, 2015 | Added : அக் 31, 2015 | கருத்துகள் (46)
Advertisement
புதுடில்லி : நாட்டில் சகிப்புத்தன்மை முறையாக நிலவும் போது, சுற்றுச்சூழலை வளமாக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். சமீபத்திய வன்முறை கலாசாரம் தொடர்பாக மத்திய அரசை மறைமுகமாக அவர் சாடியிருக்கிறார் . டில்லி ஐ ஐ டி யில் நடந்த விழாவில் பங்கேற்று இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்; நாட்டில் கருத்து சுதந்திரம்,
மத்திய அரசு மீது ரகுராம் ராஜன் சாடல் ?

புதுடில்லி : நாட்டில் சகிப்புத்தன்மை முறையாக நிலவும் போது, சுற்றுச்சூழலை வளமாக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
சமீபத்திய வன்முறை கலாசாரம் தொடர்பாக மத்திய அரசை மறைமுகமாக அவர் சாடியிருக்கிறார் .
டில்லி ஐ ஐ டி யில் நடந்த விழாவில் பங்கேற்று இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்; நாட்டில் கருத்து சுதந்திரம், விவாதம், மற்றும் சுய உரிமை இவை யாவும் அவசியம் இவை பராமரிக்கப்படும் போது பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் . உணர்வுப்பூர்வமான விஷயத்தில் மதிப்பளிக்கப்பட வேண்டும்.

சகிப்புத் தன்மையும், ஒருவருக்கொருவர் வழங்கும் மதிப்பும் நல்ல சமத்துவ சூழலை உருவாக்கும் . ஒரு விஷயத்தில் தடை என்பது யாருக்கும் தீர்வாக மாற முடியாது. அரசியல் ரீதியான தவறான வழிகாட்டுதல்கள் வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடும் . தடைகள் வாய்பூட்டாக அமைந்து விடும் . இந்திய கலாசாரம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் . சகிப்புத்தன்மைக்கும், சுதந்திரத்திற்கும் போராட வேண்டியது அவசியம். சகிப்புத்தன்மையின்மை , பாதுகாப்பின்மைக்கு சமமாகும் .

எந்த விஷயத்திலும் திணிப்பு இருக்க கூடாது. மாற்று கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்திய மாட்டிறைச்சி விவகாரம், கறுப்பு மை வீச்சு , சகிப்புத்தன்மை குறைவு, விருதுகள் திரும்ப வழங்கும் எழுத்தாளர்கள் ஆகியன தொடர்பாக இவர் இந்த கருத்தை வௌியிட்டு, மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்துள்ளார் என்று கூறப்படுகிறது .

சுப்பிரமணியசுவாமி கண்டனம் : இவரது பேச்சுக்கு பா. ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார், இவர் தனது டுவிட்டரில் , ரகுராம் ராஜன் அவரது வேலையை மட்டும் பார்க்கட்டும் பிரதமர் மோடி, ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Haneefa Abdul Majeed - Fahaheel,குவைத்
31-அக்-201518:53:33 IST Report Abuse
Haneefa Abdul Majeed யப்பா உண்மையை சொன்னால் எப்புடி பொத்துகிட்டு வருது.
Rate this:
Cancel
Thanjai puthiyavan - Jeddah,சவுதி அரேபியா
31-அக்-201518:51:40 IST Report Abuse
Thanjai puthiyavan சீன்டலின் எதிர் வினைதான் கவர்னரின் உரத்த குரலோ. சுவாமியின் குசும்பு பேச்சு பிஜேபி அரசின் சீண்டலுக்கு ஆதாரமாக படுகிறது.
Rate this:
Cancel
Hasan Ahamed - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-அக்-201518:40:11 IST Report Abuse
Hasan Ahamed திரு ரகுராம்ராஜன் அவர்கள் கூறியுள்ளது பொருளாதார தந்தை என்று போற்றப்படும் ஆடம்ஸ்மித் முதற் கொண்டு இன்றைய மாணவன் வரை அறிந்த காரணிகளே. ஒரு நாடு முன்னேற வேண்டும். உள் நாட்டில் அமைதி முக்கியம். அமைதிரஇருந்தால் மட்டுமே வளம்பெறமுடியும். மேலைநாடுகளில்5 வருடம் வசித்தால் குடியுரிமை கிடைக்கும். இந்தியாவில் பிறந்து வாழ்ந்து வருகின்றவனை துன்பபடுத்துவது எந்த வகையில் நியாயம். நடுநிலயளர்களை சிந்தியுங்கள். அநீதிக்கு எதிராக ஒன்றுசேர்ந்து குரல்கொடுங்கள். வாழ்கபாரதம். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X