சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீச்சு

Added : நவ 05, 2015 | கருத்துகள் (80)
Advertisement
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீச்சு

சென்னை: சென்னையில், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீசிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகடாமியில் நேற்று, 'தி இந்து'ஆங்கில நாளிதழ் சார்பில், 'இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில், இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், என். ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று இரவு, 9:00 மணியளவில், கூட்டம் முடிந்து, எம்.கே.நாராயணன், மேடையில் இருந்து இறங்கி, அரங்கில் நடந்து வந்தபோது, வாலிபர் ஒருவர், அவர் மீது செருப்பு வீச்சு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டார். செருப்பில் ஆணி பதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ராயப்பேட்டை போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன், 35, என்பது தெரியவந்தது. ஆனால், அந்த நபர் அரங்கில் உள்ளே நுழைய, ராகவன் என்ற பெயரில் பதிவு செய்துள்ளார். அதனால், போலீசாருக்கு அந்த நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.மேலும் அந்த நபர் 'மே 17' இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்க கூடும் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சி, மே 17, தமிழர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் முற்றுகை போராட்டம் நடத்தினார். இதுதொடர்பாக, இரண்டு பெண்கள் உட்பட, 70 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somaiah Ramakrishnan - Bangalore,இந்தியா
06-நவ-201508:58:47 IST Report Abuse
Somaiah Ramakrishnan குல விரோதி நம் வீடு வாசலுக்கு வந்துவிட்டால் வாங்க என்று கூப்பிடுவதும் தண்ணீர் குடிக்கிறீர்களா என்று கேட்பதுதான் தமிழர் பண்பாடு. இப்பொழுது நடப்பதெல்லாம் கேவலம் செருப்பு வீசியவனை பாராட்டுவது அதை விட கேவலம்
Rate this:
Share this comment
Cancel
RAMKUMAR - Chennai ,இந்தியா
06-நவ-201501:00:36 IST Report Abuse
RAMKUMAR அட விடுங்கப்பா அவருக்கும் மத்திய படை பாதுகாப்பு தந்துடலாம்
Rate this:
Share this comment
Cancel
Devar - Abu Dhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
05-நவ-201523:40:16 IST Report Abuse
Devar வெறும் செருப்பு மட்டும் தானா. மலையாளி, MGR காலத்தில் தமிழ் சினிமாவில் மற்றும் தலைமை செயலகத்தை முற்றிலுமாக அபகரித்த கூட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X