பொது செய்தி

தமிழ்நாடு

டாட்காமில் ரூ.2,000க்கு விற்பனைக்கு வந்தது அரசு வழங்கிய பேன், மிக்ஸி, கிரைண்டர்

Added : நவ 02, 2015 | கருத்துகள் (18)
Share
Advertisement
டாட்காமில் ரூ.2,000க்கு விற்பனைக்கு வந்தது அரசு வழங்கிய பேன், மிக்ஸி, கிரைண்டர்

பெரம்பலூர்: அரசு வழங்கிய பேன், மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை, 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக, பெரம்பலூரை சேர்ந்த ஒருவர், ஓ.எல்.எக்ஸ்., டாட்காமில் விளம்பரம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு ஏழை, எளியமக்களுக்கு விலையில்லா பேன், மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி வருகிறது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நான்காவது கட்டமாக அரிசி பெறும் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் விலையில்லா பேன், மிக்ஸி, கிரைண்டர் உடனடியாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் மாவட்டத்திலும் பல்வேறு கிராமங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் இப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்படும் பேன், மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருட்கள் அளவு சிறியதாக இருப்பதுடன், உடைந்தும், செயல்படாத நிலையிலும் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விலையில்லா பேன், மிக்ஸி, கிரைண்டர் பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளி ஒருவர், ஓ.எல்.எக்ஸ்., டாட்காமில் இந்த மூன்று புதிய பொருட்களையும் போட்டோவுடன் வெளியிட்டு 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி உள்ளார். இதனால் பெரம்பலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeyam - Srivilliputtur,இந்தியா
11-நவ-201517:21:56 IST Report Abuse
jeyam ஏமாந்துட்டோமய்யா ஏமாந்திட்டோம். 900 ரூவாயிக்குதான் போவும்னு எங்ககிட்ட ஒரு படுபாவிப்பய வாங்கிட்டு போய்ட்டானே
Rate this:
Cancel
R.Srinivasan - Theni,இந்தியா
11-நவ-201517:16:51 IST Report Abuse
R.Srinivasan இந்த வியாபாரம் கலைஞர் டி.வி. கொடுத்தபோதே ஆரம்பித்து விட்டது..... இப்போது தொடர்கிறது.....ஆனால் முன் பின் தெரியாதவர்களிடம் விற்பனை செய்ய வேண்டும்..... ஏனென்றால் இவற்றுக்கு உத்தரவாதம் கிடையாது.... ஓடும்போதே விற்று விட வேண்டும். இல்லாவிட்டால் 50 ரூபாய்க்குத்தான் விற்கும்.....
Rate this:
Cancel
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
11-நவ-201515:21:27 IST Report Abuse
Murukesan Kannankulam அரசு வழங்கிய பேன், மிக்ஸி, கிரைண்டர் டாட்காமில் வியாபார உத்தியில் விற்பனை நல்ல தொடக்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X