தடைகள் தீர்வாகுமா?: மத்திய அரசை சீண்டும் ரகுராம் ராஜன் | I didn't realise how well the institute prepared me: Raghuram Rajan at IIT-Delhi's convocation | Dinamalar

தடைகள் தீர்வாகுமா?: மத்திய அரசை சீண்டும் ரகுராம் ராஜன்

Updated : அக் 31, 2015 | Added : அக் 31, 2015 | கருத்துகள் (46) | |
புதுடில்லி : நாட்டில் சகிப்புத்தன்மை முறையாக நிலவும் போது, சுற்றுச்சூழலை வளமாக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். சமீபத்திய வன்முறை கலாசாரம் தொடர்பாக மத்திய அரசை மறைமுகமாக அவர் சாடியிருக்கிறார் . டில்லி ஐ ஐ டி யில் நடந்த விழாவில் பங்கேற்று இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்; நாட்டில் கருத்து சுதந்திரம்,
மத்திய அரசு மீது ரகுராம் ராஜன் சாடல் ?

புதுடில்லி : நாட்டில் சகிப்புத்தன்மை முறையாக நிலவும் போது, சுற்றுச்சூழலை வளமாக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
சமீபத்திய வன்முறை கலாசாரம் தொடர்பாக மத்திய அரசை மறைமுகமாக அவர் சாடியிருக்கிறார் .
டில்லி ஐ ஐ டி யில் நடந்த விழாவில் பங்கேற்று இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்; நாட்டில் கருத்து சுதந்திரம், விவாதம், மற்றும் சுய உரிமை இவை யாவும் அவசியம் இவை பராமரிக்கப்படும் போது பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் . உணர்வுப்பூர்வமான விஷயத்தில் மதிப்பளிக்கப்பட வேண்டும்.

சகிப்புத் தன்மையும், ஒருவருக்கொருவர் வழங்கும் மதிப்பும் நல்ல சமத்துவ சூழலை உருவாக்கும் . ஒரு விஷயத்தில் தடை என்பது யாருக்கும் தீர்வாக மாற முடியாது. அரசியல் ரீதியான தவறான வழிகாட்டுதல்கள் வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடும் . தடைகள் வாய்பூட்டாக அமைந்து விடும் . இந்திய கலாசாரம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் . சகிப்புத்தன்மைக்கும், சுதந்திரத்திற்கும் போராட வேண்டியது அவசியம். சகிப்புத்தன்மையின்மை , பாதுகாப்பின்மைக்கு சமமாகும் .

எந்த விஷயத்திலும் திணிப்பு இருக்க கூடாது. மாற்று கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்திய மாட்டிறைச்சி விவகாரம், கறுப்பு மை வீச்சு , சகிப்புத்தன்மை குறைவு, விருதுகள் திரும்ப வழங்கும் எழுத்தாளர்கள் ஆகியன தொடர்பாக இவர் இந்த கருத்தை வௌியிட்டு, மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்துள்ளார் என்று கூறப்படுகிறது .

சுப்பிரமணியசுவாமி கண்டனம் : இவரது பேச்சுக்கு பா. ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார், இவர் தனது டுவிட்டரில் , ரகுராம் ராஜன் அவரது வேலையை மட்டும் பார்க்கட்டும் பிரதமர் மோடி, ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X