கட்டிடங்களுக்கு ஆப்பு... காட்டூர் தா கலெக்ஷன்ல டாப்பு!| Dinamalar

கட்டிடங்களுக்கு ஆப்பு... காட்டூர் தா கலெக்ஷன்ல டாப்பு!

Added : நவ 10, 2015
Share
தீபாவளிக்கு, காலை டிபனுக்கே சித்ரா வீட்டிற்கு வந்து விட்டாள் மித்ரா. ஸ்வீட், காரம், டிபன் எல்லாம் ஒரு கை பார்த்து விட்டு, இருவரும் வண்டியில் ஊர் சுற்றக்கிளம்பினார்கள். நேற்று வரை படு பரபரப்பாக இருந்த வீதிகளில், சிறுவர்கள் புத்தாடை அணிந்து, கிரிக்கெட் விளையாடிக்கொண்டும், பட்டாசு வெடித்துக் கொண்டுமிருந்தார்கள். ஒப்பணக்கார வீதியில் பறந்தது, டியோ.''மித்து! இந்த
கட்டிடங்களுக்கு ஆப்பு...  காட்டூர் தா கலெக்ஷன்ல டாப்பு!

தீபாவளிக்கு, காலை டிபனுக்கே சித்ரா வீட்டிற்கு வந்து விட்டாள் மித்ரா. ஸ்வீட், காரம், டிபன் எல்லாம் ஒரு கை பார்த்து விட்டு, இருவரும் வண்டியில் ஊர் சுற்றக்கிளம்பினார்கள். நேற்று வரை படு பரபரப்பாக இருந்த வீதிகளில், சிறுவர்கள் புத்தாடை அணிந்து, கிரிக்கெட் விளையாடிக்கொண்டும், பட்டாசு வெடித்துக் கொண்டுமிருந்தார்கள். ஒப்பணக்கார வீதியில் பறந்தது, டியோ.
''மித்து! இந்த தீபாவளிக்கு பிசினஸ் 30, 40 பர்சன்டேஜ் கம்மிங்கிறாங்க. ஆனா, வசூல் மட்டும் குறையவேயில்லை. அதுலயும், இந்த டாஸ்மாக் கடைக்காரங்க, 'பார்' நடத்துறவுங்க, கொடுத்துக் கொடுத்தே ஓஞ்சிட்டாங்க'' என்றாள் சித்ரா.
''அதான்...கொடுத்ததுக்கெல்லாம் சேர்த்து, மூணு நாள் 'சேல்ஸ்'ல ரெண்டு, மூணு மடங்கா எல்லாத்தையும் எடுத்துருவாங்களே'' என்றாள் மித்ரா.
''எடுப்பாங்க. ஆனா, எவ்ளோ பேருக்கு தான் கொடுப்பாங்க...இந்த வருஷத்துல, கலெக்டரோட ஸ்பெஷல் 'டீம்'கிற பேர்ல, எக்சைஸ் ஆபீசர்க நாலஞ்சு டீமாப் பிரிஞ்சு, கடைக்கு ஆயிரம், 'பார்'க்கு ஆயிரம்னு வசூல் பண்ணிருக்காங்க'' என்றாள் சித்ரா.
''திடீர்னு எதுக்கு 'ஸ்பெஷல் டீம்' போட்டாங்களாம்?''
