பொது செய்தி

தமிழ்நாடு

'டபுள்' தீபாவளி கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்

Added : நவ 07, 2015
Share
Advertisement
 'டபுள்' தீபாவளி கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்


* வரும் பொங்கலுக்கு, சசிகுமார் நடித்த, தாரை தப்பட்டைட, சூர்யா நடித்த, 24, சுந்தர்.சி இயக்கிய, அரண்மனை - 2 போன்ற படங்கள் வெளியாகின்றன. இவற்றுடன், நடிகர் விஷால் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கிய, கதகளி படமும் வெளியாக உள்ளது.
* எந்திரன் - 2 படத்திற்காக, 'ஹாலிவுட்' நடிகர் அர்னால்டுடன் பேச்சு நடத்த, ரஜினி, இயக்குனர் ஷங்கர் மற்றும் படத்தயாரிப்பு குழுவினர், நவ., 26ல் அமெரிக்கா செல்கின்றனர்.
நான்கு நாட்கள் அமெரிக்காவில் தங்கும் அவர்கள், எந்திரன் - -2 படத்தின், 'கிராபிக்ஸ்' பணிகள் நடைபெறும் ஸ்டூடியோ மற்றும் 'போட்டோ ஷூட்'டை பார்வையிடுகின்றனர்.
டிச., 1ல், மலேஷியா திரும்பும் ரஜினி, மீண்டும், கபாலி படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இந்த ஆண்டு தீபாவளியை, ரஜினி மலேஷியாவில் கொண்டாடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
* நடிகர் ஜெய், சுரபி, கருணாஸ் நடிக்க, மணிமாறன் இயக்கும், புகழ் படம், அரசியல் பின்னணி உடையது என, இயக்குனர் தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகளை, நண்பர்கள் துணையுடன் எதிர்த்து வெற்றி பெறும் இளைஞனாக ஜெய் நடிக்கிறார். இந்தப் படம், பொங்கல் அல்லது கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகலாம்
என, எதிர்பார்க்கப்படுகிறது.
* அஜித்தின் ரசிகர்மன்றங்கள் கலைக்கப்பட்டாலும், அவைதன்னிச்சையாக இயங்கி வருகின்றன. தீபாவளிக்கு, அஜித்தின் வேதாளம் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, ரஜினி, கமல், விஜய்க்கு அடுத்த
படியாக அஜித்துக்கு, 120 அடி உயர, 'கட் - அவுட்' வைக்க உள்ளனர் அவரதுரசிகர்கள்.
* சமீப காலமாக, முன்னணி நடிகர்கள் படங்களில், 'தாராளமய' கொள்கையை கடைபிடித்து வந்த நடிகை சமந்தா, நடிகர் தனுஷுடன் நடிக்கும், வேலையில்லா பட்டதாரி - 2ல், முழுக்க முழுக்க சாந்தமாகவும், படம் முழுக்க புடவையில் தான் ரசிகர்களுக்கு காட்சி தருவாராம்.
* தொடர் தோல்விகளுக்கு, நானும் ரவுடி தான் படம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதால், நடிகர் விஜய் சேதுபதி மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளார்.
அதனால், அவர் நடித்துள்ள, இடம் பொருள் ஏவல், மெல்லிசை படங்களின் தயாரிப்பாளர்களுக்கு உற்சாகம் கிடைத்துள்ளது.
* பாபநாசம் படத்தில், மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்து அசத்திய, நடிகை ஆஷா ஷரத், அடுத்ததாக, துாங்காவனம் படத்திலும், கமலுடன் நடித்துள்ளார்.
நடனப்பள்ளி நடத்தும் ஆஷா, நடிப்பை வெளிக்காட்டும் அழுத்தமான, 'கேரக்டர்'களுக்கே முக்கியத்துவம் தருகிறார்.
அதனால், தன்னை தேடிவந்த மசாலா படங்களை எல்லாம் நிராகரித்துள்ளார் என, கூறப்படுகிறது.
*நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது. இன்று அவரது ரசிகர்கள், நற்பணி இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். இந்த ஆண்டு கமல் பிறந்த நாளை ஒட்டி,
தீபாவளியன்று, துாங்காவனம் படமும் வெளியாவதால், கமல் ரசிகர்கள், 'டபுள்'தீபாவளியை கொண்டாட முடிவெடுத்துஉள்ளனர்.
* நடிகர் கிருஷ்ணாவுடன், பண்டிகை படத்தில் நடித்து வரும், கயல் பட நாயகி ஆனந்தி, இந்த தீபாவளி பண்டிகையை, ஆந்திராவில் கொண்டாட உள்ளார். கயல், த்ரிஷா இல்லைனா நயன்தாரா படங்களை தொடர்ந்து டிசம்பரில், புதிதாக, இரண்டு படங்களின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த சந்தோஷத்தில் ஆனந்தி, தீபாவளிக்கு தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை கூறிஉள்ளார்.
* இந்த ஆண்டு, குடும்பத்துடன் மும்பையில் தீபாவளியை கொண்டாட உள்ள நடிகை வேதிகா, தற்போது மலையாளத்தில், இரண்டு படங்களிலும், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன், சிவலிங்கா என்ற படத்திலும்
நடிக்கிறார்.
* வேதாளம் படத்தின் முன்னோட்டம், நேற்று முன்தினம் வெளியாகும் என, எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.எனினும், தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு, நேற்று வேதாளம் படம் விசேஷமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X