சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

Added : நவ 17, 2015 | கருத்துகள் (20)
Advertisement
பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

சென்னை : பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) சென்னையில் காலமானார். இவர், கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலசுப்ரமணியம். பக்திப்பாடகரான இவர் தென்னாப்ரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்த இவர், கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AGEE - chennai,இந்தியா
17-நவ-201518:14:26 IST Report Abuse
AGEE பித்துக்குளி முருகதாஸ் 1920-ம் ஆண்டும் கோவையில் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியன். இவர் தனது தாத்தா கோபாலகிருஷ்ண பாகவதரிடம் சங்கீதம் பயின்றார். 1936-ம் ஆண்டு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றபோது போலீஸார் கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அவரது இடது கண் பார்வை பறிபோனது என்பது கூடுதல் தகவல்.
Rate this:
Share this comment
Cancel
Santhanaraman Soundaram - bengaluru,இந்தியா
17-நவ-201517:09:30 IST Report Abuse
Santhanaraman Soundaram கணீரென்ற வாய்ஸ், மிகவும் அற்புதமான சாரீரம். ஒரு சிலருக்கே இப்படி அமையும். அந்த ஒரு அதிர்ஷ்டசாலி திரு. முருகதாஸ் அய்யா அவர்கள். அவருடைய பாடல்களை எவ்வளவு கேட்டாலும் அலுக்காது. கற்பூரம் போன்ற குரல். அன்னாரது ஜீவாத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
17-நவ-201516:37:47 IST Report Abuse
Rangiem N Annamalai முருகன் பாடல்கள் என்றால் இவர் பெயர் நமது நினைவுக்கு வந்து விடும் .அன்னாரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X