மோடிக்கு எதிராக போராட்டம் ஆட்களை திரட்டும் இயக்குனர்

Updated : நவ 03, 2015 | Added : நவ 02, 2015 | கருத்துகள் (32)
Advertisement
 மோடிக்கு எதிராக போராட்டம் ஆட்களை திரட்டும் இயக்குனர்

புதுடில்லி,: பிரதமர் மோடி, அடுத்த வாரம் பிரிட்டன் செல்லும்போது, அவருக்கு எதிராக போராட்டம் நடத்த, ஹாலிவுட் பெண் இயக்குனர் லெஸ்லி உட்வின், ஆட்களை திரட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்தவர்,லெஸ்லி உட்வின், 58. ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில், 'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படத்தை இவர் வெளியிட்டார். கடந்த, 2012ல், டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து, இந்த படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியின் பேட்டியும் இந்த படத்தில் இணைக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறி, சிறைக்குள், குற்றவாளியிடம் பேட்டி எடுத்ததற்காக, இந்த படத்தை இந்தியாவில் வெளியிட, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வரும் 12ல், பிரிட்டனுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, லண்டனில் பிரிட்டன்வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில்
உரையாற்றுகிறார். அவர் பேசும் இடத்தின் அருகே, மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு, ஆட்களை திரட்டும் நடவடிக்கைகளில், லெஸ்லி உட்வின் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து, பிரிட்டனை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு, சமூக வலை தளங்கள் மூலமாக, லெஸ்லி உட்வின் அனுப்பியுள்ள தகவல்:'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படத்தை திரையிட, இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம். நம் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு இது தான் சரியான நேரம். வரும், 12ல், மோடி, லண்டனுக்கு வரும்போது, மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டும். மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போஸ்டர், பேனர்களுடன் ஏராளமானோர் திரள வேண்டும். நமக்கு குறுகிய அவகாசமே உள்ளது. அதற்குள் ஏராளமானோரை திரட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheenu Meenu - cheenai,இந்தியா
04-நவ-201500:39:02 IST Report Abuse
Cheenu Meenu மோடிக்கு வெளிநாட்டில் இந்தியர்கள் இடையே எந்த அளவு நல்ல பேரு என்பது,12ல், மோடி, லண்டனுக்கு வரும்போது தெரிந்து விடும்.
Rate this:
Share this comment
Cancel
உன்னை போல் ஒருவன் - Chennai,இந்தியா
03-நவ-201519:57:09 IST Report Abuse
உன்னை போல் ஒருவன் சம்பவம் நடந்தது காங்கிரஸ் (அதன் உனக்கு பணம் குடுத்து தூண்டி உள்ளவர்கள் ) ஆட்சியில் .... இதை படத்தில் இணைத்தால் உத்தரவு கிடைக்கும் ...
Rate this:
Share this comment
Cancel
Tamil - chennai,இந்தியா
03-நவ-201518:29:43 IST Report Abuse
Tamil இந்த பெண்ணுக்கு எவ்வளவு அதிக (பெரிய) ஈகோ. இந்திய பிரச்சனனைகளை நாங்கள் பார்த்துகொள்வோம். முதலில் உன் நாட்டில் உள்ள பிரச்சனைகளை கவனித்தால் நல்லது. உலகத்தில் எல்லா நாட்டிலும் எல்லா இடங்களிலும் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. உலகம் முழுவதும் போலி தொண்டு ஆர்வலர்களும் நிறுவனங்களும் இது போன்று பிரச்சனைகளை உண்டாக்குகிறார்கள்.
Rate this:
Share this comment
Guru - bangalore,இந்தியா
04-நவ-201500:22:50 IST Report Abuse
Guruஅன்பரே, இதுவரை தாங்கள் இதுவரை என்ன செய்தீர்கள் ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X