''கடை, 'பார்' எல்லாம் சுத்தமா வச்சிருக்காங்களான்னு பாக்கிறதுக்காகப் போட்டதாம். இந்த 'டீம்'காரங்க வந்து பாத்துட்டு, 'என்ன இவ்ளோ மோசமா வச்சிருக்கீங்க'ன்னு கேட்டுட்டு, காசை வாங்கிட்டுப் போயிட்டாங்களாம்''
''சுத்தம்...ஏற்கனவே, இந்த வருஷம், லோக்கல் போலீசு, பிஐடபிள்யு, உளவுத்துறை, டாஸ்மாக் ஆபீசர்கள்னு ஒவ்வொரு டீமும் இதே மாதிரி ரெண்டாயிரம் ரூபா வசூல் பண்ணிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்''
''இவுங்க மட்டுமா...'பிரஸ்'ங்கிற பேர்லயும் மிரட்டி, காசு வாங்கிட்டுப் போயிருக்காங்க. டாஸ்மாக் கடைக்காரங்க, 'எல்லாருக்கும் கொடுக்கணும்னா, சரக்கு வித்தாப் போதாது. சாராயம் தான் விக்கணும்'னு புலம்புறாங்க''
''புலம்பல்ன்னா எனக்கு சுந்தரத்தெலுங்குல இப்போ 'வாட்ஸ் ஆப்'ல பரவுன புலம்பல் தான், ஞாபகத்துக்கு வருது. ஐ.டி., ரெய்டு நடந்த செயின்கடைக்காரங்ககிட்ட, ஆளும்கட்சி புள்ளியும், குண்டான குமாரு ஒருத்தரும் 50 லட்ச ரூபா புடுங்கி, 'பங்கு' போட்டதாப் பேசுனோமே'' என்றாள் மித்ரா.
''நான் அப்பவே கேக்கணும்னு நினைச்சேன். இவரு...நம்ம ரோசமான 101 வது வார்டு கவுன்சிலருக்கு நெருக்கமானவர்ன்னு சொல்லுவாங்களே. அந்த குமாரா?'' என்று சந்தேகம் கிளப்பினாள் சித்ரா.
''இல்லக்கா...இவரு வேற குமாரு. இந்த கலெக்ஷன் தகவல் பரவுனதும், இவருக்கு பீபி, சுகர் எல்லாம் எகிறிப்போய், ஹாஸ்பிடல்ல படுத்துட்டாராம். மறுநாள், 'மன லோன வெய் உண்டேன்னு, வெலப்பட்ல இட்ல மாட்லாடேரேன்னா, இதி எந்தா பாக உந்தினா' (நமக்குள்ள ஆயிரம் இருந்தாலும், இப்பிடியெல்லாம் வெளியில பேசலாமா?)'ன்னு 'மாட்லாடி', நகைக்கடைக்காரங்களுக்கு 'வாட்ஸ் ஆப்'ல அனுப்பிருக்காரு'' என்றாள் மித்ரா.
''மித்து...வீணாப் போன எலுமிச்சம் பழத்துல பல பேருக்கு ஜூஸ் போட்ருக்கலாம்'' என்று புதிர் போட்டாள் சித்ரா.
''இந்த மழையில ஜூஸா...என்னக்கா மேட்டரு?'' என்றாள் மித்ரா.
''புது போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், 'சார்ஜ்' எடுத்த அன்னிக்கு, அவரைப் பாக்கிறதுக்காக, போலீஸ் ஆபீசர்ங்க, எலுமிச்சம் பழத்தோட போயிருக்காங்க. ஆனா, அவரு...மீசைய முறுக்கி விட்டுட்டு, 'கை கொடுத்துட்டுப் போங்க. பழமெல்லாம் வேண்டாம்'னு திருப்பி அனுப்பிட்டாராம்'' என்றாள் சித்ரா.
''சூப்பரப்பு...வேற என்ன சொன்னாராம்?''
''வந்தவுடனே, 'டிராபிக்' பிரச்னையப்பத்தித் தான், அவர்ட்ட ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' சொல்லிருக்காங்க. கடுப்பாகி, டிராபிக் ஆபீசர்க, ஏ.சி., எல்லாரையும் கூப்பிட்டு, 'என்னய்யா வேலை பாக்குறீங்க'ன்னு 'வாங்கு வாங்கு'ன்னு செமையா வாங்கிருக்காரு''
''இதுவரைக்கும் இவுங்க ரெண்டு கையிலயும் 'வாங்கிக்கிட்டே' இருந்தாங்கள்ல. இனிமே, காதுல 'வாங்க' வேண்டியது தான்''
''இவுங்க மட்டுமா...சிட்டியில சில இன்ஸ்பெக்டர்க வாங்குறதைப் பத்திக் கேட்டா தலையே வீங்கிரும்'' என்றாள் சித்ரா.
