கூடங்குளத்தில் அடுத்த மாதம் மின் உற்பத்தி

Updated : அக் 31, 2015 | Added : அக் 31, 2015 | கருத்துகள் (9) | |
Advertisement
திருநெல்வேலி: ''கூடங்குளம் முதல் அணு உலையில் நவம்பர் அல்லது டிசம்பரில் மின் உற்பத்தி துவங்கும்'' என ரஷ்ய நிபுணர்கள் தெரிவித்தனர். திருநெல்வேலியில் 'இந்திய - ரஷ்ய கலாசார நட்புணர்வு கழகம்' சார்பில் மாநில கூட்டம் நடந்தது. கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குனர் ஆர்.சுந்தர் மற்றும் காலாசார அமைப்பை சேர்ந்த ரஷ்ய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்குப் பின் ரஷ்ய
கூடங்குளத்தில் அடுத்த மாதம் மின் உற்பத்தி

திருநெல்வேலி: ''கூடங்குளம் முதல் அணு உலையில் நவம்பர் அல்லது டிசம்பரில் மின் உற்பத்தி துவங்கும்'' என ரஷ்ய நிபுணர்கள் தெரிவித்தனர். திருநெல்வேலியில் 'இந்திய - ரஷ்ய கலாசார நட்புணர்வு கழகம்' சார்பில் மாநில கூட்டம் நடந்தது. கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குனர் ஆர்.சுந்தர் மற்றும் காலாசார அமைப்பை சேர்ந்த ரஷ்ய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்குப் பின் ரஷ்ய பிரதிநிதிகள் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நவம்பர் அல்லது டிசம்பரில் உற்பத்தி துவங்கும். 2வது அணு உலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரியிலும், 3வது மற்றும் 4வது அணுமின் நிலையங்களில் அடுத்த ஆண்டும் உற்பத்தி துவங்கும்.
கூடங்குளத்தில் பயன்படுத்தப்பட்ட ரஷ்ய உபகரணங்களின் தரம் நன்றாக இருக்கிறது. இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் வங்கதேசம் மற்றும் வியட்நாமிலும் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Natarajan - Chennai,இந்தியா
07-நவ-201506:22:19 IST Report Abuse
Ramesh Natarajan Very Good. Hope Tamil Nadu Government also will support this and allow them hastle free commissioning.
Rate this:
Cancel
Anand Rao.v - Chennai,இந்தியா
01-நவ-201516:23:53 IST Report Abuse
Anand Rao.v கூடங்குளத்தில் செவ்ன்ற ஆண்டே மின்னுற்பத்தி வர்த்தக ரீதியில் துவங்கிவிட்டது என்று அறிவித்தது பொய்யா ? மீண்டும் மீண்டும் இதே போன்று மினுற்பத்திதுவக்கம் என்று அறிவிப்புகள் ஏன் வந்து கொண்டிருக்கின்றன?
Rate this:
Cancel
Kumar - Chennai,இந்தியா
01-நவ-201506:59:39 IST Report Abuse
Kumar பதினைஞ்சு நாள்ல நல்லகாலம் பொறக்குது குடுகுடுப்பைகாரன் நாராயணசாமி எங்கே போனார் இப்போது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X