பொது செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., த.மா.கா.,வை வரவேற்கிறோம்: பா.ஜ.,வுக்கு இயக்கத்தில் இடமில்லை: வி.சி.,

Added : நவ 02, 2015
Share
Advertisement

திருச்சி: ''தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்புவோர், மக்கள் நலக்கூட்டியக்கத்தில் இணையலாம். தே.மு.தி.க., த.மா.கா.,வை வரவேற்கும் அதே சமயம், பா.ஜ., பா.ம.க.,வுக்கு இயக்கத்தில் கட்டாயம் இடமில்லை,'' என, திருச்சியில் திருமாவளவன் பேசினார்.
திருச்சியில், நேற்று முன்தினம் இரவு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைக்கப்பட்ட மகளிர் இயக்கத்தின் சார்பில், மது ஒழிப்பு மகளிர் மாநாடு, மாநில செயலாளர் நற்சோனை தலைமையில் நடந்தது. கட்சி நிறுவனர் திருமாவளவன் பேசியதாவது: மக்கள் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். தேசிய அளவில் ஒரே நிலைப்பாடாக அமையும் வகையில் மத்திய அரசு, மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் பணிபுரிபவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப, அரசுப் பணி வழங்குவதுடன், இதனால் மாநில அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சமன் செய்ய, மத்திய அரசு உதவிட வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பாடல் பாடிய கோவனை, போலீசார் கைது செய்ததை கண்டிப்பதுடன், நிபந்தனை இன்றி, அவரை விடுவிக்க வேண்டும். டிசம்பர் மாத இறுதிக்குள், டாஸ்மாக் கடைகளை முறைப்படி, தமிழக அரசு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பெரிய அளவிலான போராட்டத்தை சந்திக்க நேரிடும். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் யார் வேண்டுமானாலும், மக்கள் நலக்கூட்டியக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். தே.மு.தி.க., த.மா.கா., கட்சிகள் எங்களுடன் நட்புறவுடன் உள்ளனர். அவர்களை வரவேற்கும் அதே சமயம், பா.ஜ., பா.ம.க.,வுக்கு கூட்டியக்கத்தில் இடமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X