''கரெக்ட்க்கா...அதுலயும் காட்டூர் போலீஸ் ஆபீசர் தான், கட்டப்பஞ்சாயத்து, கலெக்ஷன்னு சுறுசுறுப்பா 'ரேஸ்'ல முதல்ல இருக்காராம். லேட்டஸ்ட்டா, பெரிய பெரிய 'ப்ராப்பர்'டிகளை கை வைக்கிறாராம். ஒரு 'டீல்' முடிக்க, பத்து, பதினைஞ்சு லட்சம் கேக்குறாராமே'' என்றாள் மித்ரா.
''நம்மூருக்கு போலீஸ் ஆபீசரா வர்றவுங்க பல பேரு, 'ப்ராப்பர்ட்டி மேட்டர்'கள்ல தான், சத்தமில்லாம வலுவா சம்பாதிச்சு 'செட்டில்' ஆயிர்றாங்க'' என்றாள் சித்ரா.
''ஆனா, இப்ப வந்திருக்கிற லேடி போலீஸ் ஆபீசர்க, கொஞ்சம் சத்தம் போட்டுப் பேசுனாலே, மயக்கம் போட்டு விழுந்துர்ற மாதிரி இருக்காங்க'' என்றாள் மித்ரா.
''அப்டியில்லை மித்து...சில பேரு பார்க்க 'மலர்' மாதிரி மவுனமா இருப்பாங்க. ஆனா, சம்பாதிக்கிறதுல, 'விழி'ப்பா இருப்பாங்க. வருவாய்த்துறையில இருக்கிற ஒரு லேடி ஆபீசரு, எம்.எல்.ஏ., ஒருத்தருக்கு ஏதோ 'லேண்ட்' விவகாரத்துல, பெருசா உதவி பண்ணிருக்காங்க. அதுக்கு ஈடா, ஒரு பெரிய 'ப்ராப்பர்ட்டி'யை, அந்த லேடி ஆபீசர் குடும்பத்தோட பேருக்கு எழுதிக் கொடுத்திருக்கிறதா தகவல்'' என்றாள் சித்ரா.
''எம்.எல்.ஏ.,ன்னதும், தலையில தட்டுற எம்.எல்.ஏ., ஞாபகம் வந்துச்சு. கோயம்புத்துார்ல கவர்மென்ட்டு பஸ் டிரைவரு, கண்டக்டர்களுக்கு 'அரியர்ஸ்' போட்டப்போ, பெரிய ஆபீசரைக் கூப்பிட்டு, 'ஒவ்வொரு ஆள்ட்டயும் அமவுண்ட்டுக்குத் தகுந்தது மாதிரி, ரெண்டாயிரத்துலயிருந்து அஞ்சாயிரம் வரை பிடிச்சு, தேர்தல் நிதியா கொடுங்க'ன்னு சொல்லிருக்காரு'' என்றாள் மித்ரா.
''தலையில தட்டிச் சொன்னாரா?' என்று சிரித்தாள் சித்ரா.
''அவரு எப்பிடிச் சொன்னாரோ...ஆனா, அந்த ஆபீசரு, 'இதெல்லாம் என் வேலையில்லை. நீங்களே வசூல் பண்ணிக்கோங்க'ன்னு நெத்தியடியா சொல்லிட்டாராம்'' என்றாள் மித்ரா.
''வசூல்ன்னு சொல்லி, ஞாபகப்படுத்துன...க.க.சாவடி செக்போஸ்ட்ல, கேரளா போற வண்டிகள்ல வண்டிக்கு பத்தாயிரம்னு தீபாவளி வசூல் பண்ணிருக்காங்க. கேட்டதுக்கு, 'எங்க ஆர்டிஓ 20 லட்ச ரூபா, எங்களுக்கு 'டார்கெட்' வச்சிருக்காரு. வேற வழியில்லை'ன்னு
சொல்லிருக்காங்க''
''ஓ...அவரா...பெத்தவுங்க தமிழ்ல வச்ச பேரை 'இங்கிலீஷ்'ல காப்பாத்துறாரோ?''
