தாத்ரியில் நடந்ததென்ன? கன்றுக்குட்டி திருட்டால் நடந்த கொலை
தாத்ரியில் நடந்ததென்ன? கன்றுக்குட்டி திருட்டால் நடந்த கொலை

தாத்ரியில் நடந்ததென்ன? கன்றுக்குட்டி திருட்டால் நடந்த கொலை

Added : நவ 02, 2015 | கருத்துகள் (171) | |
Advertisement
புதுடில்லி : ஒரு கன்றுக்குட்டி திருடப்பட்ட சம்பவம், உண்மைநிலை அறியாமல், அரசியல் மற்றும் மதசாயம் பூசப்பட்டதால், பூதாகரமாக வெடித்தது தற்போது அம்பலமாகி உள்ளது. உ.பி., மாநிலம் தாத்ரி கிராமத்தில் இஸ்லாமியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியது. பல நாட்டு பத்திரிக்கைகளில்
Fair behind Dadri incidentதாத்ரியில் நடந்ததென்ன? கன்றுக்குட்டி திருட்டால் நடந்த கொலை

புதுடில்லி : ஒரு கன்றுக்குட்டி திருடப்பட்ட சம்பவம், உண்மைநிலை அறியாமல், அரசியல் மற்றும் மதசாயம் பூசப்பட்டதால், பூதாகரமாக வெடித்தது தற்போது அம்பலமாகி உள்ளது. உ.பி., மாநிலம் தாத்ரி கிராமத்தில் இஸ்லாமியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியது. பல நாட்டு பத்திரிக்கைகளில் இச்சம்பவம் மிகப் பெரிய விஷயமாக்கப்பட்டதுடன் இந்தியா மீது அவப்பெயரையும் ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை பரபரப்பாக்கியதில் அரசியல்வாதிகளுக்கும், மீடியாக்களுக்கும் முக்கிய பங்குண்டு. அனைத்து டிவி.,க்களும் தங்களின் டி.ஆர்.பி., ரேட்டிங்கை உயர்த்துவதற்காக இச்சம்பவம் குறித்து பல்வேறு தகவல்களை கூறியதுடன், அது தொடர்பான பல அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற பேச்சுக்கள் அடங்கிய பேட்டிகளையும் ஒளிபரப்பின.


வெளிவராத தகவல்கள்:

ஒருதலைபட்சமாக கையாளப்பட்ட இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? மீடியாக்களில் மறைக்கப்பட்ட அல்லது வெளிவராத தகவல்கள் என்னென்ன? முதலில் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட தாத்ரி விவகாரம் தொடர்பான விசாரணையில் வெளியான தகவல்களை பார்ப்போம்.

கொலை செய்யப்பட்ட அக்லக் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் யாதவ் என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி திருடு போனது. கன்றுக்குட்டியை தேடும் பணியில் ராகுல் இறங்கினார். அப்போது அக்லக்கின் வீட்டின் பின்புறம் கன்றுக்குட்டியின் எலும்புத்துண்டுகள் கிடப்பதை கண்டு, அக்லக்குடன் சண்டை போட்டார். அக்லக் மற்றும் ராகுல் இடையே மோதல் நடைபெற்றபோது, அங்கு வந்த அக்லக்கின் மகன், ராகுலை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதனால் படுகாயமடைந்த ராகுல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுவரை நடந்த சம்பவங்கள் பற்றி எந்த மீடியா சேனலும் பேசவில்லை.

அக்லக்-ராகுல் இடையே சண்டை நடந்த விஷயமும், அதனால் ராகுல் தாக்கப்பட்ட விஷயமும் அந்த கிராமம் முழுவதும் பரவுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அக்லக் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அக்லக் உயிரிழந்துள்ளார். கிராம மக்கள் தாக்கியதால் அக்லக் உயிரிழந்த சம்பவம், அடுத்தநாள் மத சாயம் பூசப்பட்டு மீடியாக்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு திருட்டு சம்பவம் மத சாயம் பூசப்பட்டுள்ளதை உணராமல், அரசியல்வாதிகளும் இதில் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, இதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம் என குற்றம்சாட்டுக்களை அடுக்கினர். ஆனால், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ராகுல் பற்றிய எந்த அரசியல்வாதியும், மீடியாவும் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை.


பாகிஸ்தான் சென்று வந்த மர்மம்

: அடித்துக் கொல்லப்பட்ட அக்லக் அடிக்கடி பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். அவர் எதற்காக பாக்., சென்றார்? அவருக்கு விசா உள்ளிட்ட அனுமதிகள் எவ்வாறு கிடைத்தது? பாக்.,ல் இருந்த திரும்பி வந்த உடனேயே அக்லக் கார் வாங்கியது எப்படி? அவருக்கு அந்த அளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது? அக்லக்கிற்கு பாக்., உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு இல்லை என்பதற்கு ஆதாரம் என்ன? அவர் பாக்.,ல் பயிற்சி பெறவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்? அக்லக்கிற்கு பாக்., உடன் இருந்த தொடர்பு பற்றி இதுவரை யாரும் விசாரிக்காதது ஏன்?

இந்த ஒட்டுமொத்த பிரச்னையும் மத சாயம் பூசப்பட்டு, இந்துக்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், இந்து-இஸ்லாமியர்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் விதத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (171)

Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
08-நவ-201503:03:19 IST Report Abuse
Naz Malick இவ்வளவு பெரிய ஒரு கட்டு கதையை RSS சார்பு ஹிந்தி பத்திரிகை வேண்டும் என்றே திசை திருப்புவதற்காக எழுதி அதை உடனே தினமலர் கோப்பி அடித்து ஹிந்தி தெரியாத தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது
Rate this:
Cancel
K.Palanivelu - Toronto,கனடா
02-நவ-201521:34:58 IST Report Abuse
K.Palanivelu இல்லாத ஒரு விஷயத்தை பற்றி இந்த ஊடகங்கள் எவ்வளவு பூதாகரமாக பெரிதுபடுத்தினதை தொடர்ந்து மெல்ல அவல் கிடைத்தாற்போல் பல்வேறு தரப்பினரிடையே எவ்வளவுவாதப்பிரதிவாதங்கள்? எல்லாம் அடங்கியபிரகாவது கடைசியில் தெரியவந்த உண்மையாவது இந்தஊடகங்கள்மக்களுக்கு தெரியப்படுத்துமா?நம்பிக்கையில்லை.
Rate this:
Cancel
Bala - Chennai,இந்தியா
02-நவ-201521:05:48 IST Report Abuse
Bala விருதுகளை திருப்பி கொடுத்தவர்கள் அறிவு ஜீவிகளா? அவர்களின் தகுதி இதிலேயே புலப்பட்டுவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X