அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சியின், "இமேஜ்' உயர்ந்து கொண்டிருக்கிறது : துணை முதல்வர் பெருமிதம்

Added : டிச 03, 2010 | கருத்துகள் (72)
Share
Advertisement
சென்னை :""தி.மு.க., ஆட்சியின், "இமேஜ்' மக்கள் மத்தியில் உயர்ந்து கொண்டிருக்கிறது; இனியும் உயரும்,'' என துணை முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமனம், தட்டச்சர் நியமனம், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம், தையல் மற்றும் இசை ஆசிரியர்கள் நியமனம் என மொத்தம் 1,103 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா, சென்னையில்
ஆட்சியின், "இமேஜ்' உயர்ந்து கொண்டிருக்கிறது :  துணை முதல்வர் பெருமிதம்

சென்னை :""தி.மு.க., ஆட்சியின், "இமேஜ்' மக்கள் மத்தியில் உயர்ந்து கொண்டிருக்கிறது; இனியும் உயரும்,'' என துணை முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.


பள்ளிக் கல்வித்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமனம், தட்டச்சர் நியமனம், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம், தையல் மற்றும் இசை ஆசிரியர்கள் நியமனம் என மொத்தம் 1,103 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.
 
துணை முதல்வர் ஸ்டாலின், பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:கடந்த ஆட்சியில், "எஸ்மா, டெஸ்மா' சட்டம் கொண்டுவந்து, ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 782 பேர், ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அந்த அதிர்ச்சி காரணமாக 53 பேர் இறந்தனர். அரசு ஊழியர்கள் 6,062 பேர், குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், "எஸ்மா, டெஸ்மா' சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது.அனைத்து அரசுத் துறைகளிலும் இதுவரை நான்கு லட்சத்து 80 ஆயிரத்து 466 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில், பள்ளிக் கல்வித்துறையில் மட்டும் 57 ஆயிரத்து 104 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய சாதனை. இந்நிகழ்ச்சி, "இமேஜ்' அரங்கில் நடக்கிறது. இங்கு பணி நியமன உத்தரவுகளை வாங்கும் உங்களின், "இமேஜ்' இனி உயரும். உத்தரவு வழங்குவதால், எங்களின், "இமேஜும்' உயரும். ஏற்கனவே, இந்த அரசின், "இமேஜ்' உயர்ந்து கொண்டிருக்கிறது; இன்னமும் உயரும்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


பள்ளிக் கல்வித்துறை செயலர் கணேசன் (கூடுதல் பொறுப்பு), ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ராமய்யா, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி, இணை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். 


Advertisement


வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முனியாண்டி - chennai,இந்தியா
04-டிச-201023:25:57 IST Report Abuse
முனியாண்டி அடேங்கப்பா ! இமேஜ் உயர்ந்து விட்டதாம இவருக்கு ? மாமுல் , விலைவாசி, ivaigalthaan உயர்ந்துவிட்டன. அரசியல்வாதிகளின் சேமிப்பும் பல மடங்கு உயர்துவிட்டன . வேறு ஒன்றும் உயரவில்லை. எதோ சொலனமேன்னு சொல்ற்றாறு இவரு.
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
04-டிச-201022:58:28 IST Report Abuse
adalarasan இதை நீங்களே சொல்லிக்ககூடாது!மக்கள்தான் நிர்ணயிக்க வேண்டும்!ஆனால், இங்கு 99% கூறப்பட்டுள்ள கருதுகளைபார்த்தல் உங்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது!"உன்னையே நீ எண்ணிப்பார் " என்ற உங்கள் சினிமா வசனம்தான் ஞாபகம் வருது!! ஆடலரசன்.
Rate this:
Cancel
ravi - riyadh,சவுதி அரேபியா
04-டிச-201022:35:40 IST Report Abuse
ravi அப்படியா ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X