''செக்போஸ்ட்கள்ல லாரிக்காரங்கள்ட்ட புடுங்குன காசுல, 'பிரஸ்'ங்கிற பேருல 55 பேரு, காசு வாங்கிருக்காங்க. சென்ட்ரல் ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல, தீபாவளிக்குக் காசு வாங்குனவுங்கன்னு, 56 பத்திரிகைக்காரங்க பேரை எழுதி வச்சிருக்காங்க'' என்றாள் சித்ரா.
''எல்லாருக்கும் கிடைச்சிருக்கு. ஆனா, ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கு இந்த வருஷமும், தீபாவளி போனஸ் கிடைக்கலை...கோடநாட்டுல 'அம்மா' இருக்கிறப்பவே, குமுறிட்டு இருந்தாங்க. அவுங்க கிளம்புன பிறகு, குமுறல் கொந்தளிப்பாயிருக்கு....'அதான் கட்டிடங்கள்ல மானாவாரியா வாங்குறாங்கள்ல, எங்களுக்கும் தரலாம்ல'ன்னு புலம்புறாங்க''
''கேக்குறதுல 'லாஜிக்' இருக்குடி...சிட்டிக்குள்ள அப்பார்ட்மென்ட், பெரிய கட்டடங்க கட்டுறதுன்னா, மூணு பேரை கவனிக்க வேண்டியிருக்காம். மாண்புமிகு டாக்டர், கொடுக்கிறதை வாங்கிக்குவாராம். ஆபீசர்க ரெண்டு பேரும், 'சதுர அடி' கணக்குப் பாத்து வாங்குறாங்களாம்'' என்றாள் சித்ரா.
''அப்பிடின்னா, கவுன்சிலர்க புலம்புலறதுல தப்பேயில்லை'' என்றாள் மித்ரா.
''அக்கா...ஒட்டு மொத்தமாப் பார்த்தா, நம்ம ஊருக்கு 'வசூல் நகரம்'னு பேரே வைக்கலாம் போல...தீபாவளிக்கு, சிட்டியில இருக்கிற ஸ்வீட் கடைகள்ல எல்லாம், கடை சைசுக்குத் தகுந்தது மாதிரி, 'கலெக்ஷன்' பண்ணிருக்காரு, 'கானா' ஆபீசர்'' என்றாள் மித்ரா.
அதைக் காதில் வாங்காத சித்ரா, 'கதிரவனைப் பார்த்து காலை விடும் துாது' என்று பாடினாள். வண்டி, வ.உ.சி., மைதானத்தை வட்டமடித்து நின்றது.
''அக்கா! எம்ஜிஆர் மன்றத்துல இருக்குற ஒரு கான்ட்ராக்டர் தான், இங்க அடிக்கடி 'எக்ஸிபிஷன்' நடத்திட்டு இருந்தாருல்ல...இப்போ, அதே மன்றத்துல இருக்கிற இன்னொருத்தரு, முக்கியப் பொறுப்புல இருக்குற ரெண்டு பேருக்கு, 40 ப்ளஸ் 10ன்னு 50 லட்சத்தைக் கொடுத்து, வ.உ.சி., கிரவுண்டை வளைச்சுட்டாராம்'' என்றாள் மித்ரா.
''எப்பிடியோ, இந்த கவர்மென்ட் வந்ததுல இருந்து, கோவை மக்கள் 'ரிலாக்ஸ்' பண்றதுக்கு இருந்த ஒரு இடமும் கலெக்ஷன் கிரவுண்டாயிருச்சு'' என்றாள் சித்ரா.
மைதானத்தில் வெடி போட்டுக் கொண்டிருந்த சிறுவர் பட்டாளம், இவர்களிருவரையும் பார்த்து, 'ஹேப்பி தீவாளி....!' என்று கத்த, பதிலுக்கு இருவரும் கோரஸ் ஆகக் கத்தினர்... HAPPY DIWALI

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X